
1620 குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக்
கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று *
நிலத்திகழும்மலர்ச்சுடரேய்சோதீ! என்ன
நெஞ்சிடர்தீர்த்தருளியஎன்நிமலன்காண்மின் *
மலைத்திகழ்சந்தகில்கனகமணியும்கொண்டு
வந்துந்திவயல்கள்தொறும்மடைகள்பாய *
அலைத்துவரும்பொன்னிவளம்பெருகும்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1621 சிலம்புமுதல்கலனணிந்தோர்செங்கண்குன்றம்
திகழ்ந்ததெனத்திருவுருவம்பன்றியாகி *
இலங்குபுவிமடந்தைதனை இடந்துபுல்கி
எயிற்றிடைவைத்தருளியஎம்மீசன்காண்மின் *
புலம்புசிறைவண்டொலிப்பப்பூகம்தொக்க
பொழில்கள்தொறும்குயில்கூவமயில்களால *
அலம்புதிரைப்புனல்புடைசூழ்ந்துஅழகார் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1625 கும்பமிகுமதவேழம்குலையக்கொம்பு
பறித்து மழவிடையடர்த்துக்குரவைகோத்து *
வம்பவிழும்மலர்க்குழலாளாய்ச்சிவைத்த
தயிர்வெண்ணெயுண்டுகந்தமாயோன் காண்மின் *
செம்பவளமரதகம் நன்முத்தம்காட்டத்
திகழ்பூகம்கதலிபலவளம்மிக்கு எங்கும் *
அம்பொன்மதிள்பொழில்புடைசூழ்ந்துஅழகார்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
2066 கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய
களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் *
அல்லியம்பூமலர்ப்பொய்கைப்பழனவேலி
அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் *
சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித்
தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு *
மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே
மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)