NAT 3.4

கண்ணீர் விடுகிறோமே! இரக்கம் இல்லையா?

527 பரக்கவிழித்தெங்கும்நோக்கிப் பலர்குடைந்தாடுஞ்சுனையில் *
அரக்கநில்லாகண்ணநீர்கள் அலமருகின்றவாபாராய் *
இரக்கமேலொன்றுமிலாதாய்! இலங்கையழித்தபிரானே *
குரக்கரசாவதறிந்தோம் குருந்திடைக்கூறைபணியாய்.
527 parakka vizhittu ĕṅkum nokkip * palar kuṭaintu āṭum cuṉaiyil *
arakka nillā kaṇṇa nīrkal̤ * alamarukiṉṟavā pārāy **
irakkamel ŏṉṟum ilātāy! * ilaṅkai azhitta pirāṉe *
kurakku-aracu āvatu aṟintom * kuruntiṭaik kūṟai paṇiyāy (4) **

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

527. O God who destroyed Lankā! Your eyes are wide open and you look everywhere. Can't you see the tears that flood our eyes, as we still stay inside the deep waters? Don't you have mercy? We wonder if you are the king of monkeys. Give us back the clothes you put on the kurundam tree.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலங்கை இலங்கையை; அழித்த பிரானே! அழித்தவனே!; பலர் பலர்; குடைந்து ஆடும் மூழ்கி நீராடும்; சுனையில் பொய்கையில்; கண்ண கண்ணீர்; நீர்கள் தாரைகள்; அரக்க அடக்கினாலும்; நில்லா நிற்காமல்; அலமருகின்றவா தளும்புவதை; எங்கும் நோக்கி நீ எல்லா பக்கமும்; பரக்க நன்றாக; விழித்து விழித்துப் பார்த்தும்; இரக்கமேல் இரக்கம்; ஒன்றும் துளியும்; இலாதாய்! இல்லாதவனே!; குரக்கு குரங்குகளுக்கு நீ; அரசு ஆவது தலைவன் என்று; அறிந்தோம் அறிந்து கொண்டோம்; குருந்திடை குருந்த மரத்திலுள்ள; கூறை ஆடைகளை; பணியாய் தந்திடுவாய்

Detailed WBW explanation

O Destroyer of Laṅkā! Numerous devotees immerse themselves in the sacred waters of this lake. Cast your gaze across the shores of this hallowed site and behold the tears streaming down our faces, despite our efforts to restrain them. O Indifferent One! It has become evident to us that you are the sovereign of monkeys, adept at scaling the lofty trees. In your mercy, bestow upon us the robes that rest upon the Kurundham trees.