Chapter 9

The complaining cowherd women - (வெண்ணெய் விழுங்கி)

பாலக் கிரீடை
The complaining cowherd women - (வெண்ணெய் விழுங்கி)
Krishna's mischiefs and pranks are unique and delightful! Yashoda lays young Krishna beside her and makes him sleep. Thinking he has fallen asleep, she gets up to attend to the household chores. But Krishna also gets up. He goes to many houses, steals butter, heats and drinks milk, rolls and breaks pots. All the women come running to Yashoda. They complain about each of Krishna's mischiefs. "Krishna! I can't bear to hear the accusations against you. Come here!" Yashoda calls out.
கண்ணனின் தீம்புகளும் விளையாட்டுகளும் தனிப்பட்டவை. சுவை மிக்கவை! குழந்தை கண்ணனை அருகில் படுக்கவைத்து உறங்கச் செய்கிறாள். உறங்கி விட்டான் என்று நினைத்து எழுந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கச் செல்கிறாள் யசோதை. கண்ணனும் எழுந்தான். பல வீடுகளுக்குச் செல்லுகிறான். வெண்ணெயைக் களவு செய்கிறான். + Read more
Verses: 202 to 212
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will become devotees of Govindan and will be like lights that brighten up all the eight directions
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 2.9.1

202 வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும் *
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம் உன்மகனைக்காவாய் *
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல *
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய். (2)
202 ## வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை வெற்பிடை இட்டு * அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் * காக்ககில்லோம் உன்மகனைக் காவாய் **
புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை * புரை புரையால் இவை செய்ய வல்ல *
அண்ணல் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற * அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (1) *
202 ## vĕṇṇĕy vizhuṅki vĕṟuṅ kalattai vĕṟpiṭai iṭṭu * ataṉ ocai keṭkum
kaṇṇapirāṉ kaṟṟa kalvi taṉṉaik * kākkakillom uṉmakaṉaik kāvāy **
puṇṇil pul̤ip pĕytāl ŏkkum tīmai * purai puraiyāl ivai cĕyya valla *
aṇṇal kaṇṇāṉ or makaṉaip pĕṟṟa * acotai naṅkāy uṉmakaṉaik kūvāy (1) *

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

202. He gulps down butter from our houses and breaks the pots by dashing them on stones with a loud noise with glee. We are unable to control his mischiefs. You should take care of your son. His deeds hurt us like an injury that is rubbed. O lovely Yashodā! You have begotten a son who is capable of doing mischiefs again and again. Call your son!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புண்ணில் உடல் புண்ணில்; புளிப் பெய்தால் புளியைப்பூசியது போல்; ஒக்கும் மேலும் எரிச்சலை உண்டாக்கும்; தீமை செயல்களை; புரை புரையால் மீண்டும் மீண்டும் எல்லோர் வீட்டிலும்; இவை செய்ய வல்ல இவை செய்யவல்ல; அண்ணல் அண்ணன் பலராமனுக்கு; கண்ணான் ஒத்த திறத்தவனாய்; ஓர் மகனைப்பெற்ற ஒரு அழகிய மகனைப்பெற்ற; அசோதை நங்காய் யசோதை பிராட்டியே!; வெண்ணெய் தாழியில்வைத்த வெண்ணெயை; விழுங்கி முற்றிலுமாக விழுங்கி; வெறுங் கலத்தை காலி பாத்திரத்தை; வெற்பிடை இட்டு கல்லின் மேல் போட்டு உடைத்து; அதன் ஓசை கேட்கும் அதன் ஓசை கேட்டு களிக்கும்; கண்ணபிரான் கண்ணபிரான்; கற்ற கல்வி தன்னை கற்ற குறும்புகளை எங்களால்; காக்ககில்லோம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; உன் மகனை நீ உன் பிள்ளையை; காவாய் காத்துக் கொள்வாய்; உன் மகனை தீம்புகள் செய்யும் உன் பிள்ளையை நீ; கூவாய் கூப்பிட்டுக்கொள்வாய்
ivai cĕyya valla Kannan, who is capable of; tīmai mischiefs; purai puraiyāl again and again at our homes; ŏkkum that frustrates us like; pul̤ip pĕytāl rubbing on; puṇṇil an existing wound; acotai naṅkāy mother Yashoda!; or makaṉaippĕṟṟa who yielded a beautiful Son; kaṇṇāṉ with similar abilities to; aṇṇal His brother Balarama; viḻuṅki He completely gulps; vĕṇṇĕy the butter kept in pots; vĕṟpiṭai iṭṭu and by hitting over stone breaks those; vĕṟuṅ kalattai empty pots; ataṉ ocai keṭkum and rejoices the sound of breaking pots; kākkakillom its difficult to tolerate; kaṇṇapirāṉ Kannan's; kaṟṟa kalvi taṉṉai mischiefs; kāvāy you take care; uṉ makaṉai of your Son; kūvāy call your Son; uṉ makaṉai who does these mischiefs

PAT 2.9.2

203 வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ! வருகஇங்கே *
கரியகுழல்செய்யவாய்முகத்துக்
காகுத்தநம்பீ! வருகஇங்கே *
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்!
அஞ்சனவண்ணா! அசலகத்தார் *
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே.
203 வருக வருக வருக இங்கே * வாமன நம்பீ வருக இங்கே *
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் * காகுத்த நம்பீ வருக இங்கே **
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் * அஞ்சனவண்ணா அசலகத்தார் *
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் * பாவியேனுக்கு இங்கே போதராயே (2)
203 varuka varuka varuka iṅke * vāmaṉa nampī varuka iṅke *
kariya kuzhal cĕyya vāy mukattu ĕm * kākutta nampī varuka iṅke **
ariyaṉ ivaṉ ĕṉakku iṉṟu naṅkāy * añcaṉavaṇṇā acalakattār *
paripavam pecat tarikkakilleṉ * pāviyeṉukku iṅke potarāye (2)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

203. Yashodā talks to Kannan and her neighbors. “You are my dear child! Come, come, come here! As the dwarf Vāmana, you went to the king Mahābali. Come here. You have dark hair, a beautiful face and a lovely red mouth. You came as Rāma(Kakutha) Come here. And you, lovely neighbors, you know he is my beloved child, know how precious he is to me. O! my dark complexioned son, listen. it hurts me when I hear the neighbors complain about you. I can’t bear it. Don’t you feel sorry for me? Come to me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாமன நம்பீ வாமனாவதாரம் செய்தவனே!; இங்கே வருக இங்கே ஓடி வா; வருக வருக வருக ஓடோடி வா; கரிய குழல் கருத்த குழலையும்; செய்ய வாய் சிவந்த திருப்பவள வாயையும்; முகத்து அழகிய முகத்தையும் உடைய; எம் காகுத்த நம்பீ! ராமாவதாரம் செய்த பிரானே!; வருக இங்கே வருக இங்கே; நங்காய்! அம்மா தாயே! (குழந்தை மேல் குற்றம் சொன்னவளைப்பார்த்து யசோதை); எனக்கு இன்று இப்பொழுது எனக்கு; அரியன் இவன் இந்தப்பிள்ளை அருமையானவன்; அஞ்சனவண்ணா! மை போன்ற கருத்த நிறமுடையவனே!; அசலகத்தார் மற்றவர்கள் உன்னை; பரிபவம் பேச பழித்துப் பேசினால்; தரிக்ககில்லேன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; பாவியேனுக்கு இப்படிப்பட்ட பழிச்சொல் தீர; இங்கே போதராயே நீ இங்கே ஓடி வா
vāmaṉa nampī the One who incarnated as Vamana; iṅke varuka come to me; varuka, varuka, varuka run to me; kariya kuḻal You have dark hair; cĕyya vāy a lovely red mouth; mukattu and a beautiful face; ĕm kākutta nampī! You came as Rāma; varuka iṅke come here; naṅkāy! oh neighbours!; ariyaṉ ivaṉ you all know how special; ĕṉakku iṉṟu He is to me now; añcaṉavaṇṇā! Oh dark complexioned son!; tarikkakilleṉ i am unable to tolerate; acalakattār when other; paripavam peca complain about You; pāviyeṉukku to stop such blames; iṅke potarāye come to me

PAT 2.9.3

204 திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன் *
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான் *
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ? அசோதாய்! *
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே.
204 திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு * தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன் *
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் * உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான் **
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் * வழக்கோ? அசோதாய்
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய் * வாழ ஒட்டான் மதுசூதனனே (3)
204 tiru uṭaip pil̤l̤aitāṉ tīyavāṟu * tekkam ŏṉṟum ilaṉ tecu uṭaiyaṉ *
uruka vaitta kuṭattŏṭu vĕṇṇĕy * uṟiñci uṭaittiṭṭup pontu niṉṟāṉ **
aruku iruntār tammai aniyāyam cĕyvatutāṉ * vazhakko? acotāy
varuka ĕṉṟu uṉmakaṉ taṉṉaik kūvāy * vāzha ŏṭṭāṉ matucūtaṉaṉe (3)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

204. The cowherd women complain to Yashodā thus: "Your wonderful son doesn’t hesitate to do mischief. He is bright and has a divine glow. He swallowed all the melted ghee in our pots and broke them and now he stands here as if he has done nothing wrong. Is it right to do bad things like this to your neighbors? Yashodā, call him to come to you. Madhusudanan doesn’t allow us to live!"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அசோதாய்! யசோதையே!; திரு உடைப் பிள்ளைதான் உன் அருமை மகன் கண்ணன்; தீயவாறு விஷமம் செய்வதில் சிறிதும்; தேக்கம் ஒன்றும் இலன் தவறுவதேயில்லை; தேசு உடையன் தேஜஸ் நிறைந்தவன்; உருக வைத்த உருக்குவதற்காக அடுப்பில் வைத்திருந்த; குடத்தொடு தாழியோடு மொத்த; வெண்ணெய் வெண்ணெயையும்; உறிஞ்சி சாப்பிட்டுவிட்டு; உடைத்திட்டு தாழியையும் உடைத்துவிட்டு; போந்து ஒன்றும் அறியாதவன் போல்; நின்றான் வந்து நின்றான்; அருகு இருந்தார் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு; தம்மை அநியாயம் இப்படி தொந்திரவு; செய்வதுதான் வழக்கோ? கொடுப்பது நியாயம்தானோ?; உன் மகன் தன்னை உன் பிள்ளையை உன் அருகிலேயே; வருக என்று கூவாய் அழைத்து வைத்துக்கொள்; வாழ ஒட்டான் இல்லாவிட்டால் எங்களை வாழவிட மாட்டான்; மதுசூதனனே இந்த மதுசூதனன்!
acotāy! oh Yashoda!; tiru uṭaip pil̤l̤aitāṉ Your wonderful Son; tekkam ŏṉṟum ilaṉ doesn’t hesitate; tīyavāṟu to do mischiefs; tecu uṭaiyaṉ He is full of divine glow; uṟiñci He ate; vĕṇṇĕy all the butter; kuṭattŏṭu kept in a pot; uruka vaitta and placed on a stove to melt it; uṭaittiṭṭu and then broke the pot; niṉṟāṉ and stood; pontu as though he was innocent; cĕyvatutāṉ vaḻakko? is it right; tammai aniyāyam to trouble; aruku iruntār your neighbours like this; varuka ĕṉṟu kūvāy please keep; uṉ makaṉ taṉṉai your Child close to you; vāḻa ŏṭṭāṉ otherwise, he wont let us live; matucūtaṉaṉe this Madhusudanan!

PAT 2.9.4

205 கொண்டல்வண்ணா! இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய்! இங்கேபோதராயே *
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா! இங்கேபோதராயே *
உண்டுவந்தேன்அம்மமென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும் *
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான்கற்றகல்விதானே.
205 கொண்டல்வண்ணா இங்கே போதராயே * கோயில் பிள்ளாய் இங்கே போதராயே *
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த * திருநாரணா இங்கே போதராயே **
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி * ஓடி அகம் புக ஆய்ச்சிதானும் *
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக் * கண்ணபிரான் கற்ற கல்வி தானே (4)
205 kŏṇṭalvaṇṇā iṅke potarāye * koyil pil̤l̤āy iṅke potarāye *
tĕṇ tirai cūzh tirupperk kiṭanta * tirunāraṇā iṅke potarāye **
uṇṭu vanteṉ ammam ĕṉṟu cŏlli * oṭi akam puka āyccitāṉum *
kaṇṭu ĕtire cĕṉṟu ĕṭuttukkŏl̤l̤ak * kaṇṇapirāṉ kaṟṟa kalvi tāṉe (4)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

205. Yashodā calls Kannan to come to her : “O you with the dark color of a cloud, come, You are the god of Srirangam, come, you are the Naranan of Thirupper (Koiladi) surrounded by the ocean with clear waves, come. He came running into the house and said, “ Mother, I’ve already eaten. ” Yashodā could not get angry with him. She approached him and embraced him. This is the loving trick Yashodā's dear child has learnt.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்டல் வண்ணா! மேகம் போன்ற வண்ணனே!; இங்கே போதராயே இங்கே ஓடி வருவாய்; கோயிற் பிள்ளாய்! திருவரங்கத்து எம்பெருமானே!; இங்கே போதராயே இங்கே ஓடிவருவாய்; தெண் திரை தெள்ளிய அலைகளையுடைய; சூழ் நீரால் சூழப்பட்ட; திருப்பேர் திருப்பேர் நகரிலே; கிடந்த கண் துயிலும்; திருநாரணா! நாராயணனே!; இங்கே போதராயே இங்கே ஓடி வருவாயே!; உண்டு வந்தேன் அம்மம் நான் உணவை உண்டு வந்தேன்; என்று சொல்லி ஓடி என்று கூறி; அகம் புக வீட்டிற்குள் நுழைய; ஆய்ச்சிதானும் தாயான யசோதையும்; கண்டு கண்ணனைக்கண்டு; எதிரே சென்று மகிழ்ந்து எதிரே சென்று; எடுத்துக் கொள்ள எடுத்துக் கொள்ள; கண்ணபிரான் கண்ணபிரான்; கற்ற தானாகவே கற்றுக்கொண்ட வித்தை; கல்வி தானே! கல்விதான் என்ன என்று அகமகிழ்கிறாள்
iṅke potarāye come here; kŏṇṭal vaṇṇā! O you with the dark color of a cloud; koyiṟ pil̤l̤āy! You are the god of Srirangam; iṅke potarāye come here; tirunāraṇā! Narayana!; kiṭanta who reside in; tirupper Thirupper (Koiladi); cūḻ that is surrounded by the ocean; tĕṇ tirai with clear waves; iṅke potarāye come here!; ĕṉṟu cŏlli oṭi he says; uṇṭu vanteṉ ammam that he has already eaten; akam puka and enters the house; āyccitāṉum Mother Yashoda; kaṇṭu seeing Kannan; ĕtire cĕṉṟu she rejoices and goes in front of Him; ĕṭuttuk kŏl̤l̤a and embrances him; kaṇṇapirāṉ Kannan; kalvi tāṉe! educated Himself; kaṟṟa and learnt this trick all by Himself

PAT 2.9.5

206 பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப *
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் *
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் *
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.
206 பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப் * பல்வளையாள் என்மகள் இருப்ப *
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று * இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் **
சாளக்கிராமம் உடைய நம்பி * சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் *
ஆலைக் கரும்பின் மொழி அனைய * அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (5)
206 pālaik kaṟantu aṭuppu eṟa vaittup * palval̤aiyāl̤ ĕṉmakal̤ iruppa *
melai akatte nĕruppu veṇṭic cĕṉṟu * iṟaippŏzhutu aṅke peci niṉṟeṉ **
cāl̤akkirāmam uṭaiya nampi * cāyttup parukiṭṭup pontu niṉṟāṉ *
ālaik karumpiṉ mŏzhi aṉaiya * acotai naṅkāy uṉmakaṉaik kūvāy (5)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

206. A cowherdess complains, “I milked the cow and put the milk on the stove, but I found out I didn’t have any fire to light it. I asked my daughter to stay there and went to borrow some fire from a neighbor. As I stood there and chatted with the neighbor for a while, the dear lord of SālakkiRāmam turned over the pot, drank the milk and ran away. O beautiful Yashodā with a voice as sweet as the juice from a sugarcane press, call your son. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாலைக் கறந்து பாலைக் கறந்து பானையிலிட்டு; அடுப்பு ஏற வைத்து அடுப்பில் ஏற்றி; பல் பல வகை; வளையாள் வளையல்களை அணிந்துள்ள; என் மகள் இருப்ப என் மகள் இருக்க; மேலை அகத்தே அடுத்த வீட்டிலிருந்து; நெருப்பு அடுப்பைப் பற்ற வைக்க; வேண்டிச் சென்று நெருப்பு வாங்கி வர; இறைப் பொழுது என்று போனவள் சிறிது நேரம்; அங்கே பேசி பேசிக்கொண்டு; நின்றேன் இருந்து விட்டேன்; சாளக்கிராமம் உடைய நம்பி அதற்குள் கண்ணபிரான்; சாய்த்து அந்தப் பானையைச் சாய்த்து அத்தனை; பருகிட்டு பாலையும் குடித்துவிட்டு; போந்து ஒன்றும் அறியாதவன் போல் வந்து; நின்றான் நின்றான்; உன் மகனைக் உன் பிள்ளையை; கூவாய் அழைத்து வைத்துக்கொள்; ஆலை ஆலையில் இட்ட கரும்பு ரஸத்தின்; கரும்பின் இனிப்பைப் போன்ற; மொழி அனைய இனிய பேச்சையுடைய; அசோதை நங்காய்! யசோதை நங்காய்!; உன் மகனை உன் பிள்ளையை; கூவாய் அழைத்து வைத்துக்கொள்
pālaik kaṟantu i milked the cow and put the milk in a pot; aṭuppu eṟa vaittu on the stove; ĕṉ makal̤ iruppa leaving my daughter nearby; val̤aiyāl̤ who wears bangles of; pal different forms; veṇṭic cĕṉṟu and to get fire; nĕruppu to light my stove; melai akatte I went to my neighbour; iṟaip pŏḻutu i ended up; aṅke peci chatting with my neighbour; niṉṟeṉ for a bit; cāl̤akkirāmam uṭaiya nampi in the meantime, Kannan; cāyttu toppled the pot kept on the stove; parukiṭṭu and drank the entire milk; niṉṟāṉ and stood; pontu as though nothing happened; uṉ makaṉaik your Child; kūvāy keep Him close to you; acotai naṅkāy! O beautiful Yashodā; mŏḻi aṉaiya with a voice; karumpiṉ as sweet as; ālai the juice from a sugarcane press; kūvāy please keep; uṉ makaṉai Your child close to you

PAT 2.9.6

207 போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய் *
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன் *
கோதுகலமுடைக்குட்டனேயோ!
குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா! *
வேதப்பொருளே! என்வேங்கடவா!
வித்தகனே! இங்கேபோதராயே.
207 போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் * போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார் * ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன் **
கோதுகலம் உடைக்குட்டனேயோ * குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா *
வேதப் பொருளே என் வேங்கடவா * வித்தகனே இங்கே போதராயே 6
207 potar kaṇṭāy iṅke potar kaṇṭāy * potareṉ ĕṉṉāte potar kaṇṭāy
eteṉum cŏlli acalakattār * eteṉum peca nāṉ keṭkamāṭṭeṉ **
kotukalam uṭaikkuṭṭaṉeyo * kuṉṟu ĕṭuttāy kuṭam āṭu kūttā *
vetap pŏrul̤e ĕṉ veṅkaṭavā * vittakaṉe iṅke potarāye 6

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

207. Yashodā calls Kannan to come to her. “ O my son, come to me. come to me now. Don’t say you won’t come. Come to me. The neighbors keep complaining about you and it’s difficult for me to hear so many complaints. You are a happy little one! You carried Govardhanā mountain and danced the Kudakkuthu dance. You are the meaning of the Vedās and my god of Venkata hills. Come here. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோதுகலம் உடை குதூகலமளிக்கும் குணமுடைய; குட்டனேயோ! குழந்தாய் ஓடி வா!; குன்று கோவர்த்தன மலையை; எடுத்தாய்! குடையாகத் தூக்கிப்பிடித்தவனே!; குடம் ஆடு கூத்தா! குடக்கூத்தாடினவனே!; வேதப் பொருளே! வேதத்தின் பொருளானவனே!; என் வேங்கடவா! திருவேங்கட மலைமேல் இருப்பவனே!; வித்தகனே! ஆச்சரிய சக்தியுடையவனே!; இங்கே போதராயே இங்கே ஓடிவருவாயே!; போதர் கண்டாய் விரைந்து ஓடி வா கண்ணா; போதரேன் என்னாதே வரமாட்டேன் என்று சொல்லாமல்; போதர் கண்டாய் ஓடி வா; ஏதேனும் சொல்லி நான் எதையாவது சொல்லி; அசலகத்தார் ஏதேனும் பேச மற்றவர்கள் எதையாவது பேச; நான் கேட்க மாட்டேன் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இங்கே போதர் கண்டாய் அதனால் இங்கே ஓடி வா
kotukalam uṭai You are the happy; kuṭṭaṉeyo! little One!; ĕṭuttāy! You carried; kuṉṟu the Govardana mountain; kuṭam āṭu kūttā! You danced the Kudakkuthu dance; vetap pŏrul̤e! the very essence of vedas; ĕṉ veṅkaṭavā! the One who resides in Tirumala; vittakaṉe! the One with immeasurable power; iṅke potarāye come running to me!; potar kaṇṭāy hurry come to me, Kanna; potareṉ ĕṉṉāte dont say You wont come; potar kaṇṭāy come to me; acalakattār eteṉum peca when people complain about You; nāṉ keṭka māṭṭeṉ I will not be able to tolerate; eteṉum cŏlli and I might reply back; iṅke potar kaṇṭāy so, please come to me

PAT 2.9.7

208 செந்நெலரிசிசிறுபருப்புச்
செய்த அக்காரம்நறுநெய்பாலால் *
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன் *
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான் *
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே.
208 செந்நெல் அரிசி சிறு பருப்புச் * செய்த அக்காரம் நறுநெய் பாலால் *
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் * பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன் **
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி * எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் *
உன்மகன் தன்னை அசோதை நங்காய் * கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (7)
208 cĕnnĕl arici ciṟu paruppuc * cĕyta akkāram naṟunĕy pālāl *
paṉṉiraṇṭu tiruvoṇam aṭṭeṉ * paṇṭum ip pil̤l̤ai paricu aṟivaṉ **
iṉṉam ukappaṉ nāṉ ĕṉṟu cŏlli * ĕllām vizhuṅkiṭṭup pontu niṉṟāṉ *
uṉmakaṉ taṉṉai acotai naṅkāy * kūvik kŏl̤l̤āy ivaiyum cilave (7)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

208. A cowherd girl complains, “I made twelve types of sweets with good rice, small lentils, sugar, fragrant ghee and milk for Thiruvonam festival. I know what he does— he already ate my food once before. He gobbled everything up and says he wants more. He stands as if he hasn’t done anything wrong. This is one of his tricks. ” O lovely Yashodā, call your son and ask him to come to you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந்நெல் அரிசி சிவப்பு அரிசியும்; சிறுபருப்பு சிறுபருப்பும் சேர்த்து; செய்த அக்காரம் செய்த சக்கரைப் பொங்கலையும்; நறு நெய் பாலால் மணம்மிக்க நெய் பால் இவற்றால்; பன்னிரண்டு பன்னிரண்டு; திருவோணம் திருவோண நோம்புக்காக பாயச வகைகள் சமைத்து; அட்டேன் வைத்திருந்தேன்; பண்டும் இப் பிள்ளை வெகு நாட்களாக இப்பிள்ளையின்; பரிசு அறிவன் சுபாவத்தை அறிவேன்; எல்லாம் செய்து வைத்த அத்தனையும்; விழுங்கிவிட்டு மிச்சமின்றி விழுங்கிவிட்டு; இன்னம் உகப்பன் இன்னும் சாப்பிட விரும்புகிறேன்; நான் என்று சொல்லி நான் என்று சொல்லிக்கொண்டு; போந்து நின்றான் வந்து நிற்கின்றான்; உன் மகன் தன்னை உன் மகனை; யசோதை நங்காய்! யசோதை பிராட்டியே!; கூவிக் கொள்ளாய் நீ அழைத்துவைத்துக் கொள்வாய்; இவையும் சிலவே இவையும் சிலவே அவனது விஷமங்கள்!
cĕyta akkāram I made sweet pongal with; cĕnnĕl arici red rice; ciṟuparuppu and lentils; tiruvoṇam for Thiruvonam, I made payasams; paṉṉiraṇṭu of twelve different kind; naṟu nĕy pālāl with fragrant ghee and milk; aṭṭeṉ and I kept them; paricu aṟivaṉ I know; paṇṭum ip pil̤l̤ai what He does; viḻuṅkiviṭṭu He gobbles; ĕllām the entire cooked food items; pontu niṉṟāṉ and He come and stands; nāṉ ĕṉṟu cŏlli and says that; iṉṉam ukappaṉ He wants more to eat; yacotai naṅkāy! oh mother Yashoda; kūvik kŏl̤l̤āy please call; uṉ makaṉ taṉṉai your Son; ivaiyum cilave these are some of His mischiefs

PAT 2.9.8

209 கேசவனே! இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே *
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே *
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று *
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா! இங்கேபோதராயே.
209 கேசவனே இங்கே போதராயே * கில்லேன் என்னாது இங்கே போதராயே *
நேசம் இலாதார் அகத்து இருந்து * நீ விளையாடாதே போதராயே **
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் * தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் * தாமோதரா இங்கே போதராயே (8)
209 kecavaṉe iṅke potarāye * killeṉ ĕṉṉātu iṅke potarāye *
necam ilātār akattu iruntu * nī vil̤aiyāṭāte potarāye **
tūcaṉam cŏllum tŏzhuttaimārum * tŏṇṭarum niṉṟa iṭattil niṉṟu
tāycŏlluk kŏl̤vatu taṉmam kaṇṭāy * tāmotarā iṅke potarāye (8)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

209. Yashodā calls Kannan to come to her. "O, Kesava, come here. Don’t say no. Come to me. Don’t go to unfriendly people’s houses and play there. Come to me. Don’t stay in the place of those who complain about you and where servants live. Obeying your mother’s words is your duty. Damodara, come here. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேசவனே! அழகிய கேசமுடைய பிரானே!; கில்லேன் என்னாது மாட்டேன் என்று சொல்லாமல்; இங்கே போதராய் இங்கே வருவாய்; இங்கே போதராயே இங்கே வந்திடுவாயே; நேசம் இலாதார் அன்பில்லாதவர்கள்; அகத்து இருந்து வீட்டிற்குப்போய்; நீ விளையாடாதே நீ விளையாடாதே; போதராயே இங்கே வா; தூசனம் சொல்லும் உன்னை நிந்திக்கும்; தொழுத்தைமாரும் ஆய்ச்சிகளும்; தொண்டரும் நின்ற மற்றவர்களும் உள்ள; இடத்தில் நின்று இடத்திலிருந்து நீ இங்கே வா; தாய்சொல்லுக் கொள்வது அம்மா சொல்வதைக் கேட்பது; தன்மம் கண்டாய் உனக்கு நல்லது தெரிந்து கொள்; தாமோதரா! தாமோதரனே! இங்கே ஓடிவா கண்ணா; இங்கே போதராயே இங்கு வந்திடுவாயே
kecavaṉe! the Lord with beautiful hair!; killeṉ ĕṉṉātu dont say no; iṅke potarāy and come here; iṅke potarāye come to me; nī vil̤aiyāṭāte dont go and play; akattu iruntu at the houses; necam ilātār of unfriendly people; potarāye come here; iṭattil niṉṟu come to me from places; tŏḻuttaimārum where aiyarpadi residents; tŏṇṭarum niṉṟa and others reside; tūcaṉam cŏllum who complain about You; taṉmam kaṇṭāy You should know that its good for You; tāycŏlluk kŏl̤vatu if You listen to me; tāmotarā! Damodhara! come running to me; iṅke potarāye come here

PAT 2.9.9

210 கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு *
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான் *
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான் *
உன்மகன்தன்னையசோதைநங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே.
210 கன்னல் இலட்டுவத்தோடு சீடை * காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு *
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன் * இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் **
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் * பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் *
உன்மகன் தன்னை அசோதை நங்காய் * கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (9)
210 kaṉṉal ilaṭṭuvattoṭu cīṭai * kārĕl̤l̤iṉ uṇṭai kalattil iṭṭu *
ĕṉ akam ĕṉṟu nāṉ vaittup ponteṉ * ivaṉ pukku avaṟṟaip pĕṟuttip pontāṉ **
piṉṉum akam pukku uṟiyai nokkip * piṟaṅkuŏl̤i vĕṇṇĕyum cotikkiṉṟāṉ *
uṉmakaṉ taṉṉai acotai naṅkāy * kūvik kŏl̤l̤āy ivaiyum cilave (9)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

210. A cowherd girl complains, "I kept sweet laddus, seedais and sesame sweet balls in a pot and went outside. I thought no one would come into my house and take anything, but your son entered my house and ate all the sweets without leaving any at all. He even looked into the pot hanging on the uri and checked to see if there was any butter hidden there. O Yashodā, beautiful one, call your son to come to you. I’ve told you only some of the naughty things he did. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கன்னல் வெல்லப்பாகு; இலட்டுவத்தோடு சேர்த்து செய்த லட்டும்; சீடை சீடையும்; காரெள்ளின் உண்டை எள்ளுருண்டையும்; கலத்தில் இட்டு ஓரோர் பாத்திரத்தில் வைத்து; என் அகம் என்று என் வீடு தானே காவல் தேவையில்லை என்று; நான் வைத்துப் போந்தேன் வைத்துவிட்டுப் போனேன்; இவன் புக்கு இவன் வீட்டிக்குள் புகுந்து; அவற்றை அனைத்தையும்; பெறுத்திப் போந்தான் எடுத்துத் தின்று விட்டான்; பின்னும் அகம் புக்கு மறுபடியும் வீட்டில் புகுந்து; உறியை நோக்கி உறியில் வைத்திருக்கும்; பிறங்கு ஒளி அன்று கடைந்த; வெண்ணெயும் வெண்ணெய்தானா என்று; சோதிக்கின்றான் பார்த்துக்கொண்டிருந்தான்; யசோதை நங்காய்! யசோதை பிராட்டியே!; உன் மகன் தன்னை உன் பிள்ளையை உன் அருகிலேயே; கூவிக் கொள்ளாய் அழைத்து வைத்துக் கொள்வாய்; இவையும் சிலவே அவனது பல விஷமங்களில் இவையும் சில
ilaṭṭuvattoṭu I kept sweet laddus made of; kaṉṉal molasses; cīṭai seedai snacks and; kārĕl̤l̤iṉ uṇṭai sesame laddus; kalattil iṭṭu in separate containers; ĕṉ akam ĕṉṟu at my house; nāṉ vaittup ponteṉ and went out; ivaṉ pukku your Son entered our home; pĕṟuttip pontāṉ took and ate; avaṟṟai all the food items; piṉṉum akam pukku He entered again; cotikkiṉṟāṉ and was looking into; uṟiyai nokki the pots to see; piṟaṅku ŏl̤i if churned; vĕṇṇĕyum butter is there for Him to eat; yacotai naṅkāy! oh Yashoda!; uṉ makaṉ taṉṉai call your Child; kūvik kŏl̤l̤āy and keep Him close to you; ivaiyum cilave these are some of the naughty things He did

PAT 2.9.10

211 சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சூழலுடையன்உன்பிள்ளைதானே *
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு *
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து *
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே.
211 சொல்லில் அரசிப் படுதி நங்காய் * சூழல் உடையன் உன்பிள்ளை தானே *
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக் * கையில் வளையைக் கழற்றிக்கொண்டு **
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற * அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து
நல்லன நாவல் பழங்கள் கொண்டு * நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே (10)
211 cŏllil aracip paṭuti naṅkāy * cūzhal uṭaiyaṉ uṉpil̤l̤ai tāṉe *
illam pukuntu ĕṉmakal̤aik kūvik * kaiyil val̤aiyaik kazhaṟṟikkŏṇṭu **
kŏllaiyil niṉṟum kŏṇarntu viṟṟa * aṅku ŏruttikku av val̤ai kŏṭuttu
nallaṉa nāval pazhaṅkal̤ kŏṇṭu * nāṉ alleṉ ĕṉṟu cirikkiṉṟāṉe (10)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

211. A cowherd girl complains, “ O lovely Yashodā, If anyone complains about your son, you get upset. He is tricky. He came to our house and called my girl, took her bracelets, went away through the backyard, sold them to the berry seller and bought some sweet berries and ate them. When I asked him about the bracelets, he said, “I haven’t seen them” and laughed.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்காய் யசோதையே; சொல்லில் உன் மகனின் விஷமங்களைச் சொன்னால்; அரசிப் படுதி நீ கோபிக்கிறாய்; உன் பிள்ளை தானே உன் பிள்ளையானவன்; சூழல் உடையன் விஷமக்காரனாக இருக்கிறான்; இல்லம் புகுந்து என் வீட்டிற்குள் வந்து; என் மகளைக் கூவி என் மகளைக் கூப்பிட்டு; கையில் அவள் கையிலணிந்திருந்த; வளையை வளையலை; கழற்றிக் கொண்டு கழற்றிக்கொண்டு போய்; கொல்லையில் நின்றும் வீட்டின் பின்புறத்தில்; கொணர்ந்து விற்ற பழங்களை விற்ற; அங்கு ஒருத்திக்கு ஒருத்தியிடம்; அவ்வளை கொடுத்து அந்த வளையலை கொடுத்து; நல்லன நாவற் பழங்கள் நல்ல நாவற் பழங்களை; கொண்டு வாங்கிக் கொண்டு; நான் அல்லேன் என்னைக் கண்டதும் இந்த வளையலை; என்று சிரிக்கிறானே! நான் கொடுக்கவில்லை என்று சிரிக்கிறான்!
naṅkāy Yashoda; cŏllil if we talk to you about your son's mischiefs; aracip paṭuti you get angry; uṉ pil̤l̤ai tāṉe your Son; cūḻal uṭaiyaṉ is very mischevious; illam pukuntu He came to our home; ĕṉ makal̤aik kūvi and called my daughter; kaḻaṟṟik kŏṇṭu he removed the; val̤aiyai bracelet; kaiyil from her hand; kŏllaiyil niṉṟum and leftthrough the backyard; avval̤ai kŏṭuttu He gave the bracelet to; aṅku ŏruttikku a lady selling; kŏṇarntu viṟṟa fruits; kŏṇṭu He bought; nallaṉa nāvaṟ paḻaṅkal̤ berries; nāṉ alleṉ when I saw Him, he claimed that; ĕṉṟu cirikkiṟāṉe! He didnt give the bracelet to her and laughs

PAT 2.9.11

212 வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன் *
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல் *
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி *
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே. (2)
212 ## வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் * வருபுனல் காவிரித் தென்னரங்கன் *
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் * பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் **
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் * கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி *
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் * இணையடி என்தலை மேலனவே (11)
212 ## vaṇṭu kal̤ittu iraikkum pŏzhil cūzh * varupuṉal kāvirit tĕṉṉaraṅkaṉ *
paṇṭu avaṉ cĕyta kirīṭai ĕllām * paṭṭarpirāṉ viṭṭucittaṉ pāṭal **
kŏṇṭu ivai pāṭik kuṉikka vallār * kovintaṉtaṉ aṭiyārkal̤ āki *
ĕṇ ticaikkum vil̤akkāki niṟpār * iṇaiyaṭi ĕṉtalai melaṉave (11)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

212. The chief Pattar, Vishnuchithan, composed songs describing the play of the god of Srirangam in the southern land surrounded with groves where bees happily swarm and the Kaveri flows with its abundant water. If people sing these songs and dance they will become devotees of Govindan and will be like lights that brighten up all the eight directions. I bow to them and worship their feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு தேனைப் பருகிய வண்டுகள்; களித்து களித்து; இரைக்கும் சூழ் ஆரவாரம் சூழ்ந்த; பொழில் சோலைகளாலும்; வருபுனல் புனித காவேரி; காவிரி நதியாலும் சூழப்பட்ட; தென்னரங்கன் திருவரங்கத்தில் கண்வளருபவன்; பண்டு அவன் செய்த முன்பொரு சமயம் அவன் செய்த; கிரீடை விளையாட்டுச்செயல்களை; எல்லாம் எல்லாம்; பட்டர் பிரான் பட்டர் பிரான் என்று கொண்டாடப்படும்; விட்டுசித்தன் விஷ்ணுவைச் சித்தத்தில் கொண்டு; பாடல் அருளிச்செய்த பாசுரங்களை; கொண்டு இவை பாடி பக்தியுடன் பாடி; குனிக்க வல்லார் ஆடி அனுஸந்திப்பவர்கள்; கோவிந்தன் தன் கண்ணபிரானின்; அடியார்கள் ஆகி அடியவர்களாகி; எண் திசைக்கும் எட்டு திக்கிலிருப்பவர்களுக்கும்; விளக்காக மன இருள் நீங்கும் விளக்காக; நிற்பார் நிற்கும் அவர்களுடைய; இணையடி திருவடிகளை; என் தலை மேலனவே என் தலைமேலே தாங்குவேனாக
tĕṉṉaraṅkaṉ He resides in Sri Rangam; vaṇṭu where bees; kal̤ittu swarm; iraikkum cūḻ and is surrounded by; pŏḻil oases; kāviri and also surrounded by; varupuṉal the divine cauvery river; kŏṇṭu ivai pāṭi those with deep devotion who sing; kuṉikka vallār and dance; pāṭal to these pasurams; viṭṭucittaṉ by Vishnuchithan; paṭṭar pirāṉ who is celebrated as the chief Pattar,; ĕllām describing the; kirīṭai pastimes of; paṇṭu avaṉ cĕyta the Lord; kovintaṉ taṉ will become devotees; aṭiyārkal̤ āki of Krishna; niṟpār and will become the light; vil̤akkāka to expel darkness; ĕṇ ticaikkum in all eight directions; ĕṉ talai melaṉave I bow to them and worship; iṇaiyaṭi their feet