PAT 1.6.3

ஆழியங்கையன்

77 பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன *
என்மணிவண்ணன். இலங்குபொற்றோட்டின்மேல் *
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் *
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே! சப்பாணி.
77 paṉ maṇi muttu * iṉpaval̤am patittaṉṉa *
ĕṉ maṇivaṇṇaṉ * ilaṅku pŏṟ toṭṭiṉ mel **
niṉ maṇivāy muttu ilaṅka * niṉ ammaitaṉ *
ammaṇi mel kŏṭṭāy cappāṇi * āzhiyaṅ kaiyaṉe cappāṇi (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

77. O my sapphire-colored child adorned with shining golden earrings with many diamonds, pearls and precious corals, the smile on your jewel-like mouth outshines these and makes your face lovely, come to your mother’s lap and clap your hands. You are the One holding the discus (chakra) in your beautiful hand, clap your hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் மணிவண்ணன்! என் நீலமணி வண்ணனே!; பல் மணி பலவகையான மணிகைளையும்; முத்து முத்துக்களையும்; இன்பவளம் இனிய பவழத்தையும்; பதித்தன்ன பதித்து செய்யப்பட்ட; பொன் தோட்டின் பொற்குண்டலங்களின்; மேல் அழகுக்கும் மேலே; நின் மணிவாய் உன்னுடைய அழகிய திருவாயிலே; முத்து முத்துப்போன்ற; இலங்க பற்கள் தெரிய சிரித்துக்கொண்டு; நின் அம்மை தன் உன் தாய் யசோதையின்; அம் மணிமேல் மடியிலிருந்துகொண்டு; கொட்டாய் சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!; ஆழியங் கையனே! திருவாழியை கையிலேந்தியவனே!; சப்பாணி சப்பாணி கொட்டிடுவாய்!
ĕṉ maṇivaṇṇaṉ! o Lord with the Blue Sapphire-like hue!; pal maṇi adorned with various gemstones; muttu pearls and; iṉpaval̤am sweet coral; patittaṉṉa studded; pŏṉ toṭṭiṉ golden earrings; muttu Your pearl-likle; ilaṅka teeth that are visible while you smile; niṉ maṇivāy in your beautiful mouth; mel oushines the splendor of Your jewels; am maṇimel as you lie on the lap; niṉ ammai taṉ of your mother Yashoda; kŏṭṭāy cappāṇi please clap Your hands !; āḻiyaṅ kaiyaṉe! the One who holds the divine discus!; cappāṇi please clap Your hands !