O Lord of Aḻuntūr! Enslave Me in Service.
அழுந்தூர் அம்மானே; என்னை ஆட்கொள்
1615 நெடியானே! கடிஆர்கலிநம்பீ!
நின்னையேநினைந்துஇங்குஇருப்பேனை *
கடியார்காளையரைவர்புகுந்து
காவல்செய்த அக்காவலைப்பிழைத்து *
குடிபோந்துஉன்அடிக்கீழ்வந்துபுகுந்தேன்
கூறைசோறுஇவைதந்தெனக்கருளி *
அடியேனைப்பணியாண்டுகொள்எந்தாய்!
அழுந்தூர்மேல்திசைநின்றஅம்மானே!