Chapter 2
Women asks Kannan not to destroy their sand houses - (நாமம் ஆயிரம்)
"Manmatha's time of arrival is during the month of Panguni. In anticipation of his arrival, the cowherd women decorate the streets beautifully; they create rangoli designs and make small playhouses out of sand and other materials. Krishna quickly comes and tries to destroy them. The women say, 'Krishna! You come to the place where we stay. You show your face! You smile mischievously! You destroy our small houses and our hearts too! Is this fair?'"
மன்மதன் வரும் காலம் பங்குனி மாதம். அவன் வருகைக்காக ஆயர் பெண்கள் வீதிகளை அழகு மிளிரச் செய்கிறார்கள்; கோலமிடுகிறார்கள்; மணலாலும், மற்றப் பொருள்களாலும் மிகச் சிறிய விளையாட்டு வீடுகளை அமைக்கிறார்கள். கண்ணன் விரைவாக வந்து அவற்றை அழிக்க முயல்கிறான். கண்ணா! நாங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறாய். + Read more
Verses: 514 to 523
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
- NAT 2.1
514 ## நாமம் ஆயிரம் ஏத்த நின்ற * நாராயணா நரனே * உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால் * எமக்கு வாதை தவிருமே **
காமன் போதரு காலம் என்று * பங்குனி நாள் கடை பாரித்தோம் *
தீமை செய்யும் சிரீதரா ! * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (1) - NAT 2.2
515 இன்று முற்றும் முதுகு நோவ * இருந்து இழைத்த இச்சிற்றிலை *
நன்றும் கண் உற நோக்கி * நாம் கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் **
அன்று பாலகன் ஆகி * ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் ! *
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் * இரக்கம் எழாதது எம் பாவமே (2) - NAT 2.3
516 குண்டு நீர் உறை கோளரீ ! * மத யானை கோள் விடுத்தாய்! * உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் * கடைக் கண்களால் இட்டு வாதியேல் **
வண்டல் நுண் மணல் தெள்ளி * யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம் *
தெண் திரைக்கடல் பள்ளியாய் * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (3) - NAT 2.4
517 பெய்யு மா முகில்போல் வண்ணா * உன்தன் பேச்சும் செய்கையும் * எங்களை
மையல் ஏற்றி மயக்க * உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ? **
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு * உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் *
செய்ய தாமரைக் கண்ணினாய் * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (4) - NAT 2.5
518 வெள்ளை நுண் மணல் கொண்டு * சிற்றில் விசித்திரப் பட * வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் * அழித்தியாகிலும் உன் தன் மேல் **
உள்ளம் ஓடி உருகலல்லால் * உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் *
கள்ள மாதவா! கேசவா ! * உன் முகத்தன கண்கள் அல்லவே (5) - NAT 2.6
519 முற்று இலாத பிள்ளைகளோம் * முலை போந்திலாதோமை * நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு * நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் ** கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் *
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய சேவகா! * எம்மை வாதியேல் (6) - NAT 2.7
520 பேதம் நன்கு அறிவார்களோடு * இவை பேசினால் பெரிது இன் சுவை *
யாதும் ஒன்று அறியாத பிள்ளைக ளோமை * நீ நலிந்து என் பயன்? **
ஓத மா கடல்வண்ணா! * உன் மண வாட்டிமாரொடு சூழறும் *
சேது பந்தம் திருத்தினாய்! * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (7) ** - NAT 2.8
521 வட்ட வாய்ச் சிறுதூதையோடு * சிறுசுளகும் மணலும் கொண்டு *
இட்டமா விளையாடுவோங்களைச் * சிற்றில் ஈடழித்து என் பயன்? **
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் * சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய் ! *
கட்டியும் கைத்தால் இன்னாமை * அறிதியே கடல்வண்ணனே! (8) - NAT 2.9
522 முற்றத்து ஊடு புகுந்து * நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து *
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் * சிதைக்கக் கடவையோ? கோவிந்தா **
முற்ற மண்ணிடம் தாவி * விண் உற நீண்டு அளந்து கொண்டாய் * எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் * இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்? (9) - NAT 2.10
523 ## சீதை வாயமுதம் உண்டாய் * எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று *
வீதிவாய் விளையாடும் * ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை **
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் * வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் தன் *
கோதை வாய்த் தமிழ் வல்லவர் * குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே (10)