PAT 4.9.8

இரணியனைப் பிளந்தவன் இடம் தண்ணரங்கம்

419 உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி *
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில் *
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட *
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே.
419 uram paṟṟi iraṇiyaṉai * ukir-nutiyāl ŏl̤l̤iya mārvu uṟaikka ūṉṟi *
ciram paṟṟi muṭi iṭiyak kaṇ pituṅka * vāy alarat tĕzhittāṉ koyil **
uram pĕṟṟa malarkkamalam * ulaku al̤anta cevaṭi pol uyarntu kāṭṭa *
varampu uṟṟa katirccĕnnĕl * tāl̤cāyttut talaivaṇakkum taṇ araṅkame (8)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

419. The Thiruppadi of the lord who grasped the chest of Hiranyan, split it open with his sharp nails, pulled his hair, gouged out his eyes and made him scream is Srirangam where flourishing lotus plants grow to the sky like the divine feet of him who measured the sky and good paddy plants bend their heads worshipping his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உரம் பெற்ற செழிப்புடைய; மலர்க் கமலம் தாமரை மலர் போல்; உலகு திருவிக்கிரமனாக உலகை; அளந்த அளந்தபோது; சேவடி போல் திருவடி போல்; உயர்ந்து காட்ட உயர்ந்து காட்ட; வரம்பு உற்ற வயல் வரம்பு வரை; கதிர்ச் செந்நெல் கதிர்களையுடைய நெற்பயிர்; தாள் சாய்த்து தாள்களை நீட்டி; தலைவணக்கும் தலை வணங்கி நிற்கும்; தண் அரங்கமே குளிர்ந்த திருவரங்கம்; உரம் பற்றி வரம் பெற்ற; இரணியனை இரணியனை; உகிர் நுதியால் கூர்மையான நகங்களால்; ஒள்ளிய மார்வு அழகிய மார்பில்; உறைக்க ஊன்றி அழுத்தமாக ஊன்றி; சிரம் பற்றி தலையைப் பற்றி; முடி இடிய கிரீடம் பொடியாகும்படி; கண் பிதுங்க கண் பிதுங்க; வாய் அலர வாய் அலர; தெழித்தான் கோயில் ஆர்ப்பரிப்பவன் கோவில்
taṇ araṅkame it is Sri Rangam where; katirc cĕnnĕl the rice crops; tāl̤ cāyttu stretch; varampu uṟṟa up to the boundary of the field; talaivaṇakkum and then bow in reverence; uram pĕṟṟa like how flourishing; malark kamalam lotus plants grow; al̤anta He measured (as Thiruvikraman); ulaku the earth; cevaṭi pol with His holy feet; uyarntu kāṭṭa rising; tĕḻittāṉ koyil its the temple of the Lord; uṟaikka ūṉṟi who laid and squeezed; ŏl̤l̤iya mārvu the beautiful chest; iraṇiyaṉai of Hiranyan; uram paṟṟi who had boons; ukir nutiyāl with His sharp nails; ciram paṟṟi and grasped his head; muṭi iṭiya while the crown shattered; kaṇ pituṅka eyes bulged; vāy alara and mouth screamed