PAT 2.9.8

தாய் சொல் கொள்வது தருமம்

209 கேசவனே! இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே *
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே *
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று *
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா! இங்கேபோதராயே.
209
kEsavanE! iNGgE pOdharāyE * killEn ennādhu iNGgE pOdharāyE *
nEsamilādhār ahaththirundhu * nee viLaiyādādhE pOdharāyE *
thoosanam sollum thozhuththaimārum * thoNdarum n^inRa idaththil n^inRu *
thāy sollu koLvadhu thanmam kaNdāy * dhāmOdharā! iNGgE pOdharāyE. 8

Ragam

கேதாரகௌள

Thalam

ஆதி

Bhavam

Mother

Simple Translation

209. Yashodā calls Kannan to come to her. "O, Kesava, come here. Don’t say no. Come to me. Don’t go to unfriendly people’s houses and play there. Come to me. Don’t stay in the place of those who complain about you and where servants live. Obeying your mother’s words is your duty. Damodara, come here. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேசவனே! அழகிய கேசமுடைய பிரானே!; கில்லேன் என்னாது மாட்டேன் என்று சொல்லாமல்; இங்கே போதராய் இங்கே வருவாய்; இங்கே போதராயே இங்கே வந்திடுவாயே; நேசம் இலாதார் அன்பில்லாதவர்கள்; அகத்து இருந்து வீட்டிற்குப்போய்; நீ விளையாடாதே நீ விளையாடாதே; போதராயே இங்கே வா; தூசனம் சொல்லும் உன்னை நிந்திக்கும்; தொழுத்தைமாரும் ஆய்ச்சிகளும்; தொண்டரும் நின்ற மற்றவர்களும் உள்ள; இடத்தில் நின்று இடத்திலிருந்து நீ இங்கே வா; தாய்சொல்லுக் கொள்வது அம்மா சொல்வதைக் கேட்பது; தன்மம் கண்டாய் உனக்கு நல்லது தெரிந்து கொள்; தாமோதரா! தாமோதரனே! இங்கே ஓடிவா கண்ணா; இங்கே போதராயே இங்கு வந்திடுவாயே