PT 7.8.2

The Lord Who Herds the Cows is He Who Bestowed the Meaning of the Vedas

வேதப்பொருளை அருளியவன் ஆமருவியப்பன்

1619 முன்இவ்வுலகேழும்இருள்மண்டியுண்ண

முனிவரொடுதானவர்கள்திசைப்ப * வந்து

பன்னுகலைநால்வேதப்பொருளையெல்லாம்

பரிமுகமாய்அருளியஎம்பரமன்காண்மின் *

செந்நெல்மலிகதிர்க்கவரிவீசச்

சங்கமவைமுரலச்செங்கமலமலரையேறி *

அன்னமலிபெடையோடும்அமரும்செல்வத்து

அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.

Text size