Chapter 6

Kannan clapping His hands together - (மாணிக்கக் கிண்கிணி)

சப்பாணிப் பருவம்
Kannan clapping His hands together - (மாணிக்கக் கிண்கிணி)
Kannan moves His divine body a little. The ornaments with little bells (chathanGgaigaL) adorning His waist are making tingling sounds as He moves! He grins showing His pearl-like teeth. He claps both hands together; His divine hands that perform great deeds! Hearing the sound of clapping, He thinks He has done some unique act! He enjoys the sound of + Read more
கண்ணன் தன் திருமேனியைச் சிறிது அசைக்கிறான். இடுப்பில் கட்டிய சதங்கைகள் ஒலிக்கின்றன! தன் முத்துப் பற்களைக் காட்டிப் புன்முறுவல் செய்கிறான். பெருஞ் செயல்களைச் செய்த இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுகிறான்! அரிய செயலைச் செய்து விட்டதாக நினைக்கிறான்! கைதட்டுவதால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டு + Read more
Verses: 75 to 85
Grammar: Veṇṭaḷaiyāl Vanta Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā (85) / வெண்டளையால் வந்த கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா (85)
Recital benefits: Getting rid of all your deeds / karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.6.1

75 மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் *
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி *
பேணிப்பவளவாய் முத்திலங்க * பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி கருங்குழல் குட்டனே! சப்பாணி. (2)
75 ## மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப * மருங்கின் மேல் *
ஆணிப் பொன்னால் செய்த * ஆய்பொன் உடை மணி
பேணி ** பவளவாய் முத்துஇலங்க * பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி * கருங்குழல் குட்டனே சப்பாணி (1)
75 ## māṇikkak kiṇkiṇi ārppa * maruṅkiṉ mel *
āṇip pŏṉṉāl cĕyta * āypŏṉ uṭai maṇi
peṇi ** paval̤avāy muttuilaṅka * paṇṭu
kāṇi kŏṇṭa kaikal̤āl cappāṇi * karuṅkuzhal kuṭṭaṉe cappāṇi (1)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

75. As the ruby bells (kinkinis) on your feet jingle, the precious gold chain on your waist sways and the pearl-like teeth in your coral mouth shine, you clap the hands that took the land from the king Mahābali. O little one with dark curly hair, clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆணிப் பொன்னால் செய்த தூய தங்கத்தால் செய்த; ஆய் தோஷமில்லாத; பொன் உடை மணி பொன்மணி அரைவடமும்; மருங்கின் மேல் இடுப்பின் மேலே; மாணிக்கக் கிண்கிணி மாணிக்கத்தால் செய்த கிண்கிணி; ஆர்ப்ப சப்திக்க; பேணி விரும்பி; பவளவாய் பவழம்போன்ற அதரமும்; முத்து இலங்க முத்துப்போன்ற பற்களும் பிரகாசிக்க; பண்டு முன்பு ஒரு காலத்தில்; காணி பூமியை; கொண்ட மஹாபலியிடமிருந்து பெற்றுக்கொண்ட; கைகளால் கைகளாலே; சப்பாணி சப்பாணிகொட்ட வேணும்; கருங்குழல் கருத்த கேசத்தையுடைய; குட்டனே! குழந்தாய்; சப்பாணி சப்பாணிகொட்டியருள வேணும்
pŏṉ uṭai maṇi the golden bells; āy with no imperfections; āṇip pŏṉṉāl cĕyta crafted from pure gold; maruṅkiṉ mel is on His waist; māṇikkak kiṇkiṇi anklets with rubies; peṇi wishing; ārppa to make sounds; paval̤avāy His coral-like lips with; muttu ilaṅka the pearl-like teeth that shine; paṇṭu in the olden times; kaikal̤āl with His own hands; kāṇi He got back the earth; kŏṇṭa from the mighty Mahabali; kuṭṭaṉe! oh Child; karuṅkuḻal with dark hair; cappāṇi please clap Your hands; cappāṇi please clap Your hands

PAT 1.6.2

76 பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி *
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட *
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் *
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே! கொட்டாய்சப்பாணி.
76 பொன் அரைநாணொடு * மாணிக்கக் கிண்கிணி *
தன் அரை ஆட * தனிச் சுட்டி தாழ்ந்து ஆட **
என் அரை மேல்நின்று இழிந்து * உங்கள் ஆயர்தம் *
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி * மாயவனே கொட்டாய் சப்பாணி (2)
76 pŏṉ araināṇŏṭu * māṇikkak kiṇkiṇi *
taṉ arai āṭa * taṉic cuṭṭi tāzhntu āṭa **
ĕṉ arai melniṉṟu izhintu * uṅkal̤ āyartam *
maṉ araimel kŏṭṭāy cappāṇi * māyavaṉe kŏṭṭāy cappāṇi (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

76. Tied to the golden chain on your waist, the bells (kinkini) decorated with rubies, tied on your waist jingle, as chutti (ornament on the forehead) swings. You are miraculous! get down from my lap and sit on the lap of Nandagopan, the cowherds' chief, your father and clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் தங்கமயமான; அரைநாணொடு அரைநாணோடுகூட; மாணிக்கக் கிண்கிணி மாணிக்க சதங்கையும்; தன் அரை ஆடத் இடுப்பில் அசைந்து ஒலிக்கவும்; தனிச் சுட்டி தனியான அழகுடைய சுட்டி; தாழ்ந்து ஆட நெற்றியில் தாழ்ந்து ஆட; என் அரை மேல் நின்று என்னுடைய மடியிலிருந்து; இழிந்து இறங்கி; உங்கள் ஆயர் ஆயர்கள் தலைவன்; தம் மன் நந்தகோபருடைய; அரைமேல் மடியிலிருந்து கொண்டு; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; மாயவனே மாயங்களைப் புரிபவனே!; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
araināṇŏṭu Your waist thread; pŏṉ made of gold; māṇikkak kiṇkiṇi containing ruby bells; taṉ arai āṭat sway and make sound; taṉic cuṭṭi an unique beautiful ornament (chutti); tāḻntu āṭa hanging down on the forehead and moving; iḻintu get off; ĕṉ arai mel niṉṟu from my lap; araimel sit on the lap; tam maṉ of Nanadopar; uṅkal̤ āyar the Lord of the cowherd tribe; kŏṭṭāy cappāṇi please clap Your hands !; māyavaṉe One who performs illusions!; kŏṭṭāy cappāṇi please clap Your hands !

PAT 1.6.3

77 பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன *
என்மணிவண்ணன். இலங்குபொற்றோட்டின்மேல் *
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் *
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே! சப்பாணி.
77 பன் மணி முத்து * இன்பவளம் பதித்தன்ன *
என் மணிவண்ணன் * இலங்கு பொன் தோட்டின் மேல் **
நின் மணிவாய் முத்து இலங்க * நின் அம்மைதன் *
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி * ஆழியங் கையனே சப்பாணி (3)
77 paṉ maṇi muttu * iṉpaval̤am patittaṉṉa *
ĕṉ maṇivaṇṇaṉ * ilaṅku pŏṟ toṭṭiṉ mel **
niṉ maṇivāy muttu ilaṅka * niṉ ammaitaṉ *
ammaṇi mel kŏṭṭāy cappāṇi * āzhiyaṅ kaiyaṉe cappāṇi (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

77. O my sapphire-colored child adorned with shining golden earrings with many diamonds, pearls and precious corals, the smile on your jewel-like mouth outshines these and makes your face lovely, come to your mother’s lap and clap your hands. You are the One holding the discus (chakra) in your beautiful hand, clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் மணிவண்ணன்! என் நீலமணி வண்ணனே!; பல் மணி பலவகையான மணிகைளையும்; முத்து முத்துக்களையும்; இன்பவளம் இனிய பவழத்தையும்; பதித்தன்ன பதித்து செய்யப்பட்ட; பொன் தோட்டின் பொற்குண்டலங்களின்; மேல் அழகுக்கும் மேலே; நின் மணிவாய் உன்னுடைய அழகிய திருவாயிலே; முத்து முத்துப்போன்ற; இலங்க பற்கள் தெரிய சிரித்துக்கொண்டு; நின் அம்மை தன் உன் தாய் யசோதையின்; அம் மணிமேல் மடியிலிருந்துகொண்டு; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; ஆழியங் கையனே! திருவாழியை கையிலேந்தியவனே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
ĕṉ maṇivaṇṇaṉ! o Lord with the Blue Sapphire-like hue!; pal maṇi adorned with various gemstones; muttu pearls and; iṉpaval̤am sweet coral; patittaṉṉa studded; pŏṉ toṭṭiṉ golden earrings; muttu Your pearl-likle; ilaṅka teeth that are visible while you smile; niṉ maṇivāy in your beautiful mouth; mel oushines the splendor of Your jewels; am maṇimel as you lie on the lap; niṉ ammai taṉ of your mother Yashoda; kŏṭṭāy cappāṇi please clap Your hands !; āḻiyaṅ kaiyaṉe! the One who holds the divine discus!; cappāṇi please clap Your hands !

PAT 1.6.4

78 தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட *
வானிலாஅம்புலீ! சந்திரா! வாவென்று *
நீநிலாநின்புகழா நின்றஆயர்தம் *
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி.
78 தூ நிலாமுற்றத்தே * போந்து விளையாட *
வான் நிலா அம்புலீ * சந்திரா வா என்று **
நீ நிலா நின் புகழா நின்ற * ஆயர்தம் *
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி * குடந்தைக் கிடந்தானே சப்பாணி (4)
78 tū nilāmuṟṟatte * pontu vil̤aiyāṭa *
vāṉ nilā ampulī * cantirā vā ĕṉṟu **
nī nilā niṉ pukazhā niṉṟa * āyartam *
ko nilāva kŏṭṭāy cappāṇi * kuṭantaik kiṭantāṉe cappāṇi (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

78. Your father, the chief of the cowherds, called the moon, saying, “O bright moon! You crawl in the sky! Come to our porch, shine with your white rays and play with my child. ” Clap your hands so that your father, the chief of the cowherds, will praise you and be happy. You rest in Thiru Kudandai (Kumbakonam), clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் நிலா அம்புலி! வானில் உலவும் ஓ! அம்புலியே!; சந்திரா! ஓ! சந்திரனே!; போந்து வந்து; தூ நிலா வெண்மையான நிலவொளி திகழும்; முற்றத்தே முற்றத்திலே வந்து; விளையாட நான் விளையாடும்படி; வா என்று நீ வருவாயாக என்று சந்திரனை அழைத்து; நிலா நின் நின்றுகொண்டு உன்னைப்; புகழாநின்ற ஆயர் தம் புகழ்கின்ற ஆயர்களுடைய; கோ நிலாவ தலைவராகிய நந்தகோபர் மனம் மகிழ; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; குடந்தைக் திருக்குடந்தையில்; கிடந்தானே! கண்வளருபவனே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
ko nilāva Nandagopar, the leader of; pukaḻāniṉṟa āyar tam the leader of the cowherd tribe; nilā niṉ standing in admiration of you; vā ĕṉṟu calls the Moon to come and stay; vāṉ nilā ampuli! oh radiant moon wandering in the sky!; cantirā! o! moon itself!; pontu come here; muṟṟatte to the porch; tū nilā and illuminate by your light; vil̤aiyāṭa and play with Kannan; kŏṭṭāy cappāṇi please clap Your hands !; kiṭantāṉe! One who resides in; kuṭantaik the sacred abode of Tirukudanthai; cappāṇi please clap Your hands !

PAT 1.6.5

79 புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து *
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே *
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண் *
பட்டிக்கன்றே! கொட்டாய்சப்பாணி பற்பநாபா! கொட்டாய்சப்பாணி.
79 புட்டியில் சேறும் * புழுதியும் கொண்டுவந்து *
அட்டி அமுக்கி * அகம் புக்கு அறியாமே **
சட்டித் தயிரும் * தடாவினில் வெண்ணெயும் உண் *
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி * பற்பநாபா கொட்டாய் சப்பாணி (5)
79 puṭṭiyil ceṟum * puzhutiyum kŏṇṭuvantu *
aṭṭi amukki * akam pukku aṟiyāme **
caṭṭit tayirum * taṭāviṉil vĕṇṇĕyum uṇ *
paṭṭik kaṉṟe kŏṭṭāy cappāṇi * paṟpanāpā kŏṭṭāy cappāṇi (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

79. You filled your hands with mud and dirt from the cowherd village and threw them at me. You entered our house when I was not there and stole yogurt and butter from large pots. You are like a loose calf that is not tied up. Clap your hands, O Padmanābhā, clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புட்டியில் இடுப்பில் படிந்திருக்கும்; சேறும் சேற்றையும்; புழுதியும் புழுதி மண்ணையும்; கொண்டு வந்து கொண்டு வந்து; அட்டி அமுக்கி என்மேல் அழுத்திப்பூசி; அகம் புக்கு வீட்டினுள் புகுந்து; அறியாமே யாருக்கும் தெரியாமல்; சட்டித் தயிரும் சட்டியில் வைத்திருக்கும் தயிரையும்; தடாவினில் பானைகளிலிருக்கிற; வெண்ணெயும் வெண்ணெயையும்; உண் உண்ணுகின்ற; பட்டி பட்டி மேய்ந்து திரியும்; கன்றே! கன்று போன்றவனே!; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்; பற்பனாபா! தாமரைப் பூ நாபியுடையவனே!; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்
kŏṇṭu vantu You bring; ceṟum the dirt; puḻutiyum and soil; puṭṭiyil in Your hands; aṭṭi amukki and apply them on me forcefully; akam pukku You enter the house; aṟiyāme without anyone noticing; caṭṭit tayirum curd kept in the pot; vĕṇṇĕyum and butter; taṭāviṉil in the bowls; paṭṭi You graze and wander; uṇ eat; kaṉṟe! like a calf!; kŏṭṭāy cappāṇi please clap Your hands !; paṟpaṉāpā! the one with a lotus-like navel!; kŏṭṭāy cappāṇi please clap Your hands !

PAT 1.6.6

80 தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது *
போருய்த்துவந்து புகுந்தவர்மண்ணாள *
பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு * அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி தேவகிசிங்கமே! சப்பாணி.
80 தாரித்து நூற்றுவர் * தந்தை சொல் கொள்ளாது *
போர் உய்த்து வந்து * புகுந்தவர் மண் ஆளப் **
பாரித்த மன்னர் படப் * பஞ்சவர்க்கு * அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி * தேவகி சிங்கமே சப்பாணி (6)
80 tārittu nūṟṟuvar * tantai cŏl kŏl̤l̤ātu *
por uyttu vantu * pukuntavar maṇ āl̤ap **
pāritta maṉṉar paṭap * pañcavarkku * aṉṟu
ter uytta kaikal̤āl cappāṇi * tevaki ciṅkame cappāṇi (6)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

80. When a hundred Kauravās did not listen to their father’s advice and came to fight with the Pāndavās, you became the charioteer for Arjunā in the battle and killed the Kauravās who wanted to rule the land. Clap your hands that drove the chariot, O lion-like son of Devaki, clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தந்தை எல்லார்க்கும் பிதாவாகிய; சொல் உனது பேச்சை; தாரித்து கொள்ளாது சொன்னபடி கேட்காமல்; போர் உய்த்து வந்து யுத்தம் செய்யத் தயாராக வந்து; புகுந்தவர் போர்க்களத்தில் பிரவேசித்து; மண் தாங்களே பூமி முழுவதும்; ஆள பாரித்த ஆளுவதற்கு முயற்சி செய்த; மன்னர் அரசர்களாகிய; நூற்றுவர் துரியோதனாதிகள்; பட மாளும்படி; பஞ்சவர்க்கு பாண்டவர்கள் ஐவர்க்கும்; அன்று தேர் உய்த்த அன்று தேர் ஓட்டிய; கைகளால் கைகளாலே; சப்பாணி கொட்டாய்! சப்பாணி கொட்டிடுவாய்!; தேவகி தேவகியின் வயிற்றிற் பிறந்த; சிங்கமே! சிங்கக்குட்டியே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
tārittu kŏl̤l̤ātu withour listening to; cŏl you; tantai who is a Father to everyone; nūṟṟuvar Duryodhana and others; maṉṉar as kings; por uyttu vantu came ready to fight a war; pukuntavar entered the battlefield; āl̤a pāritta with an intention to rule; maṇ all over the world; paṭa to kill them; aṉṟu ter uytta You drove the chariot that day; pañcavarkku for the five Pandavas; kaikal̤āl with the same hands; cappāṇi kŏṭṭāy! please clap Your hands !; tevaki born in the womb of Devaki; ciṅkame! o lion cub!; cappāṇi please clap Your hands !

PAT 1.6.7

81 பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை *
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத *
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க *
சரந்தொட்டகைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே! சப்பாணி.
81 பரந்திட்டு நின்ற * படுகடல் தன்னை *
இரந்திட்ட கைம்மேல் * எறிதிரை மோத **
கரந்திட்டு நின்ற * கடலைக் கலங்க *
சரந் தொட்ட கைகளால் சப்பாணி * சார்ங்க விற்கையனே சப்பாணி (7)
81 parantiṭṭu niṉṟa * paṭukaṭal taṉṉai *
irantiṭṭa kaimmel * ĕṟitirai mota **
karantiṭṭu niṉṟa * kaṭalaik kalaṅka *
caran tŏṭṭa kaikal̤āl cappāṇi * cārṅka viṟkaiyaṉe cappāṇi (7)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

81. When Varunan hid and shot his arrows to stop you Rāma from building a bridge to Lankā, you shot arrows to calm the waves of the ocean and the ocean allowed you to go to Lankā. Clap with the hands that carry the bow Sarnga that shot those arrows. Clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பரந்திட்டு நின்ற விஸ்தீரணமாய் பரந்து நின்ற; படுகடல் ஆழமான சமுத்திரமானது; தன்னை இரந்திட்ட தன்னைக் குறித்து சரணாகதி பண்ணின; கைகளின் மேல் கைகளின் மீது; எறி திரை திவலைகளை வீசும் அலைகள்; மோத மோதும்போது; கடலைக் அக்கடலுக்கு உரிய தேவதையான வருணன்; கலங்க கலங்கும்படி; சரந்தொட்ட அம்புகளை தொடுத்துவிட்ட; கைகளால் திருக்கைகளால்; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; சார்ங்க சார்ங்கமெனும்; விற் கையனே! தனுசை ஏந்தியவனே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
parantiṭṭu niṉṟa spreading expansively; paṭukaṭal that deep ocean; mota clashed; ĕṟi tirai with waves spraying droplets; kaikal̤iṉ mel upon the hands; taṉṉai irantiṭṭa that surrendered to it; kalaṅka to disturb; kaṭalaik Varunan, the god of ocean; carantŏṭṭa You released the arrows; kaikal̤āl from the divine hands; cappāṇi please clap Your hands !; viṟ kaiyaṉe! the One who holds the bow named; cārṅka Sarangam; cappāṇi please clap Your hands !

PAT 1.6.8

82 குரக்கினத்தாலே குரைகடல்தன்னை *
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை *
அரக்கர்அவிய அடுகணையாலே *
நெருக்கியகைகளால்சப்பாணி நேமியங்கையனே! சப்பாணி.
82 குரக்கு இனத்தாலே * குரைகடல் தன்னை *
நெருக்கி அணை கட்டி * நீள் நீர் இலங்கை **
அரக்கர் அவிய * அடு கணையாலே *
நெருக்கிய கைகளால் சப்பாணி * நேமியங் கையனே சப்பாணி (8)
82 kurakku iṉattāle * kuraikaṭal taṉṉai *
nĕrukki aṇai kaṭṭi * nīl̤ nīr ilaṅkai **
arakkar aviya * aṭu kaṇaiyāle *
nĕrukkiya kaikal̤āl cappāṇi * nemiyaṅ kaiyaṉe cappāṇi (8)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

82. (In Rāma Avatār), the monkeys, your helpers, built a strong bridge on the roaring ocean and you went to Lankā, shot your arrows on the battlefield and killed the Rakshasās, the rulers of Lankā surrounded by wide oceans. Clap your hands that shot those arrows, You hold the discus (chakra) in your hands, clap.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குரைகடல் தன்னை ஒலிகடலின் நடுவே; குரக்கு இனத்தாலே குரங்குகளின் கூட்டத்தாலே; நெருக்கி இரண்டு பக்கமும் நீர் தேங்கும்படி; அணைகட்டி அணைகட்டி; நீள் நீர் பரந்த கடலினால் சூழ்ந்த; இலங்கை இலங்கையிலுள்ள; அரக்கர் அவிய அரக்கர்கள் அழியும்படி; அடு அழிக்கும் திறனுயுடைய; கணையாலே பாணங்களால்; நெருக்கிய யுத்தம் செய்த; கைகளால் உன் கரங்களால்; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; நேமியங் கையனே! சக்கரத்தாழ்வானே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
arakkar aviya to destroy the demons; ilaṅkai in Sri Lanka; aṇaikaṭṭi You constructed a bridge; nīl̤ nīr surrounded by vast sea; nĕrukki to collect water on both sides; kurakku iṉattāle by the gathering of monkeys; kuraikaṭal taṉṉai in the midst of the sound ocean; nĕrukkiya You succeeded in the war; kaṇaiyāle using the arrows that; aṭu possesed destroying power; kaikal̤āl with Your hands; cappāṇi please clap Your hands !; nemiyaṅ kaiyaṉe! o One who wields the discus!; cappāṇi please clap Your hands !

PAT 1.6.9

83 அளந்திட்டதூணை அவன்தட்ட * ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் *
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் *
பிளந்திட்டகைகளால்சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி.
83 அளந்து இட்ட தூணை * அவன் தட்ட * ஆங்கே
வளர்ந்திட்டு * வாள் உகிர்ச் சிங்க உருவாய் **
உளன் தொட்டு இரணியன் * ஒண்மார்வு அகலம் *
பிளந்திட்ட கைகளால் சப்பாணி * பேய் முலை உண்டானே சப்பாணி (9)
83 al̤antu iṭṭa tūṇai * avaṉ taṭṭa * āṅke
val̤arntiṭṭu * vāl̤ ukirc ciṅka uruvāy **
ul̤aṉ tŏṭṭu iraṇiyaṉ * ŏṇmārvu akalam *
pil̤antiṭṭa kaikal̤āl cappāṇi * pey mulai uṇṭāṉe cappāṇi (9)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

83. When Hiranyan kicked the pillar he had built with care, You emerged in the form of a huge man-lion (Narasimhā) and split open his strong chest with your shining claws. You drank the milk from the breasts of the female devil Putanā and killed her. Clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அளந்து இட்ட தானே அளந்து கட்டின; தூணை கம்பத்தை; அவன் அந்த இரண்யாசுரனே; தட்ட சீறி உதைக்க; ஆங்கே அந்த இடத்திலேயே; வாள் கத்தி போன்ற; உகிர் கூர்மையான நகங்களையுடைய; சிங்க உருவாய் நரசிம்ம மூர்த்தியாய்; வளர்ந்திட்டு வளர்ந்த வடிவத்துடன் தோன்ற; உளந்தொட்டு அவன் மனதை சோதித்துவிட்டு; இரணியன் அவ்விரணியனுடைய; ஒண்மார்வு அகலம் ஒளிவிடும் அகன்ற மார்பை; பிளந்திட்ட கைகளால் கிழித்த கைகளால்; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; பேய்முலை பூதனையின் பாலை; உண்டானே! உண்டவனே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
ciṅka uruvāy in the form of Lord Narasimha; val̤arntiṭṭu You appeared; tūṇai from the pillar; avaṉ that Hiranyakashipu; al̤antu iṭṭa cafefully constructed; taṭṭa You leapt to strike; āṅke in that very place; vāl̤ with knife-like; ukir sharp nails; ul̤antŏṭṭu after testing him; pil̤antiṭṭa kaikal̤āl by Your hands; ŏṇmārvu akalam You tore open the radiant broad chest; cappāṇi please clap Your hands !; iraṇiyaṉ of Hiranyakashipu; uṇṭāṉe! the One who drank!; peymulai milk of Putanā; cappāṇi please clap Your hands !

PAT 1.6.10

84 அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை *
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி *
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக *
கடைந்திட்டகைகளால்சப்பாணி கார்முகில்வண்ணனே! சப்பாணி.
84 அடைந்திட்டு அமரர்கள் * ஆழ்கடல் தன்னை *
மிடைந்திட்டு மந்தரம் * மத்தாக நாட்டி **
வடம் சுற்றி * வாசுகி வன்கயிறு ஆக *
கடைந்திட்ட கைகளால் சப்பாணி * கார்முகில் வண்ணனே சப்பாணி (10)
84 aṭaintiṭṭu amararkal̤ * āzhkaṭal taṉṉai *
miṭaintiṭṭu mantaram * mattāka nāṭṭi **
vaṭam cuṟṟi * vācuki vaṉkayiṟu āka *
kaṭaintiṭṭa kaikal̤āl cappāṇi * kārmukil vaṇṇaṉe cappāṇi (10)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

84. The Devās surrendered at your feet, sought your grace to get back their lost glory. You joined them and helped them churn the milky ocean using the mountain Mandara as a churning stick and the snake Vāsuki as the strong rope. Clap with the hands that churned the milky ocean, You who are as beautiful as dark clouds, clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரர்கள் தூர்வாசமுனியின் சாபத்தால் இழந்த ஐஸ்வர்யத்தைப்; அடைந்திட்டு உன்னை சரணமடைய அடைவதற்காக; ஆழ்கடல் தன்னை நீ ஆழமான க்ஷீராப்தியை; மிடைந்திட்டு நெருங்கி; மந்தரம் மந்தர மலையை; மத்தாக நாட்டி மத்தாகும்படி நிறுத்தி; வடம் சுற்றி வாசுகி வாசுகியெனும் பாம்பை; வடம் சுற்றி வலிய கயிறாக்கி; வன் கயிறாக கடையும் கயிறாகச் சுற்றி; கடைந்திட்ட அமிர்தம் வரும்வரை கடைந்த; கைகளால் சப்பாணி கைகளால் ச ப்பாணி கொட்டிடுவாய்!; கார்முகில் கருத்த மேகம் போன்ற; வண்ணனே! நிறமுடையவனே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
amararkal̤ After Devas lost propsperity by the curse of sage Dhurvasa; aṭaintiṭṭu they seeked refuge in You; miṭaintiṭṭu You approached; āḻkaṭal taṉṉai the deep ocean; vaṉ kayiṟāka You heled churn the ocean; mantaram using Mandara mountain; mattāka nāṭṭi as a churning stick; vaṭam cuṟṟi vācuki and a snake called Vasuki; vaṭam cuṟṟi as a strong rope; kaṭaintiṭṭa They churned until nectar emerges; kaikal̤āl cappāṇi please clap Your hands !; vaṇṇaṉe! One with skin color of; kārmukil dark hued clouds; cappāṇi please clap Your hands !

PAT 1.6.11

85 ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை *
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன் *
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும் *
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2)
85 ## ஆட்கொள்ளத் தோன்றிய * ஆயர்தம் கோவினை *
நாட்கமழ் பூம்பொழில் * வில்லிபுத்தூர்ப் பட்டன் **
வேட்கையால் சொன்ன * சப்பாணி ஈரைந்தும் *
வேட்கையினால் சொல்லுவார் * வினை போமே (11)
85 ## āṭkŏl̤l̤at toṉṟiya * āyartam koviṉai *
nāṭkamazh pūmpŏzhil * villiputtūrp paṭṭaṉ **
veṭkaiyāl cŏṉṉa * cappāṇi īraintum *
veṭkaiyiṉāl cŏlluvār * viṉai pome (11)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

85. Vishnu Pattan of Villiputhur that is surrounded by blooming groves that spread fragrance all day composed with love ten Tamil pāsurams praising Kannan, the king of the cowherds, born to protect the cowherds. Those who recite these ten pāsurams about Kannan clapping his hands, will get rid of the ills of karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆட்கொள்ளத் அனைவரையும் அடிமை படுத்திக்கொள்ள; தோன்றிய பிறந்த; ஆயர் தம் ஆயர்கள் தலைவனான; கோவினை கண்ணனை; நாட் கமழ் நாள்தோறும் மணம் வீசுகின்ற; பூம் புஷ்பங்களையுடைய; பொழில் சோலைகளாலே சூழ்ந்த; வில்லிபுத்தூர்ப் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த; பட்டன் பெரியாழ்வார்; வேட்கையால் சொன்ன விரும்பிச் சொன்ன; சப்பாணி சப்பாணி கொட்டுதலை கூறும்; ஈரைந்தும் பத்துப் பாசுரங்களையும்; வேட்கையினால் ஆசையுடன்; சொல்லுவார் அனுசந்திப்பவர்களின்; வினைபோமே துன்பங்கள் தீரும்
koviṉai Kannan was; toṉṟiya was born to be; āyar tam the leader of the cowherd tribe; āṭkŏl̤l̤at and to make everyone subservient; paṭṭaṉ Periyāzhvār was; villiputtūrp born in Srivilliputhu; pŏḻil that was surrounded by gardens; pūm containing flowers; nāṭ kamaḻ that emanated fragrance everyday; veṭkaiyāl cŏṉṉa Periyāzhvār wrote; īraintum these divine verses; cappāṇi that focuses on Kannan clapping His hands; veṭkaiyiṉāl with love; cŏlluvār those who recite; viṉaipome will get rid of their sufferings