Chapter 10

The complaints of the young cowherd girls - (ஆற்றில் இருந்து)

ஆயர்மங்கையர் முறையீடு
The complaints of the young cowherd girls - (ஆற்றில் இருந்து)
Some women were troubled by Krishna's divine pranks. They came to Yashoda and complained about the troubles they had faced. They mentioned the lack of reciprocation for the love they showed.
கண்ணனுடைய திருவிளையாடல்களினால் துன்புற்றார்கள் சில பெண்கள். யசோதையிடம் வந்து தாம் அடைந்த துன்பங்களை முறையிடுகிறார்கள். அன்பைக் காட்டியதற்கேற்றவாறு பரிமாற்றம் செய்யாத குறைகளை எடுத்துக் கூறுகிறார்கள்.
Verses: 213 to 222
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Getting freed from all hurdles
  • PAT 2.10.1
    213 ## ஆற்றில் இருந்து * விளையாடுவோங்களை *
    சேற்றால் எறிந்து * வளை துகில் கைக்கொண்டு **
    காற்றில் கடியனாய் * ஓடி அகம் புக்கு *
    மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (1)
  • PAT 2.10.2
    214 குண்டலம் தாழ * குழல் தாழ நாண் தாழ *
    எண் திசையோரும் * இறைஞ்சித் தொழுது ஏத்த **
    வண்டு அமர் பூங்குழலார் * துகில் கைக்கொண்டு *
    விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் * வேண்டவும் தாரானால் இன்று முற்றும் (2)
  • PAT 2.10.3
    215 தடம் படு தாமரைப் * பொய்கை கலக்கி *
    விடம் படு நாகத்தை * வால் பற்றி ஈர்த்து **
    படம் படு பைந்தலை * மேல் எழப் பாய்ந்திட்டு *
    உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் * உச்சியில் நின்றானால் இன்று முற்றும் (3)
  • PAT 2.10.4
    216 தேனுகன் ஆவி செகுத்துப் * பனங்கனி
    தான் எறிந்திட்ட * தடம் பெருந்தோளினால் *
    வானவர் கோன் விட * வந்த மழை தடுத்து **
    ஆனிரை காத்தானால் இன்று முற்றும் *
    அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் (4)
  • PAT 2.10.5
    217 ஆய்ச்சியர் சேரி * அளை தயிர் பால் உண்டு *
    பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் * பிடியுண்டு **
    வேய்த் தடந்தோளினார் * வெண்ணெய் கோள் மாட்டாது * அங்கு
    ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் * அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (5)
  • PAT 2.10.6
    218 தள்ளித் தளர் நடை யிட்டு * இளம் பிள்ளையாய் *
    உள்ளத்தின் உள்ளே * அவளை உற நோக்கி **
    கள்ளத்தினால் வந்த * பேய்ச்சி முலை உயிர் *
    துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் * துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் (6)
  • PAT 2.10.7
    219 மாவலி வேள்வியில் * மாண் உருவாய்ச் சென்று *
    மூவடி தா என்று * இரந்த இம் மண்ணினை **
    ஒரடி இட்டு * இரண்டாம் அடிதன்னிலே *
    தாவடி இட்டானால் இன்று முற்றும் * தரணி அளந்தானால் இன்று முற்றும் (7)
  • PAT 2.10.8
    220 தாழை தண் ஆம்பல் * தடம் பெரும் பொய்கைவாய் *
    வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் **
    வேழம் துயர் கெட * விண்ணோர் பெருமானாய் *
    ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் * அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் (8)
  • PAT 2.10.9
    221 வானத்து எழுந்த * மழை முகில் போல் எங்கும் *
    கானத்து மேய்ந்து * களித்து விளையாடி **
    ஏனத்து உருவாய் * இடந்த இம் மண்ணினை *
    தானத்தே வைத்தானால் இன்று முற்றும் * தரணி இடந்தானால் இன்று முற்றும் (9)
  • PAT 2.10.10
    222 ## அங் கமலக் கண்ணன்தன்னை * அசோதைக்கு *
    மங்கை நல்லார்கள் * தாம் வந்து முறைப்பட்ட **
    அங்கு அவர் சொல்லைப் * புதுவைக்கோன் பட்டன் சொல் * இங்கு இவை வல்லவர்க்கு * ஏதம் ஒன்று இல்லையே (10)