தனியன் / Taniyan

நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் * தென் திருமல்லி நாடி * செழுங்குழல் மேல்
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும் மதிப்புடைய
சோலைக்கிளி * அவள் தூய நற்பாதம் துணை நமக்கே

kolac curi caṅkai māyaṉ cĕvvāyiṉ kuṇam viṉavum
cīlattaṉal̤ * tĕṉ tirumalli nāṭi * cĕḻuṅkuḻal mel
mālattŏṭai tĕṉṉaraṅkarukkīyum matippuṭaiya
colaikkil̤i * aval̤ tūya naṟpātam tuṇai namakke
திருக்கண்ண மங்கை ஆண்டான் / tirukkaṇṇa maṅkai āṇṭāṉ
NAT.1.0.2.1
NAT.1.0.2.2
NAT.1.0.2.3

Word by word meaning

கோலச்சுரி அழகிய வரிகளையுடைய; சங்கை பாஞ்சஜன்ய சங்கை நோக்கி; மாயன் அதனிடத்திலிருந்து மாயக்கண்ணனின்; செவ்வாயின் சிவந்த அதரத்தின்; குணம் வினவும் குணவிசேஷங்களைக் அறியும்; சீலத்தனள் விருப்பம் உடையவளும்; தென் திருமல்லி நாடி தென் திருமல்லி நாட்டுத் தலைவியும்; செழுங்குழல் செழுமை மிக்க தன் கூந்தலில்; மேல் பூச்சூட்டி இருப்பவளும்; தென்னரங்கருக்கு கண்ணனுக்கு; மாலத் தொடை மாலையை; ஈயும் ஸமர்ப்பிக்க வேண்டும் என்ற; மதிப்புடைய மதிப்பையும் மேன்மையையும் உடைய; சோலைக் கிளி சோலைக் கிளி போன்ற; அவள் தூய தூய இனிய பேச்சை உடையவளுமான; நல் பாதம் ஆண்டாளின் புனிதமான திருவடிகளே; துணை நமக்கே நமக்கு புகலிடம்

நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤

அல்லி நாள் தாமரை மேலாரணங்கினின் துணைவி *
மல்லி நாடாண்ட மட மயில் - மெல்லியலாள் *
ஆயர் குல வேந்தனாகத்தாள் * தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு

alli nāl̤ tāmarai melāraṇaṅkiṉiṉ tuṇaivi *
malli nāṭāṇṭa maṭa mayil - mĕlliyalāl̤ *
āyar kula ventaṉākattāl̤ * tĕṉputuvai
veyar payanta vil̤akku
திருக்கண்ண மங்கை ஆண்டான் / tirukkaṇṇa maṅkai āṇṭāṉ
NAT-2

Word by word meaning

அல்லி நாள் அன்று அலர்ந்த; தாமரை மேல் தாமரைப் பூவின் மேல்; ஆரணங்கின் சிறந்த ஸ்வபாவமுடைய; இன் துணைவி திருமகளுக்கு, இனிய தோழியாகவும்; மல்லி நாடாண்ட மல்லி நாட்டை ஆ ண்ட; மடமயில் அழகிய மயில் போன்றவளாயும்; மெல்லியலாள் மென்மையான ஆண்டாள்; ஆயர்குல ஆயர்குல; வேந்தன் தலைவனான கண்ணனின்; ஆகத்தாள் திருமேனியில் விருப்பம் கொண்டவளாய்; தென்புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில்; வேயர் பயந்த பெரியாழ்வாரின் மகளாக வேயர்குல; விளக்கு விளக்காக இருந்தாள்