PAT 2.9.1

பாலக்கிரீடை அண்ணற் கண்ணன்

202 வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும் *
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம் உன்மகனைக்காவாய் *
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல *
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய். (2)
202 ## vĕṇṇĕy vizhuṅki vĕṟuṅ kalattai vĕṟpiṭai iṭṭu * ataṉ ocai keṭkum
kaṇṇapirāṉ kaṟṟa kalvi taṉṉaik * kākkakillom uṉmakaṉaik kāvāy **
puṇṇil pul̤ip pĕytāl ŏkkum tīmai * purai puraiyāl ivai cĕyya valla *
aṇṇal kaṇṇāṉ or makaṉaip pĕṟṟa * acotai naṅkāy uṉmakaṉaik kūvāy (1) *

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

202. He gulps down butter from our houses and breaks the pots by dashing them on stones with a loud noise with glee. We are unable to control his mischiefs. You should take care of your son. His deeds hurt us like an injury that is rubbed. O lovely Yashodā! You have begotten a son who is capable of doing mischiefs again and again. Call your son!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புண்ணில் உடல் புண்ணில்; புளிப் பெய்தால் புளியைப்பூசியது போல்; ஒக்கும் மேலும் எரிச்சலை உண்டாக்கும்; தீமை செயல்களை; புரை புரையால் மீண்டும் மீண்டும் எல்லோர் வீட்டிலும்; இவை செய்ய வல்ல இவை செய்யவல்ல; அண்ணல் அண்ணன் பலராமனுக்கு; கண்ணான் ஒத்த திறத்தவனாய்; ஓர் மகனைப்பெற்ற ஒரு அழகிய மகனைப்பெற்ற; அசோதை நங்காய் யசோதை பிராட்டியே!; வெண்ணெய் தாழியில்வைத்த வெண்ணெயை; விழுங்கி முற்றிலுமாக விழுங்கி; வெறுங் கலத்தை காலி பாத்திரத்தை; வெற்பிடை இட்டு கல்லின் மேல் போட்டு உடைத்து; அதன் ஓசை கேட்கும் அதன் ஓசை கேட்டு களிக்கும்; கண்ணபிரான் கண்ணபிரான்; கற்ற கல்வி தன்னை கற்ற குறும்புகளை எங்களால்; காக்ககில்லோம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; உன் மகனை நீ உன் பிள்ளையை; காவாய் காத்துக் கொள்வாய்; உன் மகனை தீம்புகள் செய்யும் உன் பிள்ளையை நீ; கூவாய் கூப்பிட்டுக்கொள்வாய்
ivai cĕyya valla Kannan, who is capable of; tīmai mischiefs; purai puraiyāl again and again at our homes; ŏkkum that frustrates us like; pul̤ip pĕytāl rubbing on; puṇṇil an existing wound; acotai naṅkāy mother Yashoda!; or makaṉaippĕṟṟa who yielded a beautiful Son; kaṇṇāṉ with similar abilities to; aṇṇal His brother Balarama; viḻuṅki He completely gulps; vĕṇṇĕy the butter kept in pots; vĕṟpiṭai iṭṭu and by hitting over stone breaks those; vĕṟuṅ kalattai empty pots; ataṉ ocai keṭkum and rejoices the sound of breaking pots; kākkakillom its difficult to tolerate; kaṇṇapirāṉ Kannan's; kaṟṟa kalvi taṉṉai mischiefs; kāvāy you take care; uṉ makaṉai of your Son; kūvāy call your Son; uṉ makaṉai who does these mischiefs