Chapter 3

Cowherd girls asking Kannan to give back their clothes - (கோழி அழைப்பதன்)

துகிலைப் பணித்தருள் எனல்
Cowherd girls asking Kannan to give back their clothes - (கோழி அழைப்பதன்)
"The cowherd women woke up early, even before the rooster crowed (at dawn). They went to the nearby pond to bathe. They thought that Krishna, who was still sleeping, wouldn't wake up before sunrise. However, Krishna had arrived there before them and hidden. He took their clothes and sat on a nearby Kurunthu tree. 'O mischievous one! O dear child of + Read more
ஆயர் பெண்கள் கோழி கூவும் முன்பே (விடியற்காலையில்) எழுந்தார்கள். நீராடுவதற்கு அருகிலுள்ள பொய்கைக்குச் சென்றனர். உறங்கும் கண்ணன் சூரியன் உதிக்கும்முன்பு எழுந்திருக்கமாட்டான் என்று நினைத்தனர். ஆனால், கண்ணன் கோபியர் வருவதற்குமுன்பே அங்கு வந்து மறைந்திருந்தான்; இவர்களது சேலைகளைக் கவர்ந்துகொண்டான்; + Read more
Verses: 524 to 533
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always with the Lord
  • NAT 3.1
    524 ## கோழி அழைப்பதன் முன்னம் * குடைந்து நீராடுவான் போந்தோம் *
    ஆழியஞ் செல்வன் எழுந்தான் * அரவு அணைமேல் பள்ளி கொண்டாய் **
    ஏழைமை ஆற்றவும் பட்டோம் * இனி என்றும் பொய்கைக்கு வாரோம் *
    தோழியும் நானும் தொழுதோம் * துகிலைப் பணித்தருளாயே (1)
  • NAT 3.2
    525 இது என் புகுந்தது இங்கு? அந்தோ! * இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்? *
    மதுவின் துழாய் முடி மாலே! * மாயனே எங்கள் அமுதே *
    விதி இன்மையால் அது மாட்டோம் * வித்தகப் பிள்ளாய்! விரையேல் *
    குதிகொண்டு அரவில் நடித்தாய் * குருந்திடைக் கூறை பணியாய் (2)
  • NAT 3.3
    526 எல்லே ஈது என்ன இளமை? * எம் அனைமார் காணில் ஒட்டார் *
    பொல்லாங்கு ஈது என்று கருதாய் * பூங்குருந்து ஏறி இருத்தி **
    வில்லால் இலங்கை அழித்தாய் * நீ வேண்டியது எல்லாம் தருவோம் *
    பல்லாரும் காணாமே போவோம் * பட்டைப் பணித்தருளாயே (3)
  • NAT 3.4
    527 பரக்க விழித்து எங்கும் நோக்கிப் * பலர் குடைந்து ஆடும் சுனையில் *
    அரக்க நில்லா கண்ண நீர்கள் * அலமருகின்றவா பாராய் **
    இரக்கமேல் ஒன்றும் இலாதாய்! * இலங்கை அழித்த பிரானே *
    குரக்கு அரசு ஆவது அறிந்தோம் * குருந்திடைக் கூறை பணியாய் (4) **
  • NAT 3.5
    528 காலைக் கதுவிடுகின்ற * கயலொடு வாளை விரவி *
    வேலைப் பிடித்து என்னைமார்கள் ஓட்டில் * என்ன விளையாட்டோ? **
    கோலச் சிற்றாடை பலவும் கொண்டு * நீ ஏறியிராதே *
    கோலம் கரிய பிரானே * குருந்திடைக் கூறை பணியாய் (5)
  • NAT 3.6
    529 தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத் * தாள்கள் எம் காலைக் கதுவ *
    விடத் தேள் எறிந்தாலே போல * வேதனை ஆற்றவும் பட்டோம் **
    குடத்தை எடுத்து ஏறவிட்டுக் * கூத்தாட வல்ல எம் கோவே ! *
    படிற்றை எல்லாம் தவிர்ந்து * எங்கள் பட்டைப் பணித்தருளாயே (6)
  • NAT 3.7
    530 நீரிலே நின்று அயர்க்கின்றோம் * நீதி அல்லாதன செய்தாய் *
    ஊரகம் சாலவும் சேய்த்தால் * ஊழி எல்லாம் உணர்வானே **
    ஆர்வம் உனக்கே உடையோம் * அம்மனைமார் காணில் ஒட்டார் *
    போர விடாய் எங்கள் பட்டைப் * பூங்குருந்து ஏறியிராதே (7)
  • NAT 3.8
    531 மாமிமார் மக்களே அல்லோம் * மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் *
    தூமலர்க் கண்கள் வளரத் * தொல்லை இராத் துயில்வானே **
    சேமமேல் அன்று இது சால * சிக்கென நாம் இது சொன்னோம் *
    கோமள ஆயர் கொழுந்தே ! * குருந்திடைக் கூறை பணியாய் (8)
  • NAT 3.9
    532 கஞ்சன் வலைவைத்த அன்று * காரிருள் எல்லில் பிழைத்து *
    நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் * நின்ற இக் கன்னியரோமை **
    அஞ்ச உரப்பாள் அசோதை * ஆணாட விட்டிட்டு இருக்கும் *
    வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட * மசிமையிலீ ! கூறை தாராய் (9)
  • NAT 3.10
    533 ## கன்னியரோடு எங்கள் நம்பி * கரிய பிரான் விளையாட்டை *
    பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த * புதுவையர்கோன் பட்டன் கோதை **
    இன்னிசையால் சொன்ன மாலை * ஈரைந்தும் வல்லவர் தாம் போய் *
    மன்னிய மாதவனோடு * வைகுந்தம் புக்கு இருப்பாரே (10)