PAT 4.9.2

அடியார்மீது நம்பிக்கை கொண்டவன் அரங்கன்

413 தன்னடியார்திறத்தகத்துத் தாமரை
யாளாகிலும்சிதகுரைக்குமேல் *
என்னடியார்அதுசெய்யார் செய்தாரேல்
நன்றுசெய்தாரென்பர்போலும் *
மன்னுடையவிபீடணற்கா மதிளிலங்கைத்
திசைநோக்கிமலர்கண்வைத்த *
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே (2)
413
thannadiyār thiRaththahaththu * thāmaraiyāL āhilum sidhakuraikkumEl *
ennadiyār adhu seyyār * seydhārEl n^anRu seydhār enbar pOlum *
mannudaiya vibeeshaNaRkā * madhiL ilangai thisai n^Okki malar kaN vaiththa *
ennudaiya thiru varangaRku anRiyum * maRRoruvarkku āLāvarE? (2) 2.

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-30

Divya Desam

Simple Translation

413. Even if Lakshmi( Thāyār) complains to her beloved that His devotees do things that are wrong he answers her, “My devotees will not do wrong, and even if they do, it is for good reason. ” He graces Vibhishana from Srirangam surrounded by walls. How can the devotees think of praying to other gods?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாமரையாள் ஆகிலும் பிராட்டியாரேயாகிலும்; தன் அடியார் தனக்கு அடிமைப்பட்டவர்; திறத்தகத்து விஷயத்திலே; சிதகு அவர்கள் குற்றங்களை; உரைக்கும் சொல்லத்; ஏல் தொடங்கினாளேயாகில்; என் அடியார் என் அடியார்; அது செய்யார் அப்படி குற்றங்களை செய்ய மாட்டார்கள்; செய்தாரேல் அப்படிச் செய்தார்களேயானாலும்; நன்று செய்தார் அவை எனக்கு போக்கியங்களே; என்பர் போலும் என்று சொல்பவர் போலும்; மன் உடைய செல்வம் மாறாத; விபீடணற்கா விபீஷணனனுக்காக; மதிள் இலங்கை மதிள்களையுடைய இலங்கை; திசைநோக்கி முகமாக நோக்கி; மலர்க்கண் மலர் கண்களால் பார்த்தபடி சயனித்துள்ளார்; என்னுடைய திருவரங்கற்கு என்னுடைய அரங்கற்கு; அன்றியும் அல்லால்; மற்று ஒருவர்க்கு வேறு ஒருவருக்கு; ஆள் ஆவரே? அடிமை செய்யலாகுமோ?