PAT 2.9.4

கொண்டல் வண்ணன் கோயில் பிள்ளை

205 கொண்டல்வண்ணா! இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய்! இங்கேபோதராயே *
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா! இங்கேபோதராயே *
உண்டுவந்தேன்அம்மமென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும் *
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான்கற்றகல்விதானே.
205 kŏṇṭalvaṇṇā iṅke potarāye * koyil pil̤l̤āy iṅke potarāye *
tĕṇ tirai cūzh tirupperk kiṭanta * tirunāraṇā iṅke potarāye **
uṇṭu vanteṉ ammam ĕṉṟu cŏlli * oṭi akam puka āyccitāṉum *
kaṇṭu ĕtire cĕṉṟu ĕṭuttukkŏl̤l̤ak * kaṇṇapirāṉ kaṟṟa kalvi tāṉe (4)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

205. Yashodā calls Kannan to come to her : “O you with the dark color of a cloud, come, You are the god of Srirangam, come, you are the Naranan of Thirupper (Koiladi) surrounded by the ocean with clear waves, come. He came running into the house and said, “ Mother, I’ve already eaten. ” Yashodā could not get angry with him. She approached him and embraced him. This is the loving trick Yashodā's dear child has learnt.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்டல் வண்ணா! மேகம் போன்ற வண்ணனே!; இங்கே போதராயே இங்கே ஓடி வருவாய்; கோயிற் பிள்ளாய்! திருவரங்கத்து எம்பெருமானே!; இங்கே போதராயே இங்கே ஓடிவருவாய்; தெண் திரை தெள்ளிய அலைகளையுடைய; சூழ் நீரால் சூழப்பட்ட; திருப்பேர் திருப்பேர் நகரிலே; கிடந்த கண் துயிலும்; திருநாரணா! நாராயணனே!; இங்கே போதராயே இங்கே ஓடி வருவாயே!; உண்டு வந்தேன் அம்மம் நான் உணவை உண்டு வந்தேன்; என்று சொல்லி ஓடி என்று கூறி; அகம் புக வீட்டிற்குள் நுழைய; ஆய்ச்சிதானும் தாயான யசோதையும்; கண்டு கண்ணனைக்கண்டு; எதிரே சென்று மகிழ்ந்து எதிரே சென்று; எடுத்துக் கொள்ள எடுத்துக் கொள்ள; கண்ணபிரான் கண்ணபிரான்; கற்ற தானாகவே கற்றுக்கொண்ட வித்தை; கல்வி தானே! கல்விதான் என்ன என்று அகமகிழ்கிறாள்
iṅke potarāye come here; kŏṇṭal vaṇṇā! O you with the dark color of a cloud; koyiṟ pil̤l̤āy! You are the god of Srirangam; iṅke potarāye come here; tirunāraṇā! Narayana!; kiṭanta who reside in; tirupper Thirupper (Koiladi); cūḻ that is surrounded by the ocean; tĕṇ tirai with clear waves; iṅke potarāye come here!; ĕṉṟu cŏlli oṭi he says; uṇṭu vanteṉ ammam that he has already eaten; akam puka and enters the house; āyccitāṉum Mother Yashoda; kaṇṭu seeing Kannan; ĕtire cĕṉṟu she rejoices and goes in front of Him; ĕṭuttuk kŏl̤l̤a and embrances him; kaṇṇapirāṉ Kannan; kalvi tāṉe! educated Himself; kaṟṟa and learnt this trick all by Himself