PT 7.8.6

He is the One Who Took the Vāmana Incarnation

வாமனாவதாரம் எடுத்தவன் இவனே

1623 வானவர்தம்துயர்தீரவந்துதோன்றி

மாணுருவாய்மூவடிமாவலியைவேண்டி *

தானமரஏழுலகும்அளந்த வென்றித்

தனிமுதல்சக்கரப்படைஎன்தலைவன்காண்மின் *

தேனமரும்பொழில்தழுவும்எழில்கொள்வீதிச்

செழுமாடமாளிகைகள்கூடந்தோறும் *

ஆனதொல்சீர்மறையாளர்பயிலும்செல்வத்து

அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.

Text size