PAT 2.9.7

பன்னிரு ச்ரவண விரதம்

208 செந்நெலரிசிசிறுபருப்புச்
செய்த அக்காரம்நறுநெய்பாலால் *
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன் *
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான் *
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே.
208 cĕnnĕl arici ciṟu paruppuc * cĕyta akkāram naṟunĕy pālāl *
paṉṉiraṇṭu tiruvoṇam aṭṭeṉ * paṇṭum ip pil̤l̤ai paricu aṟivaṉ **
iṉṉam ukappaṉ nāṉ ĕṉṟu cŏlli * ĕllām vizhuṅkiṭṭup pontu niṉṟāṉ *
uṉmakaṉ taṉṉai acotai naṅkāy * kūvik kŏl̤l̤āy ivaiyum cilave (7)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

208. A cowherd girl complains, “I made twelve types of sweets with good rice, small lentils, sugar, fragrant ghee and milk for Thiruvonam festival. I know what he does— he already ate my food once before. He gobbled everything up and says he wants more. He stands as if he hasn’t done anything wrong. This is one of his tricks. ” O lovely Yashodā, call your son and ask him to come to you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந்நெல் அரிசி சிவப்பு அரிசியும்; சிறுபருப்பு சிறுபருப்பும் சேர்த்து; செய்த அக்காரம் செய்த சக்கரைப் பொங்கலையும்; நறு நெய் பாலால் மணம்மிக்க நெய் பால் இவற்றால்; பன்னிரண்டு பன்னிரண்டு; திருவோணம் திருவோண நோம்புக்காக பாயச வகைகள் சமைத்து; அட்டேன் வைத்திருந்தேன்; பண்டும் இப் பிள்ளை வெகு நாட்களாக இப்பிள்ளையின்; பரிசு அறிவன் சுபாவத்தை அறிவேன்; எல்லாம் செய்து வைத்த அத்தனையும்; விழுங்கிவிட்டு மிச்சமின்றி விழுங்கிவிட்டு; இன்னம் உகப்பன் இன்னும் சாப்பிட விரும்புகிறேன்; நான் என்று சொல்லி நான் என்று சொல்லிக்கொண்டு; போந்து நின்றான் வந்து நிற்கின்றான்; உன் மகன் தன்னை உன் மகனை; யசோதை நங்காய்! யசோதை பிராட்டியே!; கூவிக் கொள்ளாய் நீ அழைத்துவைத்துக் கொள்வாய்; இவையும் சிலவே இவையும் சிலவே அவனது விஷமங்கள்!
cĕyta akkāram I made sweet pongal with; cĕnnĕl arici red rice; ciṟuparuppu and lentils; tiruvoṇam for Thiruvonam, I made payasams; paṉṉiraṇṭu of twelve different kind; naṟu nĕy pālāl with fragrant ghee and milk; aṭṭeṉ and I kept them; paricu aṟivaṉ I know; paṇṭum ip pil̤l̤ai what He does; viḻuṅkiviṭṭu He gobbles; ĕllām the entire cooked food items; pontu niṉṟāṉ and He come and stands; nāṉ ĕṉṟu cŏlli and says that; iṉṉam ukappaṉ He wants more to eat; yacotai naṅkāy! oh mother Yashoda; kūvik kŏl̤l̤āy please call; uṉ makaṉ taṉṉai your Son; ivaiyum cilave these are some of His mischiefs