MUT 34

மனமே! கண்ணனையே காண்

2315 அன்றிவ்வுலகம் அளந்தவசைவேகொல்? *
நின்றிருந்துவேளுக்கைநீள்நகர்வாய் * - அன்று
கிடந்தானைக்கேடில்சீரானை * முன்கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண்.
2315 aṉṟu iv ulakam * al̤anta acaive kŏl? *
niṉṟu iruntu vel̤ukkai nīl̤ nakarvāy ** - aṉṟu
kiṭantāṉaik * keṭu il cīrāṉai * muṉ kañcaik
kaṭantāṉai nĕñcame! kāṇ -34

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2315. Is he exhausted because he measured the world at Mahābali’s sacrifice? O heart, see! The faultless lord who killed the Asuran Kamsan sitting in Thiruvelukkai, and recline- on Adisesha on the ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சமே! மனமே; அன்று முன்பு; இவ்வுலகம் இவ்வுலகங்களை; அளந்த அளந்த; அசைவே கொல்? களைப்போ?; வேளுக்கை வேளுக்கையிலே; நின்று இருந்து வீற்றிருந்தும்; நீள் நகர்வாய் திருவெக்காவில்; அன்று அன்று; கிடந்தானை பள்ளிகொண்டவனும்; கேடில் ஒரு நாளும் குற்றமில்லாத; சீரானை கல்யாண குணங்களுடையவனும்; முன் கஞ்சை முன்பு கம்சனை; கடந்தானை அழித்த பெருமானை; காண் கண்டு வணங்கவும்
nenjamĕ ŏh heart!; anṛu once upon a time; ninṛu standing; ivvulagam all these worlds; al̤andha of measuring; asavĕ kol is it due to exhaustion; vĕl̤ukkai at thiruvĕl̤ukkai (a divine abode in kānchīpuram); irundhu in sitting posture; nīl̤ nagar vāy in the great divine abode (of thiruvehkā, another divine abode in kānchīpuram); anṛu once upon a time; kidandhānai one who took reclining posture; kĕdu il sīrānai one who has auspicious qualities which will never get destroyed; mun once upon a time; kanjan kamsan; kadandhānai emperumān who killed; kāṇ keep meditating