He is the One Who Took the Narasiṁha Incarnation
நரசிம்மாவதாரம் எடுத்தவன் இவனே
1622 சினமேவும்அடலரியினுருவமாகித்
திறல்மேவும்இரணியன்தாகம்கீண்டு *
மனமேவுவஞ்சனையால்வந்தபேய்ச்சி
மாள உயிர்வெளவிய எம்மாயோன்காண்மின் *
இனமேவுவரிவளைக்கையேந்தும் கோவை
யேய்வாயமரகதம்போல் கிளியினின்சொல் *
அனமேவுநடைமடவார்பயிலும் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.