PAT 1.6.4

திருக்குடந்தை ஆராவமுது

78 தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட *
வானிலாஅம்புலீ! சந்திரா! வாவென்று *
நீநிலாநின்புகழா நின்றஆயர்தம் *
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி.
78 tū nilāmuṟṟatte * pontu vil̤aiyāṭa *
vāṉ nilā ampulī * cantirā vā ĕṉṟu **
nī nilā niṉ pukazhā niṉṟa * āyartam *
ko nilāva kŏṭṭāy cappāṇi * kuṭantaik kiṭantāṉe cappāṇi (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

78. Your father, the chief of the cowherds, called the moon, saying, “O bright moon! You crawl in the sky! Come to our porch, shine with your white rays and play with my child. ” Clap your hands so that your father, the chief of the cowherds, will praise you and be happy. You rest in Thiru Kudandai (Kumbakonam), clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் நிலா அம்புலி! வானில் உலவும் ஓ! அம்புலியே!; சந்திரா! ஓ! சந்திரனே!; போந்து வந்து; தூ நிலா வெண்மையான நிலவொளி திகழும்; முற்றத்தே முற்றத்திலே வந்து; விளையாட நான் விளையாடும்படி; வா என்று நீ வருவாயாக என்று சந்திரனை அழைத்து; நிலா நின் நின்றுகொண்டு உன்னைப்; புகழாநின்ற ஆயர் தம் புகழ்கின்ற ஆயர்களுடைய; கோ நிலாவ தலைவராகிய நந்தகோபர் மனம் மகிழ; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; குடந்தைக் திருக்குடந்தையில்; கிடந்தானே! கண்வளருபவனே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
ko nilāva Nandagopar, the leader of; pukaḻāniṉṟa āyar tam the leader of the cowherd tribe; nilā niṉ standing in admiration of you; vā ĕṉṟu calls the Moon to come and stay; vāṉ nilā ampuli! oh radiant moon wandering in the sky!; cantirā! o! moon itself!; pontu come here; muṟṟatte to the porch; tū nilā and illuminate by your light; vil̤aiyāṭa and play with Kannan; kŏṭṭāy cappāṇi please clap Your hands !; kiṭantāṉe! One who resides in; kuṭantaik the sacred abode of Tirukudanthai; cappāṇi please clap Your hands !