அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய் உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி -1 6-9 –
பதவுரை
அளந்திட்ட–(தானே) அளந்து கட்டின தூணை–கம்பத்தை அவன்–அந்த ஹிரண்யாஸுரன் (தானே) தட்ட-புடைக்க ஆங்கே–(அவன் புடைத்த) அந்த இடத்திலேயே வாள் உகிர்–கூர்மையான நகங்களை யுடைய சிங்கம் உரு ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்