PAT 1.6.2

மாயவன் கண்ணன்

76 பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி *
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட *
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் *
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே! கொட்டாய்சப்பாணி.
76 pŏṉ araināṇŏṭu * māṇikkak kiṇkiṇi *
taṉ arai āṭa * taṉic cuṭṭi tāzhntu āṭa **
ĕṉ arai melniṉṟu izhintu * uṅkal̤ āyartam *
maṉ araimel kŏṭṭāy cappāṇi * māyavaṉe kŏṭṭāy cappāṇi (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

76. Tied to the golden chain on your waist, the bells (kinkini) decorated with rubies, tied on your waist jingle, as chutti (ornament on the forehead) swings. You are miraculous! get down from my lap and sit on the lap of Nandagopan, the cowherds' chief, your father and clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் தங்கமயமான; அரைநாணொடு அரைநாணோடுகூட; மாணிக்கக் கிண்கிணி மாணிக்க சதங்கையும்; தன் அரை ஆடத் இடுப்பில் அசைந்து ஒலிக்கவும்; தனிச் சுட்டி தனியான அழகுடைய சுட்டி; தாழ்ந்து ஆட நெற்றியில் தாழ்ந்து ஆட; என் அரை மேல் நின்று என்னுடைய மடியிலிருந்து; இழிந்து இறங்கி; உங்கள் ஆயர் ஆயர்கள் தலைவன்; தம் மன் நந்தகோபருடைய; அரைமேல் மடியிலிருந்து கொண்டு; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; மாயவனே மாயங்களைப் புரிபவனே!; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
araināṇŏṭu Your waist thread; pŏṉ made of gold; māṇikkak kiṇkiṇi containing ruby bells; taṉ arai āṭat sway and make sound; taṉic cuṭṭi an unique beautiful ornament (chutti); tāḻntu āṭa hanging down on the forehead and moving; iḻintu get off; ĕṉ arai mel niṉṟu from my lap; araimel sit on the lap; tam maṉ of Nanadopar; uṅkal̤ āyar the Lord of the cowherd tribe; kŏṭṭāy cappāṇi please clap Your hands !; māyavaṉe One who performs illusions!; kŏṭṭāy cappāṇi please clap Your hands !