Chapter 3

Cowherd girls asking Kannan to give back their clothes - (கோழி அழைப்பதன்)

துகிலைப் பணித்தருள் எனல்
Cowherd girls asking Kannan to give back their clothes - (கோழி அழைப்பதன்)
"The cowherd women woke up early, even before the rooster crowed (at dawn). They went to the nearby pond to bathe. They thought that Krishna, who was still sleeping, wouldn't wake up before sunrise. However, Krishna had arrived there before them and hidden. He took their clothes and sat on a nearby Kurunthu tree. 'O mischievous one! O dear child of + Read more
ஆயர் பெண்கள் கோழி கூவும் முன்பே (விடியற்காலையில்) எழுந்தார்கள். நீராடுவதற்கு அருகிலுள்ள பொய்கைக்குச் சென்றனர். உறங்கும் கண்ணன் சூரியன் உதிக்கும்முன்பு எழுந்திருக்கமாட்டான் என்று நினைத்தனர். ஆனால், கண்ணன் கோபியர் வருவதற்குமுன்பே அங்கு வந்து மறைந்திருந்தான்; இவர்களது சேலைகளைக் கவர்ந்துகொண்டான்; + Read more
Verses: 524 to 533
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always with the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 3.1

524 கோழியழைப்பதன் முன்னம் குடைந்துநீராடுவான்போந்தோம் *
ஆழியஞ்செல்வனெழுந்தான் அரவணைமேல்பள்ளிகொண்டாய் *
ஏழைமையாற்றவும்பட்டோம் இனியென்றும் பொய்கைக்குவாரோம் *
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே. (2)
524 ## கோழி அழைப்பதன் முன்னம் * குடைந்து நீராடுவான் போந்தோம் *
ஆழியஞ் செல்வன் எழுந்தான் * அரவு அணைமேல் பள்ளி கொண்டாய் **
ஏழைமை ஆற்றவும் பட்டோம் * இனி என்றும் பொய்கைக்கு வாரோம் *
தோழியும் நானும் தொழுதோம் * துகிலைப் பணித்தருளாயே (1)
524 ## kozhi azhaippataṉ muṉṉam * kuṭaintu nīrāṭuvāṉ pontom *
āzhiyañ cĕlvaṉ ĕzhuntāṉ * aravu-aṇaimel pal̤l̤i kŏṇṭāy **
ezhaimai āṟṟavum paṭṭom * iṉi ĕṉṟum pŏykaikku vārom *
tozhiyum nāṉum tŏzhutom * tukilaip paṇittarul̤āye (1)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

524. We got up in the morning before the rooster crowed and came to bathe, plunging into the water. Our beloved sun god rises coming on his chariot. O! You rest on a snake bed! You give us a lot of trouble. We won’t come to the pond from now on. I and my friends worship you. Give us our clothes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அரவு பாம்பு; அணைமேல் படுக்கையில்; பள்ளி கொண்டாய்! படுத்திருப்பவனே!; நீராடுவான் குளத்தில் இறங்கி; குடைந்து மூழ்கி நீராடுவதற்காக; கோழி கோழி; அழைப்பதன் கூவுவதற்கு; முன்னம் முன்பு; போந்தோம் இங்கு வந்தோம்; ஆழியஞ் ஒற்றைச்சக்கர; செல்வன் தேருடைய சூரியன்; எழுந்தான் உதித்தான்; ஆற்றவும் மிகவும்; ஏழைமை பட்டோம் துன்பப்பட்டோம்; இனி ஒன்றும் இனிமேல் என்றைக்கும்; பொய்கைக்கு பொய்கைக்கு; வாரோம் வரமாட்டோம்; தோழியும் தோழியும்; நானும் நானுமாக உன்னை; தொழுதோம் வணங்குகிறோம்; துகிலை எங்களுடைய சேலைகளை; பணித்தருளாயே தந்தருளவேண்டும்
pal̤l̤i kŏṇṭāy! the One who rests; aṇaimel on the bed of; aravu a snake; kuṭaintu to take bath; nīrāṭuvāṉ we step into the pond; pontom we came here; muṉṉam before; koḻi the rooster; aḻaippataṉ crows; cĕlvaṉ suriyan with his chariot that is; āḻiyañ single-wheeled; ĕḻuntāṉ has already risen; eḻaimai paṭṭom we suffered; āṟṟavum a lot; iṉi ŏṉṟum from now on; vārom we will not come; pŏykaikku to the pond; nāṉum I; toḻiyum along with my friends; tŏḻutom pray to You; paṇittarul̤āye please give back; tukilai our clothes

NAT 3.2

525 இதுவென் புகுந்ததிங்கந்தோ! இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்? *
மதுவின்துழாய்முடிமாலே! மாயனே! எங்களமுதே? *
விதியின்மையாலது மாட்டோம் வித்தகப்பிள்ளாய்! விரையேல் *
குதிகொண் டரவில்நடித்தாய்! குருந்திடைக்கூறைபணியாய்.
525 இது என் புகுந்தது இங்கு? அந்தோ! * இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்? *
மதுவின் துழாய் முடி மாலே! * மாயனே எங்கள் அமுதே *
விதி இன்மையால் அது மாட்டோம் * வித்தகப் பிள்ளாய்! விரையேல் *
குதிகொண்டு அரவில் நடித்தாய் * குருந்திடைக் கூறை பணியாய் (2)
525 itu ĕṉ pukuntatu iṅku? anto! * ip pŏykaikku ĕvvāṟu vantāy? *
matuviṉ tuzhāy muṭi māle! * māyaṉe ĕṅkal̤ amute *
viti iṉmaiyāl atu māṭṭom * vittakap pil̤l̤āy! viraiyel *
kutikŏṇṭu aravil naṭittāy * kuruntiṭaik kūṟai paṇiyāy (2)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

525. Why did you come here, dear one, how did you come to this pond? You, the Māyan, as sweet as nectar, are adorned with a thulasi garland dripping with honey. O, clever one! We are not destined to be with you. Don’t take our clothes like this. You who danced on the snake Kālingan, give us back the clothes you put on the kurundam tree.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அந்தோ! நீ; இங்கு புகுந்தது இங்கே வந்ததற்கு; இது என்? காரணமென்ன?; இப் பொய்கைக்கு இக்குளத்திற்கு; எவ்வாறு எவ்வழியாலே; வந்தாய்? வந்தாய்?; மதுவின் துழாய் இனிய துளசி; முடி மாலே! மாலை சூடியவனே!; மாயனே! மாயனே!; எங்கள் எங்களுக்கு; அமுதே! அமிர்தம் போன்றவனே!; விதி அனுமதி; இன்மையால் இன்மையால்; அது சேர்ந்து இருக்க; மாட்டோம் சம்மதியோம்; வித்தகப் பிள்ளாய்! சாமர்த்தியக்காரனே!; விரையேல் அவசரப்படாதே!; குதிகொண்டு குதித்துக் கொண்டு; அரவில் காளிங்க நாகம் மீது; நடித்தாய்! நடனமாடினாய்!; குருந்திடை குருந்தமரத்தில்; கூறை வைத்துள்ள சேலைகளை; பணியாய் தந்திடுவாய்
itu ĕṉ? whats the reason?; anto! for You; iṅku pukuntatu to to have come here; ĕvvāṟu in which way; ip pŏykaikku to the pond; vantāy? You came?; muṭi māle! the One adorned with; matuviṉ tuḻāy tulsi garland; māyaṉe! o Mysterious One!; amute! You are the nectar; ĕṅkal̤ for us; māṭṭom we did not agree; atu to be with You; iṉmaiyāl without; viti permission; vittakap pil̤l̤āy! o Clever One!; viraiyel dont be hasty; kutikŏṇṭu You leapt; naṭittāy! and danced on; aravil the serpent Kaliya; paṇiyāy please give back; kūṟai our clothes that are on; kuruntiṭai the kurundam tree

NAT 3.3

526 எல்லே! ஈதென்னஇளமை? எம்மனைமார்காணிலொட்டார் *
பொல்லாங்கீதென்றுகருதாய் பூங்குருந்தேறியிருத்தி *
வில்லாலிலங்கை யழித்தாய்! நீ வேண்டியதெல்லாம்தருவோம் *
பல்லாருங்காணாமேபோவோம் பட்டைப்பணித்தருளாயே.
526 எல்லே ஈது என்ன இளமை? * எம் அனைமார் காணில் ஒட்டார் *
பொல்லாங்கு ஈது என்று கருதாய் * பூங்குருந்து ஏறி இருத்தி **
வில்லால் இலங்கை அழித்தாய் * நீ வேண்டியது எல்லாம் தருவோம் *
பல்லாரும் காணாமே போவோம் * பட்டைப் பணித்தருளாயே (3)
526 ĕlle ītu ĕṉṉa il̤amai? * ĕm aṉaimār kāṇil ŏṭṭār *
pŏllāṅku ītu ĕṉṟu karutāy * pūṅkuruntu eṟi irutti **
villāl ilaṅkai azhittāy * nī veṇṭiyatu ĕllām taruvom *
pallārum kāṇāme povom * paṭṭaip paṇittarul̤āye (3)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

526. It is early morning. What is this childishness? If my relatives see this, they won’t like it, but you don’t think what you do is naughty. You sit on the kurundam tree and we can’t reach you. We will give you whatever you want. Give us back our clothes. We will go away and no one will see your mischief. O god you destroyed Lankā with your bow,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வில்லால் வில்லால்; இலங்கை! இலங்கையை; அழித்தாய் அழித்தாய்!; எல்லே! ஈது என்ன இது என்ன; இளமை? சிறுபிள்ளைத்தனம்?; எம் அனைமார் எங்களுடைய தாய்மார்கள்; காணில் கண்டால் எங்களை வீட்டுக்கு; ஒட்டார் வரவிடமாட்டார்கள்; பொல்லாங்கு ஆடைகளைப் பறித்தது தவறு; ஈது என்று கருதாய் என்று கருதாமல்; பூங்குருந்து குருந்த மரத்தின்; ஏறி இருத்தி மேல் ஏறி; நிற்கிறாயே இருக்கிறாயே!; வேண்டியது நீ விரும்புவதை; எல்லாம் எல்லாம்; தருவோம் தருவோம்; பல்லாரும் ஒருவர்; காணாமே கண்ணிலும் படாமல்; போவோம் போவோம்; எங்கள் எங்களுடைய; பட்டை ஆடைகளை; பணித்தருளாயே தந்தருள்வாய்
villāl with Your bow; aḻittāy You destroyed!; ilaṅkai! Sri Lanka; ĕlle! ītu ĕṉṉa what is this; il̤amai? childishness?; ĕm aṉaimār our mothers; ŏṭṭār will not let us return; kāṇil home, if they see us; ītu ĕṉṟu karutāy without thinking; pŏllāṅku that its wrong to grab the clothes; niṟkiṟāye You; eṟi irutti are stitting atop; pūṅkuruntu the kurundam tree; taruvom we will give; ĕllām whatever; veṇṭiyatu You want; povom we will leave; kāṇāme without being seen by; pallārum anyone; paṇittarul̤āye please give back; ĕṅkal̤ our; paṭṭai clothes

NAT 3.4

527 பரக்கவிழித்தெங்கும்நோக்கிப் பலர்குடைந்தாடுஞ்சுனையில் *
அரக்கநில்லாகண்ணநீர்கள் அலமருகின்றவாபாராய் *
இரக்கமேலொன்றுமிலாதாய்! இலங்கையழித்தபிரானே *
குரக்கரசாவதறிந்தோம் குருந்திடைக்கூறைபணியாய்.
527 பரக்க விழித்து எங்கும் நோக்கிப் * பலர் குடைந்து ஆடும் சுனையில் *
அரக்க நில்லா கண்ண நீர்கள் * அலமருகின்றவா பாராய் **
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்! * இலங்கை அழித்த பிரானே *
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் * குருந்திடைக் கூறை பணியாய் (4) **
527 parakka vizhittu ĕṅkum nokkip * palar kuṭaintu āṭum cuṉaiyil *
arakka nillā kaṇṇa nīrkal̤ * alamarukiṉṟavā pārāy **
irakkamel ŏṉṟum ilātāy! * ilaṅkai azhitta pirāṉe *
kurakku-aracu āvatu aṟintom * kuruntiṭaik kūṟai paṇiyāy (4) **

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

527. O God who destroyed Lankā! Your eyes are wide open and you look everywhere. Can't you see the tears that flood our eyes, as we still stay inside the deep waters? Don't you have mercy? We wonder if you are the king of monkeys. Give us back the clothes you put on the kurundam tree.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
இலங்கை இலங்கையை; அழித்த பிரானே! அழித்தவனே!; பலர் பலர்; குடைந்து ஆடும் மூழ்கி நீராடும்; சுனையில் பொய்கையில்; கண்ண கண்ணீர்; நீர்கள் தாரைகள்; அரக்க அடக்கினாலும்; நில்லா நிற்காமல்; அலமருகின்றவா தளும்புவதை; எங்கும் நோக்கி நீ எல்லா பக்கமும்; பரக்க நன்றாக; விழித்து விழித்துப் பார்த்தும்; இரக்கமேல் இரக்கம்; ஒன்றும் துளியும்; இலாதாய்! இல்லாதவனே!; குரக்கு குரங்குகளுக்கு நீ; அரசு ஆவது தலைவன் என்று; அறிந்தோம் அறிந்து கொண்டோம்; குருந்திடை குருந்த மரத்திலுள்ள; கூறை ஆடைகளை; பணியாய் தந்திடுவாய்
aḻitta pirāṉe! o Destroyer of; ilaṅkai Lanka!; cuṉaiyil in the pond; palar where many; kuṭaintu āṭum take a dip and bathe; arakka even if we hold back; nīrkal̤ streams of our; kaṇṇa tears; nillā it uncontrollably; alamarukiṉṟavā flows; ĕṅkum nokki even after; viḻittu seeing it; parakka clearly; ilātāy! You lack; irakkamel even a drop; ŏṉṟum of compassion; aṟintom we came to know that; aracu āvatu You are the leader of; kurakku the monkeys; paṇiyāy please give back; kūṟai our clothes; kuruntiṭai that are on the kurundam tree

NAT 3.5

528 காலைக் கதுவிடுகின்ற கயலோடுவாளைவிரவி *
வேலைப்பிடித்தென்னைமார்கள் ஓட்டிலென்னவிளையாட்டோ *
கோலச்சிற்றாடைபலவுங்கொண்டு நீயேறியிராதே *
கோலங்கரியபிரானே! குருந்திடைக்கூறைபணியாய்.
528 காலைக் கதுவிடுகின்ற * கயலொடு வாளை விரவி *
வேலைப் பிடித்து என்னைமார்கள் ஓட்டில் * என்ன விளையாட்டோ? **
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு * நீ ஏறியிராதே *
கோலம் கரிய பிரானே * குருந்திடைக் கூறை பணியாய் (5)
528 kālaik katuviṭukiṉṟa * kayalŏṭu vāl̤ai viravi *
velaip piṭittu ĕṉṉaimārkal̤ oṭṭil * ĕṉṉa vil̤aiyāṭṭo? **
kolac ciṟṟāṭai palavum kŏṇṭu * nī eṟiyirāte *
kolam kariya pirāṉe * kuruntiṭaik kūṟai paṇiyāy (5)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

528. We are in the pond and valai and kayal fish are biting our feet. Our brothers will come with spears to chase you, if they hear our voice. What game is this? O lord with a beautiful dark-colored body, don’t stay on the kurundam tree with our beautiful clothes. Give us back our silk clothes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கரிய கறுத்த; கோலம் மேனியையுடைய; பிரானே! பெம்மானே!; கயலோடு கயல் மீன்களும்; வாளை வாளை மீன்களும்; விரவி சேர்ந்து; காலை எங்கள் கால்களை; கதுவிடுகின்ற கடிக்கின்றன; என்னைமார்கள் எங்கள் தமையன்மார்கள்; வேலைப் பிடித்து வேலைப் பிடித்து; ஓட்டில் என்ன உன்னைத் துரத்திவிட்டால்; என்ன அது என்ன விபரீதமான; விளையாட்டோ விளையாட்டாக முடியும்; கோல அழகிய; சிற்றாடை சிற்றாடைகள்; பலவும் பலவும்; கொண்டு நீ எடுத்துக்கொண்டு நீ; ஏறி இராதே மரத்தில் ஏறியிராமல்; குருந்திடை மரத்தின் மேலுள்ள; கூறை சேலைகளை; பணியாய் தந்திடுவாய்
pirāṉe! o Lord!; kariya with dark colored; kolam body; kayaloṭu the kayal fish; vāl̤ai and the vaalai fish; viravi together; katuviṭukiṉṟa are biting; kālai our legs; ĕṉṉaimārkal̤ our brothers; oṭṭil ĕṉṉa if they chase You; velaip piṭittu with spears; ĕṉṉa what a disastorous; vil̤aiyāṭṭo game it would end up to be; eṟi irāte instead of climbing the tree; kŏṇṭu nī carrying; palavum several of our; kola beautiful; ciṟṟāṭai little garments; paṇiyāy please give back; kūṟai our dresses; kuruntiṭai that are on the kurundam tree

NAT 3.6

529 தடத்தவிழ்தாமரைப்பொய்கைத் தாள்களெங்காலைக்கதுவ *
விடத்தேளெறிந்தாலேபோல வேதனையாற்றவும்பட்டோம்
குடத்தையெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎங்கோவே *
படிற்றையெல்லாம்தவிர்ந்து எங்கள்பட்டைப்பணித்தருளாயே.
529 தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத் * தாள்கள் எம் காலைக் கதுவ *
விடத் தேள் எறிந்தாலே போல * வேதனை ஆற்றவும் பட்டோம் **
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் * கூத்தாட வல்ல எம் கோவே ! *
படிற்றை எல்லாம் தவிர்ந்து * எங்கள் பட்டைப் பணித்தருளாயே (6)
529 taṭattu avizh tāmaraip pŏykait * tāl̤kal̤ ĕm kālaik katuva *
viṭat tel̤ ĕṟintāle pola * vetaṉai āṟṟavum paṭṭom **
kuṭattai ĕṭuttu eṟaviṭṭuk * kūttāṭa valla ĕm kove ! *
paṭiṟṟai ĕllām tavirntu * ĕṅkal̤ paṭṭaip paṇittarul̤āye (6)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

529. The stalks of the lotus plants that bloom in the pond hurt our feet and it feels as if scorpions are biting us. We can’t bear the pain. We can’t stay in the water for a long time. You, the king, can throw pots in the sky and dance the Koothu dance. Don’t be mischievous. Give us back our silk clothes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தடத்து அவிழ் அகன்று மலர்ந்த; தாமரை தாமரைகள் உள்ள; பொய்கை குளத்தில்; தாள்கள் தாமரைத் தண்டுகள்; எம் காலை எங்கள் கால்களை; கதுவ கடிக்க; விடத் தேள் விஷத் தேள்; எறிந்தாலே போல கொட்டிது போல்; ஆற்றவும் மிகுந்த; வேதனை வேதனை; பட்டோம் அடைந்தோம்; குடத்தை குடங்களை; எடுத்து தூக்கி; ஏற விட்டுக் உயர எறிந்து; கூத்தாட குடக்கூத்தை ஆடுவதற்கு; வல்ல எம் திறமையுள்ள எங்கள்; கோவே! தலைவனே!; படிற்றை தீம்புகளை; எல்லாம் எல்லாம்; தவிர்ந்து தவிர்த்துவிட்டு; எங்கள் எங்கள்; பட்டை பட்டாடைகளை; பணித்தருளாயே தந்திடுவாய்
tāmarai the lotuses; pŏykai in the pond; taṭattu aviḻ bloom far and wide; tāl̤kal̤ the lotus stems; katuva bite; ĕm kālai our feet; paṭṭom we suffered; āṟṟavum with intense; vetaṉai pain; viṭat tel̤ like a poisonous scorpion; ĕṟintāle pola biting us; kove! our Leader!; ĕṭuttu who lifts; eṟa viṭṭuk and throw; kuṭattai the pots; valla ĕm and is skilled; kūttāṭa to perform the kudakkoothu dance; tavirntu please avoid; paṭiṟṟai Your mischiefs; ĕllām altogether; paṇittarul̤āye and hand over; ĕṅkal̤ our; paṭṭai silk garments

NAT 3.7

530 நீரிலேநின்றயர்க்கின்றோம் நீதியல்லாதனசெய்தாய் *
ஊரகம்சாலவுஞ் சேய்த்தால் ஊழியெல்லாமுணர்வானே! *
ஆர்வமுனக்கேயுடையோம் அம்மனைமார்காணிலொட்டார் *
போரவிடாயெங்கள்பட்டைப் பூங்குருந்தேறியிராதே.
530 நீரிலே நின்று அயர்க்கின்றோம் * நீதி அல்லாதன செய்தாய் *
ஊரகம் சாலவும் சேய்த்தால் * ஊழி எல்லாம் உணர்வானே **
ஆர்வம் உனக்கே உடையோம் * அம்மனைமார் காணில் ஒட்டார் *
போர விடாய் எங்கள் பட்டைப் * பூங்குருந்து ஏறியிராதே (7)
530 nīrile niṉṟu ayarkkiṉṟom * nīti-allātaṉa cĕytāy *
ūrakam cālavum ceyttāl * ūzhi ĕllām uṇarvāṉe **
ārvam uṉakke uṭaiyom * ammaṉaimār kāṇil ŏṭṭār *
pora viṭāy ĕṅkal̤ paṭṭaip * pūṅkuruntu eṟiyirāte (7)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

530. We are standing in the water, tired while you are doing things you shouldn’t. O omniscient One! You know what will happen when the world ends. We really love you. Our houses are far away. If our mothers see us, they won’t like it. Drop our silk clothes down to us. Don’t sit on the top of the kurundam tree blooming with flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஊழி ஊழிகாலத்தில்; எல்லாம் எல்லாவற்றையும் காக்கும்; உணர்வானே! உணர்வுள்ளவனே!; நீரிலே நின்று ஜலத்தில் நின்று கொண்டு; அயர்க்கின்றோம் துன்பப்படுகின்றோம்; நீதி நேர்மை; அல்லாதன இல்லாதவைகளை; செய்தாய் செய்கிறாய்; ஊரகம் எம் வீடுகள் மிகவும்; சாலவும் தூரத்தில் உள்ளன; சேய்த்தால் துன்புறுத்தினாலும்; உனக்கே உன் விஷயத்திலேயே; ஆர்வம் அன்பு; உடையோம் கொண்டிருக்கின்றோம்; அம்மனைமார் எம் தாய்மார்கள்; காணில் கண்டால்; ஒட்டார் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; எங்கள் எங்கள்; பட்டை பட்டாடைகளை; போர விடாய் தந்துவிடு; பூங்குருந்து குருந்த மரத்தின் மீது; ஏறி இராதே ஏறி இருக்காதே!
uṇarvāṉe! O compassionate One!; ĕllām who protects everything; ūḻi at the end of time; ayarkkiṉṟom we are suffering; nīrile niṉṟu standing in the water; cĕytāy You are doing; allātaṉa things that are not; nīti righteous; ūrakam our homes are very; cālavum far away; ceyttāl even though You trouble us; uṭaiyom we still hold; ārvam our love; uṉakke only for You; ammaṉaimār our mothers; kāṇil if they see; ŏṭṭār they won’t approve; pora viṭāy please return; ĕṅkal̤ our; paṭṭai silk garments; eṟi irāte and don't remain!; pūṅkuruntu atop the kurundam tree

NAT 3.8

531 மாமிமார்மக்களேயல்லோம் மற்றுமிங்கெல்லாரும்போந்தார் *
தூமலர்க்கண்கள்வளரத் தொல்லையிராத்துயில்வானே *
சேமமேலன்றிதுசாலச் சிக்கெனநாமிதுசொன்னோம் *
கோமளஆயர்கொழுந்தே! குருந்திடைக்கூறைபணியாய்.
531 மாமிமார் மக்களே அல்லோம் * மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் *
தூமலர்க் கண்கள் வளரத் * தொல்லை இராத் துயில்வானே **
சேமமேல் அன்று இது சால * சிக்கென நாம் இது சொன்னோம் *
கோமள ஆயர் கொழுந்தே ! * குருந்திடைக் கூறை பணியாய் (8)
531 māmimār makkal̤e allom * maṟṟum iṅku ĕllārum pontār *
tūmalark kaṇkal̤ val̤arat * tŏllai irāt tuyilvāṉe **
cemamel aṉṟu itu cāla * cikkĕṉa nām itu cŏṉṉom *
komal̤a āyar kŏzhunte ! * kuruntiṭaik kūṟai paṇiyāy (8)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

531. All the women, the mothers-in-law and others are here bathing. We couldn’t close our beautiful flower-like eyes in the night thinking of your naughty acts. This isn’t good for us. We are telling you about all the troubles you cause. You are the beautiful jewel-like son of the cowherd village. Give us the clothes back that you put on the kurundam tree.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தொல்லை இரா நெடுங்காலம் இரவில்; தூமலர் தூய மலர் போன்ற; கண்கள் வளர கண்களை மூடி; துயில்வானே! உறங்குபவனே!; மாமிமார் உனக்குத் தேவிமாராகும்; மக்களே உறவினர்; அல்லோம் மட்டுமல்லோம்; மற்றும் மற்ற மாமிமார்; எல்லாரும் தாய்மார் ஆகியோரும்; இங்கு இங்கு; போந்தார் வந்திருக்கின்றனர்; இது சால நீ செய்யும் தீம்பானது; சேமமே அன்று சரியானதன்று; சிக்கென நாம் நாங்கள் உறுதியாக; இது இதை; சொன்னோம் சொல்கின்றோம்; ஆயர் கோமள ஆயர்குலத்து இளம்; கொழுந்தே! கொழுந்தே!; குருந்திடை மரத்திலிருக்கும்; கூறை ஆடைகளை; பணியாய் தந்திடுவாய்
tuyilvāṉe! o Lord who sleep; tŏllai irā for a long time during the night; kaṇkal̤ val̤ara by closing eyes; tūmalar that are like pure flowers; allom not only; makkal̤e those related to You as; māmimār Your queens; iṅku are here; maṟṟum but Your mother-in-laws; ĕllārum and mothers too; pontār have also come; itu cāla what You are doing; cemame aṉṟu is not right; cŏṉṉom we say; itu this; cikkĕṉa nām firmly; āyar komal̤a o cowherd's little; kŏḻunte! Bud!; paṇiyāy please give; kūṟai our clothes; kuruntiṭai that are on the tree

NAT 3.9

532 கஞ்சன்வலைவைத்தவன்று காரிருளெல்லில்பிழைத்து *
நெஞ்சுதுக்கஞ்செய்யப்போந்தாய் நின்றஇக்கன்னியரோமை *
அஞ்சவுரப்பாள்அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும் *
வஞ்சகப் பேய்ச்சிபாலுண்ட மசிமையிலீ! கூறைதாராய்.
532 கஞ்சன் வலைவைத்த அன்று * காரிருள் எல்லில் பிழைத்து *
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் * நின்ற இக் கன்னியரோமை **
அஞ்ச உரப்பாள் அசோதை * ஆணாட விட்டிட்டு இருக்கும் *
வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட * மசிமையிலீ ! கூறை தாராய் (9)
532 kañcaṉ valaivaitta aṉṟu * kārirul̤ ĕllil pizhaittu *
nĕñcu tukkam cĕyyap pontāy * niṉṟa ik kaṉṉiyaromai **
añca urappāl̤ acotai * āṇāṭa viṭṭiṭṭu irukkum *
vañcakap peyccipāl uṇṭa * macimaiyilī ! kūṟai tārāy (9)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

532. You escaped from the trap of Kamsan and survived in the dark night when you were born. Is it because you wanted to bother us like this? Yashodā loves you so much that she doesn’t scold you even if you are naughty. She just leaves you to do whatever you want. You weren’t ashamed to drink the milk of the wicked Rakshasi Putanā. Give us back our clothes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கஞ்சன் கம்ஸன் உன்னை; வலைவைத்த அழித்திட; அன்று நினைத்த அன்று; காரிருள் மிக்க இருளையுடைய; எல்லில் இரவில் இடம் மாறி; பிழைத்து பிழைத்தாய்; நின்ற நீரில் நிற்கும் இளம்; இக்கன்னியரோமை பெண்களான; நெஞ்சு எங்கள் மனத்தில்; துக்கம் துன்பம்; செய்ய கொடுக்க; போந்தாய் வந்து பிறந்தாய்; அசோதை யசோதை; அஞ்ச நீ பயப்படும்படி; உரப்பாள் அதட்டமாட்டாள்; ஆணாட தீம்பிலே வளரும்படி; விட்டிட்டு உன்னை; இருக்கும் விட்டுவிட்டாள்; வஞ்சக வஞ்சகமாய் வந்த; பேய்ச்சி பூதனையின்; பால் பாலோடு; உண்ட உயிரையும் உண்ட; மசிமையிலீ! வெட்கம் அற்றவனே!; கூறை எங்கள் ஆடைகளை; தாராய் தந்திடுவாய்
kañcaṉ when Kamsa; aṉṟu thought of; valaivaitta destroying You; kārirul̤ on a very dark night; piḻaittu You escaped; ĕllil by moving to another place; pontāy You are born; cĕyya to cause; tukkam suffering; nĕñcu in the minds of us; ikkaṉṉiyaromai young women; niṉṟa standing in the water; acotai mother Yashoda; urappāl̤ will not scold You; añca so that You would not be afraid; irukkum she let go; viṭṭiṭṭu of You; āṇāṭa so You grew up without fear; macimaiyilī! o shameless One!; uṇṭa who drank; pāl the milk of; peycci demoness Putana; vañcaka who came deceitfully; tārāy give back; kūṟai our clothes

NAT 3.10

533 கன்னியரோடெங்கள்நம்பி கரியபிரான்விளையாட்டை *
பொன்னியல்மாடங்கள்சூழ்ந்த புதுவையர்கோன்பட்டன் கோதை *
இன்னிசையால்சொன்னமாலை ஈரைந்தும்வல்லவர் தாம்போய் *
மன்னியமாதவனோடு வைகுந்தம்புக்கிருப்பாரே. (2)
533 ## கன்னியரோடு எங்கள் நம்பி * கரிய பிரான் விளையாட்டை *
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த * புதுவையர்கோன் பட்டன் கோதை **
இன்னிசையால் சொன்ன மாலை * ஈரைந்தும் வல்லவர் தாம் போய் *
மன்னிய மாதவனோடு * வைகுந்தம் புக்கு இருப்பாரே (10)
533 ## kaṉṉiyaroṭu ĕṅkal̤ nampi * kariya pirāṉ vil̤aiyāṭṭai *
pŏṉ iyal māṭaṅkal̤ cūzhnta * putuvaiyarkoṉ paṭṭaṉ kotai **
iṉṉicaiyāl cŏṉṉa mālai * īraintum vallavar tām poy *
maṉṉiya mātavaṉoṭu * vaikuntam pukku iruppāre (10)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

533. Vishnuchithan Kodai the chief of Puduvai surrounded by golden palaces composed with beautiful music a garland of ten Tamil pāsurams describing the play of the dark lord with the young girls. If devotees learn and recite these pāsurams they will go to Vaikuntam and be with the eternal god Mādhavan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
எங்கள் நம்பி எமக்கு சுவாமியான; கரிய பிரான் கரிய நிறத்த பிரான்; கன்னியரோடு ஆயர் சிறுமியரோடே செய்த; விளையாட்டை லீலைகளைக் குறித்து; பொன் இயல் பொன் மயமான; மாடங்கள் மாடங்களால்; சூழ்ந்த சூழ்ந்த; புதுவையர் ஸ்ரீவில்லிபுத்தூர்; கோன் பெரியவரான; பட்டன் பெரியாழ்வாரின் மகளான; கோதை ஆண்டாள்; இன்னிசையால் இனிய இசையாலே; சொன்ன அருளிச்செய்த; மாலை சொல்மாலையான; ஈரைந்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லவர்தாம் ஓத வல்லவர்கள்; போய் சென்று; மன்னிய மாதவனோடு மாதவனோடு; வைகுந்தம் வைகுந்தத்தில்; புக்கு சேர்ந்து இருப்பரே
kotai Andal; paṭṭaṉ the daughter of Periazhwar; koṉ the revered elder of; putuvaiyar Sri Villiputhur; cūḻnta surrounded by; pŏṉ iyal golden; māṭaṅkal̤ mansions; cŏṉṉa gracefully rendered; iṉṉicaiyāl with sweet melody; īraintum these ten hyms made as; mālai the garland of words; vil̤aiyāṭṭai describing past times of; ĕṅkal̤ nampi my Lord; kariya pirāṉ the dark hued Krishna; kaṉṉiyaroṭu with young cowherd girls; vallavartām those who recite; poy will go; maṉṉiya mātavaṉoṭu along with Madhavan; pukku and remain in; vaikuntam Sri Vaikuntam