Your browser does not support the audio element.
audio
2478 பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்குமழுக் குடம்பும் *
இந்நின்றநீர்மைஇனியாமுறாமை * உயிரளிப்பான்
எந்நின்றயோனியுமாய்ப்பிறந்தாய்! இமையோர்தலைவா!
மெய்நின்றுகேட்டருளாய் * அடியேன்செய்யும் விண்ணப்பமே. (2)
2479 செழுநீர்த்தடத்துக் கயல்மிளிர்ந்தாலொப்ப * சேயரிக்கண்
அழுநீர்துளும்ப அலமருகின்றன * வாழியரோ
முழுநீர்முகில்வண்ணன்கண்ணன் விண்ணாட்டவர்மூதுவராம்
தொழுநீரிணையடிக்கே * அன்புசூட்டியசூழ்குழற்கே.
2480 குழல்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் * திருவும்
நிழற்போல்வனர்கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல்? * தண்ணந்துழாய்
அழல்போலடும்சக்கரத்தண்ணல் விண்ணோர்தொழக் கடவும்
தழற்போல்சினத்த * அப்புள்ளின்பின்போனதனி நெஞ்சமே.
2481 தனிநெஞ்சம் முன்னவர்புள்ளேகவர்ந்தது * தண்ணந் துழாய்க்கு
இனிநெஞ்சம் இங்குக்கவர்வது யாமிலம் * நீநடுவே
முனிவஞ்சப்பேய்ச்சி முலைசுவைத்தான்முடிசூடுதுழாய்ப்
பனிநஞ்சமாருதமே! * எம்மதாவிபனிப்பியல்வே?
2482 பனிப்பியல்வாக உடையதண்வாடை * இக்காலமிவ்வூர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்தெரிவீசும் * அந்தண்ணந் துழாய்ப்
பனிப்புயல்சோரும்தடங்கண்ணிமாமைத் திறத்துக்கொலாம்?
பனிப்புயல்வண்ணண் * செங்கோலொருநான்று தடாவியதே.
2483 தடாவியவம்பும் முரிந்தசிலைகளும்போகவிட்டு *
கடாயினகொண்டொல்கும் வல்லியீதேனும் * அசுரர் மங்கக்
கடாவியவேகப்பறவையின்பாகன்மதனசெங்கோல்
நடாவியகூற்றங்கண்டீர் * உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே.
2484 ஞாலம்பனிப்பச்செறித்து * நன்னீரிட்டுக்கால்சிதைந்து
நீலவல்லேறுபொராநின்றவானமிது * திருமால்
கோலஞ்சுமந்துபிரிந்தார்கொடுமைகுழறுதண்பூங்
காலங்கொலோ? அறியேன் * வினையாட்டியேன் காண்கின்றவே.
2485 காண்கின்றனகளும் கேட்கின்றனகளும்காணில் * இந்நாள்
பாண்குன்றநாடர்பயில்கின்றன * இதெல்லாமறிந்தோம்
மாண்குன்றமேந்திதண்மாமலைவேங்கடத்தும்பர்நம்பும்
சேண்குன்றஞ்சென்று * பொருள்படைப்பான்கற்ற திண்ணனவே.
2486 திண்பூஞ்சுடர்நுதி நேமியஞ்செல்வர் * விண்ணாடனைய
வண்பூமணிவல்லி யாரேபிரிபவர்தாம்? * இவையோ
கண்பூங்கமலம்கருஞ்சுடராடிவெண்முத்தரும்பி
வண்பூங்குவளை * மடமான்விழிக்கின்றமாயிதழே.
2487 மாயோன் வடதிருவேங்கடநாட * வல்லிக்கொடிகாள்!
நோயோவுரைக்கிலும் கேட்கின்றிலீர்உரையீர் * நுமது
வாயோ? அதுவன்றிவல்வினையேனும்கிளியுமெள்கும்
ஆயோ? அடும்தொண்டையோ? * அறையோ! இதறிவரிதே.
2488 அரியனயாமின்றுகாண்கின்றன * கண்ணன் விண்ணனையாய்!
பெரியனகாதம் பொருட்கோ? பிரிவென * ஞாலமெய்தற்
குரியெனவொண்முத்தும்பைம்பொன்னுமேந்திஓரோ குடங்கைப்
பெரியனகெண்டைக்குலம் * இவையோவந்து பேர்கின்றவே.
2489 பேர்கின்றது மணிமாமை * பிறங்கியள்ளற்பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே * இதெல்லாமினவே
ஈர்கின்றசக்கரத்தெம்பெருமான் கண்ணன்தண்ணந்துழாய்
சார்கின்றநன்னெஞ்சினார் * தந்துபோனதனிவளமே.
2490 தனிவளர்செங்கோல்நடாவு * தழல்வாயரசவியப்
பனிவளர்செங்கோலிருள்வீற்றிருந்தது * பார்முழுதும்
துனிவளர்காதல்துழாயைத்துழாவுதண்வாடைதடிந்து
இனிவளைகாப்பவரார்? * எனையூழிகளீர்வனவே.
2491 ஈர்வனவேலுமஞ்சேலும் * உயிர்மேல்மிளிர்ந்திவையோ
பேர்வனவோவல்ல தெய்வநல்வேள்கணை * பேரொளியே
சோர்வனநீலச்சுடர்விடும்மேனியம்மான் விசும்பூர்
தேர்வன * தெய்வமன்னீரகண்ணோ? இச்செழுங்கயலே.
2492 கயலோ? நுமகண்கள்என்று களிறுவினவிநிற்றீர் *
அயலோரறியிலும் ஈதென்னவார்த்தை? * கடல்கவர்ந்த
புயலோடுலாம்கொண்டல்வண்ணன்புனவேங்கடத் தெம்மொடும்
பயலோவிலீர் * கொல்லைக்காக்கின்றநாளும்பலபலவே.
2493 பலபலவூழிகளாயிடும் * அன்றியோர்நாழிகையைப்
பலபலகூறிட்டகூறாயிடும் * கண்ணன்விண்ணனையாய்!
பலபலநாளன்பர்கூடிலும்நீங்கிலும்யாம்மெலிதும்
பலபலசூழலுடைத்து * அம்ம! வாழிஇப்பாயிருளே.
2494 இருள்விரிந்தாலன்ன * மாநீர்த்திரைகொண்டுவாழியரோ
இருள்பிரிந்தாரன்பர் தேர்வழிதூரல் * அரவணைமேல்
இருள்விரிநீலக்கருநாயிறுசுடர்கால்வதுபோல்
இருள்விரிசோதிப் * பெருமானுறையுமெறிகடலே!
2495 கடல்கொண்டெழுந்ததுவானம் * அவ்வானத்தையன்றிச் சென்று
கடல்கொண்டொழிந்தவதனாலிது * கண்ணன்மண்ணும் விண்ணும்
கடல்கொண்டெழுந்தவக்காலங்கொலோ? புயற்காலங்கொலோ?
கடல்கொண்டகண்ணீர் * அருவிசெய்யாநிற்கும் காரிகையே.
2496 காரிகையார் நிறைகாப்பவர்யாரென்று * கார்கொண்டின்னே
மாரிகையேறி அறையிடும்காலத்தும் * வாழியரோ
சாரிகைப்புள்ளர் அந்தண்ணந்துழாயிறைகூயருளார்
சேரிகையேரும் * பழியாய்விளைந்தது என்சின்மொழிக்கே.
2497 சின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம் * இந்நோயினதென்று
இன்மொழிகேட்கும் இளந்தெய்வமன்றிது * வேல! நில்நீ
என்மொழிகேண்மின்என்னம்மனைமீர்! உலகேழுமுண்டான்
சொல்மொழி * மாலயந்தண்ணந்துழாய் கொண்டு சூட்டுமினே.
2498 சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி * விண்ணோர்கள்நன்னீர்
ஆட்டி அந்தூபம்தராநிற்கவேயங்கு * ஓர்மாயையினால்
ஈட்டியவெண்ணைதொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்
கோட்டிடையாடினைகூத்து * அடலாயர்தம்கொம்பினுக்கே.
2499 கொம்பார்தழைகை சிறுநாணெறிவிலம் * வேட்டை கொண்டாட்டு
அம்பார்களிறு வினவுவதுஐயர் * புள்ளூரும்கள்வர்
தம்பாரகத்தென்றுமாடாதன தம்மிற்கூடாதன
வம்பார்வினாச்சொல்லவோ * எம்மைவைத்ததுஇவ்வான்புனத்தே.
2500 புனமோ? புனத்தயலே வழிபோகுமருவினையேன் *
மனமோ? மகளிர்! நுங்காவல்சொல்லீர் * புண்டரீகத்தங்கேழ்
வனமோரனையகண்ணான் கண்ணன்வானாடமரும் தெய்வத்
தினமோரனையீர்களாய் * இவையோநும்மியல்புகளே?
2501 இயல்வாயின வஞ்சநோய்கொண்டுலாவும் * ஓரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர்க்கண்கள்தம்மொடும் * குன்றமொன்றால்
புயல்வாயின நிரைகாத்தபுள்ளூர்திகள்ளூரும்துழாய்க்
கொயல்வாய்மலர்மேல் * மனத்தொடுஎன்னாங்கொல் எங்கோல்வளைக்கே?
2502 எங்கோல்வளைமுதலா கண்ணன்மண்ணும்விண்ணும்அளிக்கும்
செங்கோல்வளைவுவிளைவிக்கும்மால் * திறல்சேரமர்
தங்கோனுடையதங்கோனும்பரெல்லாயவர்க்கும்தங்கோன்
நங்கோனுகக்கும்துழாய் * என்செய்யாது இனி நானிலத்தே?
2503 ## நானிலம்வாய்க்கொண்டு நன்னீரறமென்றுகோது கொண்ட *
வேனிலஞ்செல்வன்சுவைத்துமிழ்பாலை * கடந்தபொன்னே!
கால்நிலந்தோய்ந்துவிண்ணோர்தொழும்கண்ணன் வெஃகாவுது அம்பூந்
தேனிளஞ்சோலையப்பாலது * எப்பாலைக்கும்சேமத்ததே.
2504 சேமம்செங்கோனருளே * செறுவாரும்நட்பாகுவரென்று
ஏமம்பெறவையஞ்சொல்லும்மெய்யே * பண்டெல்லாம் அறைகூய்
யாமங்கள்தோறெரிவீசும்நங்கண்ணனந்தண்ணந் துழாய்த்
தாமம்புனைய * அவ்வாடைஈதோவந்துதண்ணென்றதே.
2505 தண்ணந்துழாய் வளைகொள்வதுயாமிழப்போம் * நடுவே
வண்ணம்துழாவி ஓர்வாடையுலாவும் * வள்வாயலகால்
புள்நந்துழாமேபொருநீர்த்திருவரங்கா! அருளாய்
எண்ணந்துழாவுமிடத்து * உளவோபண்டு மின்னன்னவே?
2506 இன்னன்னதூதெம்மை ஆளற்றப்பட்டிரந்தாளிவளென்று *
அன்னன்னசொல்லாப் பெடையொடும் போய்வரும் * நீலமுண்ட
மின்னன்னமேனிப்பெருமானுலகில் பெண்தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொலோ? * குடிச்சீர்மையி லன்னங்களே!
2507 அன்னஞ்செல்வீரும் வண்டானஞ்செல்வீரும் தொழுதிரந்தேன் *
முன்னஞ்செல்வீர்கள் மறவேன்மினோ * கண்ணன் வைகுந்தனோடு
என்னெஞ்சினாரைக்கண்டால்என்னைச்சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல்லீரோ? * இதுவோதகவென்றிசை மின்களே!
2508 இசைமின்கள் தூதென்று இசைத்தாலிசையிலம் * என் தலைமேல்
அசைமின்களென்றால் அசையிங்கொலாம்? * அம் பொன்மாமணிகள்
திசைமின்மிளிரும்திருவேங்கடத்துவன்தாள் சிமய
மிசை * மின்மிளிரியபோவான்வழிக்கொண்ட மேகங்களே.
2509 மேகங்களோ! உரையீர் * திருமால்திருமேனியொக்கும்
யோகங்கள் உங்களுக்கெவ்வாறுபெற்றீர்? * உயிரளிப்பான்
மாகங்களெல்லாந்திரிந்துநன்னீர்கள்சுமந்து நுந்தம்
ஆகங்கள்நோவ * வருந்தும்தவமாமருள்பெற்றதே.
2510 அருளார்திருச்சக்கரத்தால் அகல்விசும்பும்நிலனும் *
இருளார்வினைகெடச் செங்கோல்நடாவுதிர் * ஈங்கோர் பெண்பால்
பொருளோவெனுமிகழ்வோ? இவற்றின் புறத்தாளென்றெண்ணோ
தெருளோம்அரவணையீர்! * இவள்மாமைசிதைக்கின்றதே.
2511 சிதைக்கின்றதாழி என்று ஆழியைச்சீறி * தன் சீறடியால்
உதைக்கின்றநாயகந்தன்னொடுமாலே! * உனதுதண்தார்
ததைக்கின்றதண்ணந்துழாயணிவானதுவேமனமாய்ப்
பதைக்கின்றமாதின்திறத்து * அறியேஞ்செயற் பாலதுவே.
2512 பால்வாய்ப்பிறைப்பிள்ளை ஒக்கலைக்கொண்டு * பகலிழந்த
மேல்பால்திசைப்பெண் புலம்புறுமாலை * உலகளந்த
மால்பால்துழாய்க்குமனமுடையார்க்குநல்கிற்றை யெல்லாம்
சோல்வான்புகுந்து * இதுவோர்பனிவாடை துழாகின்றதே.
2513 துழாநெடுஞ்சூழிருளென்று * தன்தண்தாரது, பெயரா
எழாநெடுவூழியெழுந்தவிக்காலத்தும் * ஈங்கிவளோ!
வழாநெடுந்துன்பத்தளென்றிரங்காரம்மனோ! இலங்கைக்
குழாநெடுமாடம் * இடித்தபிரானார்கொடுமைகளே!
2514 கொடுங்காற்சிலையர் நிரைகோளுழவர் * கொலையில் வெய்ய
கடுங்காலிளைஞர் துடிபடுங்கவ்வைத்து * அருவினையேன்
நெடுங்காலமும்கண்ணன்நீள்மலர்ப்பாதம்பரவிப்பெற்ற
தொடுங்காலொசியுமிடை * இளமான்சென்றசூழ் கடமே.
2515 கடமாயினகள்கழித்து * தன்கால்வன்மையால் பலநாள்
தடமாயினபுக்கு நீர்நிலைநின்றதவமிதுகொல்? *
குடமாடியிம்மண்ணும்விண்ணுங்குலுங்கவுலகளந்து
நடமாடியபெருமான் * உருவொத்தனநீலங்களே.
2516 நீலத்தடவரைமேல் புண்டரீகநெடுந்தடங்கள்
போல * பொலிந்தெமக்கெல்லாவிடத்தவும் * பொங்கு முந்நீர்
ஞாலப்பிரான்விசும்புக்கும்பிரான்மற்றும்நல்லோர்பிரான்
கோலங்கரியபிரான் * எம்பிரான் கண்ணின் கோலங்களே.
2517 கோலப்பகல்களிறொன்றுகற்புய்ய * குழாம்விரிந்த
நீலக்கங்குற்களிறெல்லாம் நிறைந்தன * நேரிழையீர்!
ஞாலப்பொன்மாதின்மணாளன்துழாய்நங்கள்சூழ்குழற்கே
ஏலப்புனைந்துஎன்னைமார் * எம்மைநோக்குவதென்று கொலோ?
2518 என்றும்புன்வாடையிதுகண்டறிதும் * இவ்வாறுவெம்மை
ஒன்றுமுருவும்சுவடும்தெரியிலம் * ஓங்கசுரர்
பொன்றும்வகைபுள்ளையூர்வானருளருளாதவிந்நாள்
மன்றில்நிறைபழிதூற்றி * நின்றென்னைவன்காற்றடுமே.
2519 வன்காற்றறைய ஒருங்கேமறிந்துகிடந்தலர்ந்த *
மென்காற்கமலத்தடம்போற்பொலிந்தன * மண்ணும் விண்ணும்
என்காற்களவின்மைகாண்மினென்பானொத்துவான் நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென்பால் * எம்பிரானதடங்கண்களே.
2520 கண்ணும்செந்தாமரை கையும்அவைஅடியோஅவையே *
வண்ணம்கரியதோர்மால்வரைபோன்று * மதிவிகற்பால்
விண்ணுங்கடந்து உம்பரப்பால்மிக்குமற்றெப்பால் யவர்க்கும்
எண்ணுமிடத்ததுவோ? * எம்பிரானதெழில்நிறமே.
2521 நியமுயர்கோலமும் பேருமுருவுமிவையிவையென்று *
அறமுயல்ஞானச்சமயிகள்பேசிலும் * அங்கங்கெல்லாம்
உறவுயர்ஞானச்சுடர்விளக்காய்நின்றதன்றி ஒன்றும்
பெறமுயன்றாரில்லையால் * எம்பிரானபெருமையையே.
2522 பெருங்கேழலார் தம்பெருங்கண்மலர்ப்புண்டரீகம் * நம்மேல்
ஒருங்கேபிறழவைத்தார் இவ்வகாலம் * ஒருவர்நம்போல்
வரும்கேழ்பவருளரே? தொல்லைவாழியம்சூழ்பிறப்பு
மருங்கேவரப்பெறுமே? * சொல்லுவாழிமடநெஞ்சமே!
2523 மடநெஞ்சமென்றும் தமதென்றும் * ஓர்கருமங்கருதி *
விடநெஞ்சையுற்றார் விடவோஅமையும் * அப்பொன்பெயரோன்
தடநெஞ்சங்கீண்டபிரானார்தமதடிக்கீழ்விடப்போய்த்
திடநெஞ்சமாய் * எம்மைநீத்தின்றுதாறும்திரிகின்றதே.
2524 திரிகின்றதுவடமாருதம் * திங்கள்வெந்தீமுகந்து
சொரிகின்றது அதுவும்அது * கண்ணன்விண்ணூர் தொழவே
சரிகின்றதுசங்கம்தண்ணந்துழாய்க்குவண்ணம்பயலை
விரிகின்றது முழுமெய்யும் * என்னாம்கொல்என் மெல்லியற்கே?
2525 மெல்லியலாக்கைக்கிருமி * குருவில்மிளிர்தந்தாங்கே
செல்லியசெல்கைத்து உலகையென்காணும் * என்னாலும் தன்னைச்
சொல்லியசூழல்திருமாலவன்கவியாதுகற்றேன்?
பல்லியின்சொல்லும் * சொல்லாகொள்வதோவுண்டு பண்டுபண்டே.
2526 பண்டும்பலபல வீங்கிருள்காண்டும் * இப்பாயிருள்போல்
கண்டுமறிவதும் கேட்பதும்யாமிலம் * காளவண்ண
வண்டுண்துழாய்ப்பெருமான்மதுசூதனன்தாமோதரன்
உண்டுமுமிழ்ந்துங்கடாய * மண்ணேரன்ன வொண்ணுதலே!
2527 ஒண்ணுதல் மாமையொளிபயவாமை * விரைந்துநந்தேர்
நண்ணுதல்வேண்டும் வலவ! கடாகின்று * தேன்நவின்ற
விண்முதல்நாயகன்நீள்முடிவெண்முத்தவாசிகைத்தாய்
மண்முதல்சேர்வுற்று * அருவிசெய்யாநிற்கும்மாமலைக்கே.
2528 மலைகொண்டுமத்தாவரவால்சுழற்றிய மாயப்பிரான் *
அலைகண்டுகொண்டவமுதம்கொள்ளாதுகடல் * பரதர்
விலைகொண்டுதந்தசங்கம்இவைவேரித்துழாய்துணையாத்
துலைகொண்டுதாயம்கிளர்ந்து * கொள்வானொத்தழைக்கின்றதே.
2529 அழைக்கும்கருங்கடல் வெண்திரைக்கைகொண்டுபோய் * அலர்வாய்
மழைக்கண்மடந்தை அரவணையேற * மண்மாதர் விண்வாய்
அழைத்துப்புலம்பிமுலைமலைமேல்நின்றும்ஆறுகளாய்
மழைக்கண்ணநீர் * திருமால்கொடியானென்று வார்கின்றதே!
2530 வாராயினமுலையாளிவள் வானோர்தலைமகனாம் *
சீராயினதெய்வநன்னோயிது * தெய்வத்தண்ணந்துழாய்த்
தாராயினும்தழையாயினும்தண்கொம்பதாயினும் கீழ்
வேராயினும் * நின்றமண்ணாயினும்கொண்டுவீசுமினே.
2531 வீசும்சிறகால்பறத்திர் * விண்ணாடுநுங்கட்கெளிது
பேசும்படியன்னபேசியும்போவது * நெய்தொடுவுண்டு
ஏசும்படியன்னசெய்யும்எம்மீசர்விண்ணோர்பிரானார்
மாசில்மலரடிக்கீழ் * எம்மைச்சேர்விக்கும்வண்டுகளே!
2532 வண்டுகளோ! வம்மின் * நீர்ப்பூநிலப்பூமரத்திலொண்பூ
உண்டுகளித்துழல்வீர்க்கு ஒன்றுரைக்கியம் * ஏனமொன்றாய்
மண்துகளாடிவைகுந்தமன்னாள்குழல்வாய்விரைபோல்
விண்டுகள்வாரும் * மலருளவோநும்வியலிடத்தே?
2533 வியலிடமுண்டபிரானார் விடுத்ததிருவருளால் *
உயலிடம்பெற்றுய்ந்தம் அஞ்சலம்தோழி! * ஓர்தண் தென்றல்வந்து
அயலிடையாருமறிந்திலர் அம்பூந்துழாயினின்தேன்
புயலுடைநீர்மையினால் * தடவிற்றுஎன் புலன்கலனே.
2534 புலக்குண்டலப் புண்டரீகத்தபோர்க்கெண்டை * வல்லியொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன * கண்ணன் கையால்
மலக்குண்டமுதஞ்சுரந்தமறிகடல்போன்றவற்றால்
கலக்குண்டநான்றுகண்டார் * எம்மையாரும்கழறலரே.
2535 கழல்தலமொன்றே நிலமுழுதாயிற்று * ஒருகழல்போய்
நிழல்தர எல்லாவிசும்பும்நிறைந்தது * நீண்டவண்டத்து
உழறலர்ஞானச்சுடர் விளக்காய்உயர்ந்தோரையில்லா
அழறலர்தாமரைக்கண்ணன் * என்னோவிங்களக்கின்றதே?
2536 அளப்பருந்தன்மைய ஊழியங்கங்குல் * அந்தண்ணந் துழாய்க்கு
உளப்பெருங்காதலின் நீளியவாயுள * ஓங்குமுந்நீர்
வளப்பெருநாடன் மதுசூதனனென்னும்வல்வினையேன்
தளப்பெருநீள்முறுவல் * செய்யவாயதடமுலையே.
2537 முலையோமுழுமுற்றும்போந்தில * மொய்பூங்குழல்குறிய
கலையோஅரையில்லை நாவோகுழறும் * கடல்மண்ணெல்லாம்
விலையோவெனமிளிருங்கண் இவள்பரமே? பெருமான்
மலையோ * திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே. (2)
2538 வாசகஞ்செய்வதுநம்பரமே? * தொல்லைவானவர்தம்
நாயகன் நாயகரெல்லாம்தொழுமவன் * ஞாலமுற்றும்
வேயகமாயினும்சோராவகை இரண்டேயடியால்
தாயவன் * ஆய்க்குலமாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.
2539 இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்பால் * எனவும்இரங்காது *
அறையோ! எனநின்றதிரும்கருங்கடல் * ஈங்கிவள்தன்
நிறையோவினியுன்திருவருளாலன்றிக் காப்பரிதால்
முறையோ? * அரவணைமேற்பள்ளிகொண்டமுகில் வண்ணனே.
2540 வண்ணஞ்சிவந்துள வானாடமரும்குளிர்விழிய *
தண்மென்கமலத்தடம்போல் பொலிந்தன * தாமிவையோ
கண்ணன் திருமால்திருமுகந்தன்னொடும்காதல் செய்தேற்கு
எண்ணம்புகுந்து * அடியேனொடுஇக்காலம்இருக்கின்றதே.
2541 இருக்கார்மொழியால் நெறியிழுக்காமை * உலகளந்த
திருத்தாளிணை நிலத்தேவர்வணங்குவர் * யாமுமவா
ஒருக்காவினையொடும்எம்மொடும் நொந்துகனியின்மையின்
கருக்காய்கடிப்பவர்போல் * திருநாமச்சொல்கற்றனமே.
2542 கற்றுப்பிணைமலர் கண்ணின் குலம்வென்று * ஓரோகருமம்
முற்றுப்பயின்று செவியொடுஉசாவி * உலகமெல்லாம்
முற்றும் விழுங்கியுமிழ்ந்தபிரானார் திருவடிக்கீழ்
உற்றுமுறாதும் * மிளிர்ந்தகண்ணாயெம்மை யுண்கின்றவே.
2543 உண்ணாதுறங்காது உணர்வுறுமெத்தனை யோகியர்க்கும் *
எண்ணாய்மிளிருமியல்வினவாம் * எரிநீர்வளிவான்
மண்ணாகியவெம்பெருமான் தனது வைகுந்தமன்னாள்
கண்ணாய் அருவினையேன் * உயிராயினகாவிகளே.
2544 காவியும்நீலமும் வேலும்கயலும்பலபலவென்று *
ஆவியின் தன்மையளவல்லபாரிப்பு * அசுரரைச்செற்ற
மாவியம்புள்வல்லமாதவன் கோவிந்தன் வேங்கடஞ்சேர்
தூவியம்பேடையன்னாள் * கண்களாயதுணைமலரே.
2545 மலர்ந்தேயொழிந்தில மாலையும்மாலைப் பொன்வாசிகையும் *
புலந்தோய்தழைப்பந்தர் தண்டுற நாற்றி * பொருகடல்சூழ்
நிலந்தாவியவெம்பெருமான்தனதுவைகுந்தமன்னாய்!
கலந்தார்வரவெதிர்கொண்டு * வன்கொன்றைகள் கார்த்தனவே.
2546 காரேற்றிருள் செகிலேற்றின் சுடருக்கு உளைந்து * வெல்வான்
போரேற்றெதிர்ந்தது புன்தலைமாலை * புவனியெல்லாம்
நீரேற்றளந்தநெடியபிரான் அருளாவிடுமே
வாரேற்றிளமுலையாய்! * வருந்தேல்உன்வளைத்திறமே.
2547 வளைவாய்த்திருச்சக்கரத்து எங்கள்வானவனார் முடிமேல் *
தளைவாய்நறுங்கண்ணித் தண்ணந்துழாய்க்கு வண்ணம்பயலை *
விளைவான்மிகவந்து நாள்திங்களாண்டூழிநிற்க எம்மை
உளைவான்புகுந்து * இதுவோர்கங்குலாயிரமூழிகளே.
2548 ஊழிகளாய் உலகேழுமுண்டானென்றிலம் * பழங்கண்டு
ஆழிகளாம்பழவண்ண மென்றேற்கு * அஃதேகொண்டு அன்னை
நாழிவளோவெனும் ஞாலமுண்டான்வண்ணஞ் சொல்லிற்றென்னும்
தோழிகளோ! உரையீர் * எம்மையம்மனைசூழ்கின்றவே.
2549 சூழ்கின்றகங்குல் சுருங்காவிருளின்கருந்திணிம்பை *
போழ்கின்ற திங்களம்பிள்ளையும்போழ்க * துழாய்மலர்க்கே
தாழ்கின்றநெஞ்சத்தொருதமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ? * வந்துதோன்றிற்றுவாலியதே.
2550 வால்வெண்ணில வுலகாரச்சுரக்கும்வெண்திங்களென்னும் *
பால்விண்சுரவி சுரமுதிர்மாலை * பரிதிவட்டம்
போலுஞ்சுடரடலாழிப்பிரான் பொழிலேழளிக்கும்
சால்பின்தகைமைகொலாம்? * தமியாட்டி தளர்ந்ததுவே.
2551 தளர்ந்தும்முறிந்தும் வருதிரைப்பாயல் * திருநெடுங்கண்
வளர்ந்துமறிவுற்றும் வையம்விழுங்கியும் * மால்வரையைக்
கிளர்ந்துமறிதரக்கீண்டெடுத்தான் முடிசூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந்தென்றல் * அந்தோ! வந்துலாகின்றதே.
2552 உலாகின்றகெண்டை யொளியம்பு * எம்மாவியையூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்! * குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப்புணரியம்பள்ளியம்மான் அடியார்
நிலாகின்றவைகுந்தமோ? * வையமோ?நும்நிலையிடமே.
2553 இடம்போய்விரிந்து இவ்வுலகளந்தான் எழிலார்தண்துழாய் *
வடம்போதினையும்மடநெஞ்சமே! * நங்கள்வெள்வளைக்கே
விடம்போல்விரிதல்இது வியப்பே? வியன்தாமரையின்
தடம்போதொடுங்க * மெல்லாம்பலலர்விக்கும்வெண் திங்களே.
2554 திங்களம்பிள்ளைபுலம்ப தன்செங்கோலரசுபட்ட *
செங்களம்பற்றி நின்றெள்குபுன்மாலை * தென்பாலி லங்கை
வெங்களஞ்செய்த நம்விண்ணோர்பிரானார் துழாய் துணையா
நங்களைமாமைகொள்வான் * வந்துதோன்றி நலிகின்றதே.
2555 நலியும்நரகனை வீட்டிற்றும் * வாணன் திண்தோள்துணித்த
வலியும் பெருமையும்யான் சொல்லும் நீர்த்தல்ல * மைவரைபோல்
பொலியுமுருவிற்பிரானார்புனை பூந்துழாய் மலர்க்கே
மெலியும்மடநெஞ்சினார் * தந்துபோயினவேதனையே.
2556 வேதனை வெண்புரி நூலனை * விண்ணோர்பரவநின்ற
நாதனை ஞாலம்விழுங்குமநாதனை * ஞாலம்தத்தும்
பாதனைப்பாற்கடல் பாம்பணை மேற்பள்ளிகொண்டருளும்
சீதனையேதொழுவார் * விண்ணுளாரிலுஞ்சீரியரே.
2557 சீரரசாண்டு தன்செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த *
பாரரசொத்துமறைந்தது நாயிறு * பாரளந்த
பேரரசே! எம்விசும்பரசே! எம்மைநீத்து வஞ்சித்த
ஓரரசே! அருளாய் * இருளாய்வந்துறுகின்றதே.
2558 உருகின்றகன்மங்கள் மேலான ஓர்ப்பிலராய் * இவளைப்
பெருகின்றதாயர் மெய்ந்நொந்து பெறார்கொல்? * துழாய்குழல்வாய்த்
துறுகின்றிலர் தொல்லை வேங்கடமாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்றதாலிவளாகம் * மெல்லாவியெரிகொள்ளவே.
2559 எரிகொள்செந்நாயிறு இரண்டுடனேஉதயம்மலைவாய் *
விரிகின்றவண்ணத்த எம்பெருமான்கண்கள் * மீண்டவற்றுள்
எரிகொள்செந்தீவீழசுரரைப்போலஎம்போலியர்க்கும்
விரிவசொல்லீரிதுவோ? * வையமுற்றும்விளரியதே.
2560 விளரிக்குரலன்றில் மென்படைமேகின்றமுன்றிற்பெண்ணை *
முளரிக்குரம்பையிதுவிதுவாக * முகில்வண்ணன்பேர்
கிளரிக்கிளரிப்பிதற்றும்மெல்லாவியும்நைவுமெல்லாம்
தளரில்கொலோ? அறியேன் * உய்யலாவது இத்தையலுக்கே.
2561 தையல்நல்லார்கள் குழாங்கள்குழியகுழுவினுள்ளும் *
ஐயநல்லார்கள் குழியவிழவினும் * அங்கங்கெல்லாம்
கையபொன்னாழிவெண்சங்கொடும்காண்பானவாவுவன் நான்
மையவண்ணா! மணியே! * முத்தமே! என்தன் மாணிக்கமே.
2562 மாணிக்கங்கொண்டுகுரங்கெறிவொத்திருளோடுமுட்டி *
ஆணிப்பொன்னன்ன சுடுர்படுமாலை * உலகளந்த
மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப்பாரையில்லா
ஆணிப்பொன்னே! * அடியேனடி யாவியடைக்கலமே!
2563 அடைக்கலத்தோங்கு கமலத்தலரயன்சென்னியென்னும் *
முடைக்கலத்தூண்முன் அரனுக்குநீக்கியை * ஆழிசங்கம்
படைக்கலமேந்தியைவெண்ணெய்க்கன்றாய்ச்சி வன்தாம்புகளால்
புடைக்கலந்தானைஎம்மானை * என்சொல்லிப் புலம்புவனே?
2564 புலம்புங்கனகுரல் போழ்வாயவன்றிலும் * பூங்கழிபாய்ந்து
அலம்புங்கனகுரல் சூழ்திரையாழியும் * ஆங்கவைநின்
வலம்புள்ளதுநலம்பாடுமிதுகுற்றமாக வையம்
சிலம்பும்படிசெய்வதே? * திருமால்இத்திருவினையே.
2565 திருமாலுருவொக்கும்மேரு * அம்மேருவில்செஞ்சுடரோன்
திருமால்திருக்கைத்திருச்சக்கரமொக்கும் * அன்னகண்டும்
திருமாலுருவோடுஅவன்சின்னமேபிதற்றாநிற்பது ஓர்
திருமால்தலைக்கொண்டநங்கட்கு * எங்கேவரும் தீவினையே?
2566 தீவினைக்கருநஞ்சை நல்வினைக்கின்னமுதத்தினை *
பூவினைமேவியதேவிமணாளனை * புன்மையெள்காது
ஆவினைமேய்க்கும்வல்லாயனைஅன்றுலகீரடியால்
தாவினவேற்றையெம்மானை * எஞ்ஞான்றுதலைப் பெய்வனே?
2567 தலைப்பெய்துயான் உன்திருவடிசூடுந்தகைமையினால் *
நீலைபெய்தவாக்கைக்கு நோற்றவிம்மாயமும் * மாயம்செவ்வே
நிலைப்பெய்திலாதநிலைமையும் காண்தோறுஅசுரர்குழாம்
தொலைப்பெய்தநேமியெந்தாய்! * தொல்லையூழி சுருங்கலதே.
2568 சுருங்குறிவெண்ணெய் தொடுவுண்டகள்வனை * வையமுற்றும்
ஒருங்குரவுண்ட பெருவயிற்றாளனை * மாவலிமாட்டு
இருங்குறளாகிஇசையவோர்மூவடிவேண்டிச்சென்ற
பெருங்கிறியானையல்லால் * அடியேன்நெஞ்சம் பேணலதே.
2569 பேணலமில்லாவரக்கர் முந்நீரபெரும்பதிவாய் *
நீள்கர்நீளெரிவைத்தருளாயென்று * நின்னைவிண்ணோர்
தாணிலந்தோய்ந்துதொழுவர்நின்மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலுமாங்கொல்? என்றே * வைகல்மாலையும் காலையுமே.
2570 காலைவெய்யோற்கு முன்னோட்டுக்கொடுத்தகங்குற் குறும்பர் *
மாலைவெய்யோன்பட வையகம்பாவுவர் * அன்னகண்டும்
காலைநன்ஞானத்துறைபடிந்தாடிக்கண்போதுசெய்து
மாலைநன்னாவில்கொள்ளார் * நினையார் அவன்மைப்படியே.
2571 மைப்படிமேனியும் செந்தாமரைக்கண்ணும்வைதிகரே *
மெய்ப்படியால் உன்திருவடிசூடுந்தகைமையினார் *
எப்படியூராமிலைக்கக்குருட்டாமிலைக்குமென்னும்
அப்படியானும்சொன்னேன் * அடியேன்மற்று யாதென்பனே?
2572 ## யாதானும் ஓராக்கையிற்புக்கு * அங்காப்புண்டுமாப்பவிழ்ந்தும்
மூதாவியில்தடுமாறும்உயிர்முன்னமே * அதனால்
யாதானும்பற்றிநீங்கும்விரதத்தைநல்வீடுசெய்யும்
மாதாவினைப்பிதுவை * திருமாலைவணங்குவனே.
2573 வணங்கும்துறைகள் பலபலவாக்கி * மதிவிகற்பால்
பிணங்குஞ்சமயம் பலபலவாக்கி * அவையவைதோறு
அணங்கும்பலபலவாக்கிநின்மூர்த்திபரப்பிவைத்தாய்
இணங்குநின்னோரையில்லாய்! * நின்கண்வேட்கை யெழுவிப்பனே.
2574 எழுவதும்மீண்டே படுவதும்பட்டு * எனையூழிகள்போய்க்
கழிவதுங்கண்டுகண்டெள்கலல்லால் * இமையோர்கள் குழாம்
தொழுவதும்சூழ்வதும்செய்தொல்லைமாலைக்கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதலுற்றார்க்கும் * உண்டோகண்கள் துஞ்சுதலே?
2575 துஞ்சாமுனிவரும் அல்லாதவரும்தொடரநின்ற *
எஞ்சாப்பிறவியிடர்கடிவான் * இமையோர்தமக்கும்
தஞ்சார்விலாததனிப்பெருமூர்த்திதன்மாயம் செவ்வே
நெஞ்சால்நினைப்பரிதால் * வெண்ணெயூணென்னும் ஈனச்சொல்லே.
2576 ஈனச்சொல்லாயினுமாக * எறிதிரைவையம்முற்றும்
ஏனத்துருவாயிடந்தபிரான் * இருங்கற்பகஞ்சேர்
வானத்தவர்க்குமல்லாதவர்க்கும்மற்றெல்லாயவர்க்கும்
ஞானப்பிரானையல்லாலில்லை * நான்கண்டநல்லதுவே. (2)
2577 நல்லார்நவில்குருகூர்நகரான் * திருமால்திருப்பேர்
வல்லாரடிக்கண்ணிசூடிய * மாறன்விண்ணப்பஞ்செய்த
சொல்லார்தொடையலிந்நூறும்வல்லார்அழுந்தார் பிறப்பாம்
பொல்லாவருவினை * மாய வன்சேற்றள்ளல்பொய்ந் நிலத்தே. (2)