TVT 21

Admiring the Hero Who Came After Embracing the Bulls; Can also be Urging Marriage by Citing the Bull-Taming.

விடை தழுவிவந்த தலைவனை வியத்தல் ஏறுகோள் கூறி வரைவு கடாதல் என்னலுமாம்

2498 சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி * விண்ணோர்கள்நன்னீர்

ஆட்டி அந்தூபம்தராநிற்கவேயங்கு * ஓர்மாயையினால்

ஈட்டியவெண்ணைதொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்

கோட்டிடையாடினைகூத்து * அடலாயர்தம்கொம்பினுக்கே.

Text size