The Lord Who Herds the Cows is He Who Reclines upon the Serpent Couch
பாம்பிணையில் பள்ளிகொண்டவனே ஆமருவியப்பன்
1618 செங்கமலத்திருமகளும்புவியும்
செம்பொன்திருவடியினிணைவருடமுனிவரேத்த *
வங்கமலிதடங்கடலுள் அநந்தனென்னும்
வரியரவினணைத்துயின்றமாயோன்காண்மின் *
எங்குமலிநிறைபுகழ்நால்வேதம் ஐந்து
வேள்விகளும்கேள்விகளும்இயன்றதன்மை
அங்கமலத்தயனனையார்பயிலும்செல்வத்து
அணியழுந்தூர் நின்றுகந்தஅமரர்கோவே. (2)