Chapter 1

The cowherd women worship Kāma, the god of love - (தை ஒரு)

தைத்திங்களில் காமனை வழிபடல்
The cowherd women worship Kāma, the god of love - (தை ஒரு)
Andal desired to attain Krishna. She observed a vow throughout the month of Margazhi. He did not come. How does it matter through whom we achieve good results? Determined to unite with Him, she sought the help of Manmatha, the god of love, who reunites separated lovers. She prayed to Manmatha, asking him to unite her with Krishna. She prayed to him, desiring to attain Krishna. She leverages Kama to attain Krishna, the ever youthful and the father of Kama.
கண்ணனை அடையவேண்டும் என்று ஆண்டாள் விரும்பினாள். மார்கழி மாதம் முழுதும் நோன்பு நோற்றாள். அவன் வரவில்லை. அவனை அடைந்தே தீர்வது என்று தீர்மானித்தாள். நல்ல பயனை யாரைக்கொண்டு அடைந்தால் என்ன? பிரிந்தவர்களைச் சேர்த்துவைப்பவன் மன்மதன். அவன் உதவியை நாடுகிறாள். நீ என்னைக் கண்ணனோடு சேர்த்து வைக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். அவனைக் குறித்து நோன்பு நோற்கிறாள் காமனைக் கொண்டு காமனைப் பயந்த காளையான கண்ணனை அடைய விரும்புகிறாள்.
Verses: 504 to 513
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will be with the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 1.1

504 தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண்டலமிட்டுமாசிமுன்னாள் **
ஐயநுண்மணற்கொண்டுதெருவணிந்து
அழகினுக்கலங்கரித்தனங்கதேவா! *
உய்யவுமாங்கொலோவென்றுசொல்லி
உன்னையுமும்பியையும்தொழுதேன் *
வெய்யதோர்தழலுமிழ்சக்கரக்கை
வேங்கடவற்கென்னைவிதிக்கிற்றியே. (2)
504 ## தை ஒரு திங்களும் தரை விளக்கித் *
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் *
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து *
அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா **
உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி *
உன்னையும் உம்பியையும் தொழுதேன் *
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை *
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே (1)
504 ## tai ŏru tiṅkal̤um tarai vil̤akkit *
taṇ maṇṭalam iṭṭu māci muṉṉāl̤ *
aiya nuṇ maṇal kŏṇṭu tĕru aṇintu *
aḻakiṉukku alaṅkarittu aṉaṅkatevā **
uyyavum āmkŏlo? ĕṉṟu cŏlli *
uṉṉaiyum umpiyaiyum tŏḻuteṉ *
vĕyyatu or taḻal umiḻ cakkarak kai *
veṅkaṭavaṟku ĕṉṉai vitikkiṟṟiye (1)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

504. We clean the floor in the month of Thai and decorate it with beautiful kolams. In the month of Masi we use soft white powder and make lovely decorations in our front yard. O Kamadeva, I worship you and your brother Saman. I wonder, can I survive this love sickness? Give me the boon of belonging to the lord of Thiruvenkatam who holds the discus(chakra) in his hand that emits fire.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அனங்கதேவா! காமனே!; தை ஒரு திங்களும் தை மாதம் முழுதும்; தரை விளக்கி தரையை சுத்திகரித்து; தண் குளிர்ந்த; மண்டலம் இட்டு மேடையிட்டு; மாசி மாசி மாத; முன்னாள் முதற் பக்ஷத்தில்; ஐய ஐயனே; நுண் நுண்ணிய; மணல் கொண்டு மணலினால்; தெரு அழகினுக்கு வீதிக்கு அழகு; அணிந்து சேர்த்திட; அலங்கரித்து அலங்காரம் செய்து; உய்யவும் உய்வு; ஆங்கொலோ பெறலாமோ; என்று சொல்லி எனக்கருதி; உன்னையும் உன்னையும்; உம்பியையும் உன் தம்பி சாமனையும்; தொழுதேன் வணங்கினேன்; வெய்யது உக்கிரமானதும்; ஓர் தழல் உமிழ் ஒப்பற்ற தீப்பொரிகளை வீசும்; சக்கரக் கை சக்கரத்தைக் கையிலுடைய; வேங்கடவற்கு வேங்கடமுடையானுக்கு; என்னை என்னை; விதிக்கிற்றியே சேவை செய்திட விதித்திடுவாய்

NAT 1.2

505 வெள்ளைநுண்மணற்கொண்டுதெருவணிந்து
வெள்வரைப்பதன்முன்னம்துறைபடிந்து *
முள்ளுமில்லாச்சுள்ளியெரிமடுத்து
முயன்றுன்னைநோற்கின்றேன்காமதேவா *
கள்ளவிழ்பூங்கணைதொடுத்துக்கொண்டு
கடல்வண்ணனென்பதோர்பேரெழுதி *
புள்ளினைவாய்பிளந்தானென்பதோர்
இலக்கினில்புகவென்னையெய்கிற்றியே.
505 வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து *
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து *
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து *
முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா ! **
கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு *
கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி *
புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர் *
இலக்கினில் புக என்னை எய்கிற்றியே (2)
505 vĕl̤l̤ai nuṇ maṇalkŏṇṭu tĕru aṇintu *
vĕl̤varaippataṉ muṉṉam tuṟai paṭintu *
mul̤l̤um illāc cul̤l̤i ĕri maṭuttu *
muyaṉṟu uṉṉai noṟkiṉṟeṉ kāmatevā ! **
kal̤ aviḻ pūṅkaṇai tŏṭuttukkŏṇṭu *
kaṭalvaṇṇaṉ ĕṉpatu or per ĕḻuti *
pul̤l̤iṉai vāy pil̤antāṉ ĕṉaptu or *
ilakkiṉil puka ĕṉṉai ĕykiṟṟiye (2)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

505. We decorate our front yard with soft white sand. We bathe at dawn before sunrise and make holy fire with twigs without thorns. I make all efforts to worship you, O Kamadeva Give me your grace to write the name of the ocean-colored one in my mind with your flower arrows that drip honey Make me enter the abode of the Lord who split open the mouth of the Asuran when he came as a bird.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காமதேவா! மன்மத தேவனே!; வெள்ளை வெண்மையான; நுண் மணல் பொடி மணலை; கொண்டு கொண்டு; தெரு வீதியை; அணிந்து அலங்கரித்து; வெள்வரைப்பதன் கீழ்வானம் வெளுப்பதற்கு; முன்னம் முன்னமே; துறை நீர்த்துறைகளில்; படிந்து முழுகி; முள்ளும் இல்லா முட்கள் இல்லாத; சுள்ளி சுள்ளிகளை; எரி மடுத்து தீயிலிட்டு; முயன்று முயற்சி செய்து; உன்னை உன்னை; நோற்கின்றேன் நோன்பு நோற்கின்றேன்; கள் அவிழ் தேன் பெருகும்; பூங்கணை மலர் அம்புகளை; தொடுத்துக் வில்லில் தொடுத்து; கொண்டு கொண்டு; கடல்வண்ணன் கடல் நிறத்தன்; என்பது என்கிற; ஓர் பேர் ஒரு நாமத்தை; எழுதி மனதில் எழுதி; புள்ளினை பகாசூரன்; வாய் வாயை; பிளந்தான் கீண்டெறிந்தவன்; என்பது ஓர் என்பதை ஒரு; இலக்கினில் இலக்காகக் கொண்டு; புக என்னை நான் நெருங்க; எய்கிற்றியே செய்திடுவாய்

NAT 1.3

506 மத்தநன்னறுமலர்முருக்கமலர்
கொண்டுமுப்போதுமுன்னடிவணங்கி *
தத்துவமிலியென்றுநெஞ்செரிந்து
வாசகத்தழித்துன்னைவைதிடாமே *
கொத்தலர்பூங்கணைதொடுத்துக்கொண்டு
கோவிந்தனென்பதோர்பேரெழுதி *
வித்தகன்வேங்கடவாணனென்னும்
விளக்கினிற்புகவென்னைவிதிக்கிற்றியே.
506 மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு *
முப்போதும் உன் அடி வணங்கி *
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து *
வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே **
கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு *
கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி *
வித்தகன் வேங்கட வாணன் என்னும் *
விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே (3)
506 matta naṉ naṟumalar murukka malar kŏṇṭu *
muppotum uṉ aṭi vaṇaṅki *
tattuvam ili ĕṉṟu nĕñcu ĕrintu *
vācakattu aḻittu uṉṉai vaitiṭāme **
kŏttu alar pūṅkaṇai tŏṭuttukkŏṇṭu *
kovintaṉ ĕṉpatu or per ĕḻuti *
vittakaṉ veṅkaṭa vāṇaṉ ĕṉṉum *
vil̤akkiṉil puka ĕṉṉai vitikkiṟṟiye (3)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

506. I worship your feet all three times of the day placing fragrant umatham flowers and blossoms of murukkam on them. O Manmatha, I don’t want to be angry with you and scold you, saying that you are heartless. Get ready with your fresh flower arrows and give me your grace so that I may merge with the brightness of the supreme lord of Venkatam hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மத்த நன் மணமிக்க; நறுமலர் ஊமத்த மலர்களையும்; முருக்க கல்யாண முருங்கை; மலர் பூக்களையும்; கொண்டு கொண்டு; முப்போதும் முக்காலமும்; உன் அடி உன் திருவடியில்; வணங்கி விழுந்து வணங்கி; தத்துவம் இவன்; இலி என்று பொய்யான தெய்வம் என்று; நெஞ்சு எரிந்து மனம் கொதித்து; வாசகத்து அழித்து வாயால்; உன்னை வைதிடாமே உன்னை வைதிடாமல்; கொத்து அலர் கொத்தாக மலர்; பூங்கணை அம்புகளை; தொடுத்துக் கொண்டு தொடுத்துக் கொண்டு; கோவிந்தன் கோவிந்த நாமத்தை; என்பது எண்ணியபடி; வித்தகன் அற்புதமான; வேங்கட வாணன் வேங்கடமுடையான்; என்னும் விளக்கினில் என்கிற விளக்கிலே; புக என்னை புகும்படி என்னை; விதிக்கிற்றியே விதித்திடுவாய்

NAT 1.4

507 சுவரில்புராண! நின்பேரெழுதிச்
சுறவநற்கொடிகளும்துரங்கங்களும் *
கவரிப்பிணாக்களும்கருப்புவில்லும்
காட்டித்தந்தேன் கண்டாய்காமதேவா! *
அவரைப்பிராயந்தொடங்கி என்றும்
ஆதரித்தெழுந்தவென்தடமுலைகள் *
துவரைப்பிரானுக்கேசங்கற்பித்துத்
தொழுதுவைத்தேனொல்லைவிதிக்கிற்றியே.
507 சுவரில் புராண! நின் பேர் எழுதிச் *
சுறவ நற்கொடிக்களும் துரங்கங்களும் *
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் *
காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா **
அவரைப் பிராயம் தொடங்கி * என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள் *
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் *
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே (4)
507 cuvaril purāṇa! niṉ per ĕḻutic *
cuṟava naṟkŏṭikkal̤um turaṅkaṅkal̤um *
kavarip piṇākkal̤um karuppu villum *
kāṭṭit tanteṉ kaṇṭāy kāmatevā **
avaraip pirāyam tŏṭaṅki *
ĕṉṟum ātarittu ĕḻunta ĕṉ taṭa mulaikal̤ *
tuvaraip pirāṉukke caṅkaṟpittut *
tŏḻutu vaitteṉ ŏllai vitikkiṟṟiye (4)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

507. O Kamadeva, (god of love) I wrote your name on the wall, and I made a fish flag and gave it to you with horses, damsel holding fans and a sugarcane-bow. I worshipped you and sought you to give me your grace From childhood I am determined to offer my bosom and myself at once to the lord of Dwaraka.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புராண! புராண காலத்தவனே!; காமதேவா! காம தேவனே!; சுவரில் சுவர்களில்; நின் பேர் எழுதி உன் பெயர்களை எழுதி; சுறவ நற் கொடிகளும் மீன் கொடிகளையும்; துரங்கங்களும் குதிரைகளையும்; கவரிப் சாமரம் வீசுகின்ற; பிணாக்களும் பெண்களையும்; கருப்பு வில்லும் கரும்பு வில்லையும்; காட்டித் தந்தேன் காணிக்கையாகத் தந்தேன்; கண்டாய் கண்டாய்; அவரைப் பிராயம் இளம்பருவம்; தொடங்கி தொடங்கி; என்றும் ஆதரித்து என்றும் விரும்பி; எழுந்த என் கிளர்ந்த; தட முலைகள் என் மார்பகங்களை; துவரை துவாரகை; பிரானுக்கே பிரானுக்கே கண்ணனுக்கே என்று; சங்கற்பித்து தீர்மானித்து; தொழுது வைத்தேன் முடிவு செய்து வைத்தேன்; ஒல்லை விரைவில் அவனிடம்; விதிக்கிற்றியே சேர்த்திடுவாய்

NAT 1.5

508 வானிடைவாழுமவ்வானவர்க்கு
மறையவர்வேள்வியில்வகுத்தஅவி *
கானிடைத்திரிவதோர்நரிபுகுந்து
கடப்பதும்மோப்பதும்செய்வதொப்ப *
ஊனிடையாழிசங்குத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்தவென்தடமுலைகள் *
மானிடவர்க்கென்றுபேச்சுப்படில்
வாழகில்லேன்கண்டாய்மன்மதனே!
508 வானிடை வாழும் அவ் வானவர்க்கு *
மறையவர் வேள்வியில் வகுத்த அவி *
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து *
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப **
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று *
உன்னித்து எழுந்த என் தட முலைகள் *
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் *
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! (5)
508 vāṉiṭai vāḻum av vāṉavarkku *
maṟaiyavar vel̤viyil vakutta avi *
kāṉiṭait tirivatu or nari pukuntu *
kaṭappatum moppatum cĕyvatu ŏppa **
ūṉiṭai āḻi caṅku uttamarkku ĕṉṟu *
uṉṉittu ĕḻunta ĕṉ taṭa mulaikal̤ *
māṉiṭavarkku ĕṉṟu peccup paṭil *
vāḻakilleṉ kaṇṭāy maṉmataṉe! (5)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

508. O Manmatha! It is like foxes that wander in the forest coming and eating the food that the sages offer as a sacrifice for the gods in the sky, if people wish to give me away in marriage to someone human so that my bosom belongs to him instead of the pure lord with a conch and discus. (chakra) I will not live if I have to marry someone other than my lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்மதனே! மன்மதனே!; வானிடை சுவர்க்கத்தில்; வாழும் வாழ்கின்ற; அவ் வானவர்க்கு அந்த தேவர்களுக்கென்று; மறையவர் வேத விற்பன்னர்கள்; வேள்வியில் யாகத்தில்; வகுத்த அவி கொடுத்த பிரசாதத்தை; கானிடை காட்டிலே; திரிவது திரிகின்ற; ஓர் நரி புகுந்து ஒரு நரியானது வந்து; கடப்பதும் கடந்தும்; மோப்பதும் முகர்ந்தும் பார்க்கும்; செய்வது ஒப்ப செயலைப் போல; ஊனிடை தனது திருமேனியில்; ஆழி சக்கரத்தையும்; சங்கு சங்கையையும் வைத்துள்ள; உத்தமர்க்கு என்று உத்தமனுக்காக என்று; உன்னித்து எழுந்த கிளர்ந்தெழுந்த; என் தட முலைகள் என் மார்பகங்கள்; மானிடவர்க்கு மானிடருக்கு; என்று உரியவை என; பேச்சுப் படில் பேச்சு வந்தால்; வாழகில்லேன் உயிர் வாழமாட்டேன்; கண்டாய் என்கிறாள்

NAT 1.6

509 உருவுடையாரிளையார்கள்நல்லார்
ஓத்துவல்லார்களைக்கொண்டு * வைகல்
தெருவிடையெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவேநோற்கின்றேன்காமதேவா! *
கருவுடைமுகில்வண்ணன்காயாவண்ணன்
கருவிளைபோல்வண்ணன் * கமலவண்ணத்
திருவுடைமுகத்தினில்திருக்கண்களால்
திருந்தவேநோக்கெனக்கருள்கண்டாய்.
509 உருவு உடையார் இளையார்கள் நல்லார் *
ஓத்து வல்லார்களைக் கொண்டு * வைகல்
தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் *
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா! **
கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன் *
கருவிளை போல் வண்ணன் * கமல வண்ணத் *
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் *
திருந்தவே நோக்கு எனக்கு அருள் கண்டாய் (6)
509 uruvu uṭaiyār il̤aiyārkal̤ nallār *
ottu vallārkal̤aik kŏṇṭu * vaikal
tĕruviṭai ĕtirkŏṇṭu paṅkuṉi nāl̤ *
tiruntave noṟkiṉṟeṉ kāmatevā! **
karuvuṭai mukil vaṇṇaṉ kāyāvaṇṇaṉ *
karuvil̤ai pol vaṇṇaṉ * kamala vaṇṇat *
tiru uṭai mukattiṉil tirukkaṇkal̤āl *
tiruntave nokku ĕṉakku arul̤ kaṇṭāy (6)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

509. With beautiful young girls who know the sastras, O Kamadeva I am doing nombu on the streets, where you will be going. He has the dark color of the clouds and the kāyām flower and shines like a karuvilai blossom. Give me your grace so that the lotus-faced lord will see me with his divine eyes and give me His grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காமதேவா! மன்மதனே!; உருவு உடையார் அழகிய வடிவையுடையவரும்; இளையார்கள் இளமை; நல்லார் பருவமுடையவரும்; ஒத்து வல்லார்களை வல்லமை உடையவருமானவரை; கொண்டு முன்னிட்டுக் கொண்டு; வைகல் தெருவிடை நாள்தோறும் வீதியிலே; எதிர் கொண்டு உன் எதிரே வந்து; பங்குனி நாள் பங்குனி நாளில்; திருந்தவே நல்ல திருத்தமாகவே; நோற்கின்றேன் நோன்பு நோற்கின்றேன்; கருவுடை கருவுற்ற; முகில் மேகம் போன்ற; வண்ணன் வண்ணனே!; காயாவண்ணன் காயாம்பூ நிறத்தவனே!; கருவிளை கருநெய்தல் மலர் போன்ற; போல் வண்ணன் நிறமுடையவனே!; கமல வண்ண தாமரை போன்ற; திரு உடை அழகான; முகத்தினில் திருமுகத்தினில் உள்ள; திருக் கண்களால் திருக் கண்களால்; திருந்தவே நான் தேறும்படி; நோக்கு என் நோக்கி; எனக்கு அருள் எனக்கு அருள்; கண்டாய் தந்திடுவாய்!

NAT 1.7

510 காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் *
கட்டி யரிசி யவலமைத்து *
வாயுடை மறையவர் மந்திரத்தால் *
மன்மதனேஉன்னை வணங்குகின்றேன் **
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் *
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம் *
சாயுடை வயிறுமென் தடமுலையும் *
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே (7)
510 காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து *
கட்டி அரிசி அவல் அமைத்து *
வாய் உடை மறையவர் மந்திரத்தால் *
மன்மதனே ! உன்னை வணங்குகின்றேன் **
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் *
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் *
சாய் உடை வயிறும் என் தட முலையும் *
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே (7)
510 kāy uṭai nĕllŏṭu karumpu amaittu *
kaṭṭi arici aval amaittu *
vāy uṭai maṟaiyavar mantirattāl *
maṉmataṉe ! uṉṉai vaṇaṅkukiṉṟeṉ **
teyam muṉ al̤antavaṉ tirivikkiramaṉ *
tirukkaikal̤āl ĕṉṉait tīṇṭum vaṇṇam *
cāy uṭai vayiṟum ĕṉ taṭa mulaiyum *
taraṇiyil-talaippukaḻ tarakkiṟṟiye (7)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

510. I offer paddy, sugarcane, cooked rice with brown sugar and aval and worship you reciting the mantras from the sastras. O Manmatha, I bow to you. Give me your grace so that ThrivikRāman who measured the world will touch me with his divine hands. Give me your grace so that he will touch and embrace me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்மதனே! மன்மதனே!; காய் உடை பசுங்காய்; நெல்லொடு நெல்லும்; கரும்பு அமைத்து கரும்பும் சமைத்து; கட்டி அரிசி வெல்லக்கட்டி அரிசி; அவல் அமைத்து அவல் சேர்த்து; உன்னை உன்னை; வணங்குகின்றேன் வணங்குகின்றேன்; வாய் உடை வாக்குத் திறமையுடைய; மறையவர் வேத வல்லுனர்களின்; மந்திரத்தால் மந்திரத்தினால்; முன் முன்பு; தேயம் அளந்தவன் உலகம் அளந்த; திரிவிக்கிரமன் திருவிக்ரமன்; திருக்கைகளால் தனது திருக்கையினால்; என்னை சாய் உடை என் ஒளியையுடைய; வயிறும் வயிற்றையும்; என் தட முலையும் என் மார்பையும்; தீண்டும் வண்ணம் தொடும்படி பண்ணி; தரணியில் இப் பூமியில்; தலை புகழ் மிக கீர்த்தியை; தரக்கிற்றியே தந்திடுவாயே

NAT 1.8

511 மாசுடையுடம்பொடுதலையுலறி
வாய்ப்புறம்வெளுத்தொருபோதுமுண்டு *
தேசுடைதிறலுடைக்காமதேவா!
நோற்கின்றநோன்பினைக்குறிக்கொள்கண்டாய் *
பேசுவதொன்றுண்டிங்கெம்பெருமான்
பெண்மையைத்தலையுடைத்தாக்கும்வண்ணம் *
கேசவநம்பியைக்கால்பிடிப்பாள்
என்னும் இப்பேறெனக்கருள்கண்டாய்.
511 மாசு உடை உடம்பொடு தலை உலறி *
வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு *
தேசு உடைத் திறல் உடைக் காமதேவா! *
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் **
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் *
பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம் *
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் *
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் (8)
511 mācu uṭai uṭampŏṭu talai ulaṟi *
vāyppuṟam vĕl̤uttu ŏrupotum uṇṭu *
tecu uṭait tiṟal uṭaik kāmatevā! *
noṟkiṉṟa noṉpiṉaik kuṟikkŏl̤ kaṇṭāy **
pecuvatu ŏṉṟu uṇṭu iṅku ĕmpĕrumāṉ *
pĕṇmaiyait talai uṭaittu ākkum vaṇṇam *
kecava nampiyaik kāl piṭippāl̤ *
ĕṉṉum ip peṟu ĕṉakku arul̤ kaṇṭāy (8)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

512. My body is full of dirt, uncombed hair dangles, my mouth is pale and dry as I observe nonbu and eat only once in a day. O! Kamadeva! the celebrated god of love! I have something to tell you. Please bless me with the glorified womanhood of sitting by His side and pressing the feet of Kannan who fought with the Asuran Kesi to protect a woman.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேசு உடை புகழும்; திறல் உடை திறமையுமுடைய; எம் பெருமான்! எம் பெருமானே!; காமதேவா! காமதேவனே!; மாசு உடை அழுக்குப் படிந்த; உடம்பொடு உடம்போடு; தலை உலறி தலைமுடி உலர்ந்து; வாய்ப்புறம் உதடுகள்; வெளுத்து வெளுப்படைந்து; ஒரு போதும் ஒரு வேளை; உண்டு மட்டும் புசித்து; நோற்கின்ற நோற்கின்ற; நோன்பினை நோன்பை; குறிக்கொள் கண்டாய் கவனித்திடுவாய்; பேசுவது ஒன்று கூறவேண்டுவது; உண்டு இங்கு ஒன்று இங்கு உளது; பெண்மையை என்னுடைய பெண்மையை; தலைஉடைத்து சிறப்புடையதாக; ஆக்கும் வண்ணம் செய்வதற்காக; கேசவ நம்பியைக் கண்ணபிரானுக்கு; கால் பிடிப்பாள் கால்பிடிப்பவள்; என்னும் இவள் என்கிற; இப் பேறு இப் பேற்றை; எனக்கு எனக்கு; அருள் கண்டாய் அருள்வாயே

NAT 1.9

512 தொழுதுமுப்போதும்உன்னடிவணங்கித்
தூமலர்தூய்த்தொழுதேத்துகின்றேன் *
பழுதின்றிப்பாற்கடல்வண்ணனுக்கே
பணிசெய்துவாழப்பெறாவிடில்நான் *
அழுதழுதலமந்தம்மாவழங்க
ஆற்றவுமதுவுனக்குறைக்குங்கண்டாய் *
உழுவதோரெருத்தினைநுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின்றித்துரந்தாலொக்குமே.
512 தொழுது முப்போதும் உன் அடி வணங்கித் *
தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன் *
பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே *
பணிசெய்து வாழப் பெறாவிடில் நான் **
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க *
ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் *
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து *
ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே (9)
512 tŏḻutu muppotum uṉ aṭi vaṇaṅkit *
tūmalar tūyt tŏḻutu ettukiṉṟeṉ *
paḻutu iṉṟip pāṟkaṭal vaṇṇaṉukke *
paṇicĕytu vāḻap pĕṟāviṭil nāṉ **
aḻutu aḻutu alamantu ammā vaḻaṅka *
āṟṟavum atu uṉakku uṟaikkum kaṇṭāy *
uḻuvator ĕruttiṉai nukaṅkŏṭu pāyntu *
ūṭṭam iṉṟit turantāl ŏkkume (9)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

512. I offer flowers and worship you and bow to your feet three times a day. If I am unable to live for the dark ocean-colored lord and to serve him faultlessly, I will cry and suffer and you, Kamadeva, will feel bad. It will be as if not feeding an ox that ploughs and hitting it with a stick instead.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முப்போதும் மூன்று காலங்களிலும்; தொழுது தொழுது; உன் அடி உன் திருவடிகளை; வணங்கி வணங்கி; தூ மலர் தூய மலர்களால்; தூய்த் தொழுது அர்ச்சித்து; ஏத்துகின்றேன் துதிக்கின்றேன்; பழுது இன்றி குறையில்லாமல்; பாற்கடல் பாற்கடல்; வண்ணனுக்கே கண்ணபிரானுக்கே; பணி செய்து வாழ சேவை செய்து; வாழ வாழ்வதை; பெறாவிடில் பெறாவிட்டால்; நான் நான்; அழுது அழுது அழுது அழுது; அலமந்து வருந்தி; அம்மா வழங்க அம்மா! என்று; ஆற்றவும் கதற; அது உனக்கு அது உனக்கு; உறைக்கும் உறைத்திடும்; கண்டாய் பார்த்துக்கொள்; உழுவது ஓர் ஏர் உழும்; எருத்தினை ஒரு எருதை; நுகங்கொடு நுகத்தடியால்; பாய்ந்து தள்ளி; ஊட்டம் இன்றித் தீனியில்லாமல்; துரந்தால் துரத்துவதற்கு; ஒக்குமே ஒப்பாகும்

NAT 1.10

513 கருப்புவில்மலர்க்கணைக்காமவேளைக்
கழலிணை பணிந்து அங்கோர்கரியலற *
மருப்பினையொசித்துப்புள்வாய்பிளந்த
மணிவண்ணற்கென்னைவகுத்திடென்று *
பொருப்பன்னமாடம்பொலிந்துதோன்றும்
புதுவையர்கோன்விட்டுசித்தன்கோதை *
விருப்புடையின்தமிழ்மாலைவல்லார்
விண்ணவர்கோனடிநண்ணுவரே. (2)
513 ## கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக் *
கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற *
மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த *
மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று **
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் *
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை *
விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார் *
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே (10)
513 ## karuppu vil malark kaṇaik kāmavel̤aik *
kaḻaliṇai paṇintu aṅku or kari alaṟa *
maruppiṉai ŏcittup pul̤ vāypil̤anta *
maṇivaṇṇaṟku ĕṉṉai vakuttiṭu ĕṉṟu **
pŏruppu aṉṉa māṭam pŏlintu toṉṟum *
putuvaiyarkoṉ viṭṭucittaṉ kotai *
viruppu uṭai iṉtamiḻ mālai vallār *
viṇṇavar koṉ aṭi naṇṇuvare (10)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

513. Vishnuchithan Kodai, the chief of Puduvai where the mountain-like palaces shine, composed pāsurams about the women who worshiped Kama, ( the god of love) with a sugarcane bow and flower arrows and how they wanted his grace so that they might be with the god who broke the tusks of the elephant and split open the beak of the bird.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருப்பு கரும்பு; வில் வில்லையும்; மலர் மலர்; கணை அம்புகளையுமுடைய; காமவேளை மன்மதனுடைய; கழலிணை இரு பாதங்களை; பணிந்து வணங்கி; அங்கு ஓர் அங்கு ஓர்; கரி யானை; அலற அலறிக்கொண்டுவர; மருப்பினை அதன் கொம்புகளை; ஒசித்து முறித்தவனும்; புள் பகாசூரப் பறவையின்; வாய் வாயை; பிளந்த பிளந்தவனுமான; மணிவண்ணற்கு கண்ணபிரானுக்கு; வகுத்து இடு என்று வகைப்படுத்திவிடு என்று; பொருப்பு அன்ன மலைகளைப் போன்ற; மாடம் பொலிந்து மாளிகைகள்; தோன்றும் நிறைந்து விளங்கும்; புதுவையர் ஸ்ரீவில்லிபுத்தூர்; கோன் சான்றோன்; விட்டுசித்தன் பெரியாழ்வாரின்; கோதை மகளான ஆண்டாள்; விருப்பு உடை விருப்பமுடன் அருளின; இன் தமிழ் இனிய தமிழ்மாலையான; மாலை பாசுரங்களை; வல்லார் பயின்றவர்கள்; விண்ணவர் கோன் எம்பெருமானுடைய; அடி திருவடிகளை; நண்ணுவரே அடைவர்