PAT 2.9.5

சாளக்கிராமனுடைய நம்பி

206 பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப *
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் *
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் *
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.
206 pālaik kaṟantu aṭuppu eṟa vaittup * palval̤aiyāl̤ ĕṉmakal̤ iruppa *
melai akatte nĕruppu veṇṭic cĕṉṟu * iṟaippŏzhutu aṅke peci niṉṟeṉ **
cāl̤akkirāmam uṭaiya nampi * cāyttup parukiṭṭup pontu niṉṟāṉ *
ālaik karumpiṉ mŏzhi aṉaiya * acotai naṅkāy uṉmakaṉaik kūvāy (5)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

206. A cowherdess complains, “I milked the cow and put the milk on the stove, but I found out I didn’t have any fire to light it. I asked my daughter to stay there and went to borrow some fire from a neighbor. As I stood there and chatted with the neighbor for a while, the dear lord of SālakkiRāmam turned over the pot, drank the milk and ran away. O beautiful Yashodā with a voice as sweet as the juice from a sugarcane press, call your son. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாலைக் கறந்து பாலைக் கறந்து பானையிலிட்டு; அடுப்பு ஏற வைத்து அடுப்பில் ஏற்றி; பல் பல வகை; வளையாள் வளையல்களை அணிந்துள்ள; என் மகள் இருப்ப என் மகள் இருக்க; மேலை அகத்தே அடுத்த வீட்டிலிருந்து; நெருப்பு அடுப்பைப் பற்ற வைக்க; வேண்டிச் சென்று நெருப்பு வாங்கி வர; இறைப் பொழுது என்று போனவள் சிறிது நேரம்; அங்கே பேசி பேசிக்கொண்டு; நின்றேன் இருந்து விட்டேன்; சாளக்கிராமம் உடைய நம்பி அதற்குள் கண்ணபிரான்; சாய்த்து அந்தப் பானையைச் சாய்த்து அத்தனை; பருகிட்டு பாலையும் குடித்துவிட்டு; போந்து ஒன்றும் அறியாதவன் போல் வந்து; நின்றான் நின்றான்; உன் மகனைக் உன் பிள்ளையை; கூவாய் அழைத்து வைத்துக்கொள்; ஆலை ஆலையில் இட்ட கரும்பு ரஸத்தின்; கரும்பின் இனிப்பைப் போன்ற; மொழி அனைய இனிய பேச்சையுடைய; அசோதை நங்காய்! யசோதை நங்காய்!; உன் மகனை உன் பிள்ளையை; கூவாய் அழைத்து வைத்துக்கொள்
pālaik kaṟantu i milked the cow and put the milk in a pot; aṭuppu eṟa vaittu on the stove; ĕṉ makal̤ iruppa leaving my daughter nearby; val̤aiyāl̤ who wears bangles of; pal different forms; veṇṭic cĕṉṟu and to get fire; nĕruppu to light my stove; melai akatte I went to my neighbour; iṟaip pŏḻutu i ended up; aṅke peci chatting with my neighbour; niṉṟeṉ for a bit; cāl̤akkirāmam uṭaiya nampi in the meantime, Kannan; cāyttu toppled the pot kept on the stove; parukiṭṭu and drank the entire milk; niṉṟāṉ and stood; pontu as though nothing happened; uṉ makaṉaik your Child; kūvāy keep Him close to you; acotai naṅkāy! O beautiful Yashodā; mŏḻi aṉaiya with a voice; karumpiṉ as sweet as; ālai the juice from a sugarcane press; kūvāy please keep; uṉ makaṉai Your child close to you