PAT 4.9.10

திருவாளன் கண்வளரும் இடம் திருவரங்கம்

421 செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் * மறையாளன்ஓடாத
படையாளன் விழுக்கையாளன் *
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன் *
திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்
வளர்கின்றதிருவரங்கமே. (2)
421 cĕru āl̤um pul̤l̤āl̤aṉ maṇṇāl̤aṉ * cĕruccĕyyum nāntakam ĕṉṉum *
ŏru vāl̤aṉ maṟaiyāl̤aṉ oṭāta paṭaiyāl̤aṉ * vizhukkai yāl̤aṉ **
iravu āl̤aṉ pakalāl̤aṉ ĕṉṉaiyāl̤aṉ * ezhu ulakap pĕrum puravāl̤aṉ *
tiruvāl̤aṉ iṉitākat * tirukkaṇkal̤ val̤arkiṉṟa tiruvaraṅkame (10)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

421. The generous lord rides on an eagle, defeats his enemies and rules the world. As bright as the sun, he carries the sword Nāndagam, creates the Vedās and protects the world. With the goddess Lakshmi on his chest he rests sweetly on the ocean in Srirangam, his Thiruppadi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செரு ஆளும் தானே போரிட வல்லவனும்; புள்ளாளன் கருடபிரானை ஆள்பவனும்; மண்ணாளன் இந்த பூமியை ஆள்பவனும்; செருச் செயும் யுத்தமிடும் திறனையுடைய; நாந்தகம் என்னும் நாந்தகம் என்னும்; ஒருவாளன் வாளை உடையவனும்; மறையாளன் வேத பிரானும்; ஓடாத தோற்று ஓடாத; படையாளன் படையுடைவனும்; விழுக்கையாளன் கொடையாளனும்; இரவாளன் இரவு பகலாகிய; பகலாளன் காலங்களானவனும்; என்னையாளன் என்னை ஆள்பவனும்; ஏழு உலக ஏழுலகையும்; பெரும் புரவாளன் உன்னதமாகக் காப்பவனும்; திருவாளன் திருமகளின் நாயகனுமான பெருமான்; இனிதாக உள்ளத்தில் உகப்போடு; திருக் கண்கள் வளர்கின்ற துயில் அமரும் ஊர்; திருவரங்கமே திருவரங்க நகரமே
tiruvaraṅkame It is Sri Rangam; tiruk kaṇkal̤ val̤arkiṉṟa where resides; iṉitāka with great happiness; tiruvāl̤aṉ the Lord of Sri Mahalakshmi; pĕrum puravāl̤aṉ who protects; eḻu ulaka the seven worlds; pul̤l̤āl̤aṉ He is the Lord of Garuda; cĕru āl̤um and the One who can fight; maṇṇāl̤aṉ the Ruler of the world; cĕruc cĕyum He who possesses the ability to wage war; ŏruvāl̤aṉ He is the One with sword; nāntakam ĕṉṉum called Nandhagam; maṟaiyāl̤aṉ He is the Lord of the vedas; paṭaiyāl̤aṉ He has an army; oṭāta that doesnt flee; viḻukkaiyāl̤aṉ He is benevolent; pakalāl̤aṉ He is the time; iravāl̤aṉ like day and night; ĕṉṉaiyāl̤aṉ and He rules me