Chapter 5
Crawling Kannan - (உய்ய உலகு)
Kannan with bent knees balancing on both His hands on the ground, lifts His head and nods with a playful intent. Yashoda was mesmerized by this! ‘ Oh beautiful boy! You are my joyfully overflowing nectar! Let me see you nod and play for me just once”, she beseeches Him.
கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந் தாள்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு தலையை நிமிர்த்தி அசைத்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை! "அழகனே! இன்ப ஊற்றாக அமையும் அமுதே! எனக்காக ஒரே ஒரு முறை தலையசைத்து விளையாடிக் காட்டு" என்று வேண்டுகிறாள் அவள்.
Verses: 64 to 74
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Become famous in all the eight directions and be happy
- PAT 1.5.1
64 ## உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா * ஊழிதோறு ஊழி பல ஆலின் இலையதன்மேல் *
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே * பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே **
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி * செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக *
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (1) - PAT 1.5.2
65 கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் * குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் *
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி * மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வர **
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் * கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே *
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (2) - PAT 1.5.3
66 நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே * நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும் * தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் **
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் * விரவிய வேலைதனுள் வென்று வருமவனே *
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (3) - PAT 1.5.4
67 வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள * வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே *
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் * கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே **
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் * என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் *
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (4) - PAT 1.5.5
68 மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார் * வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி * ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை * ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் **
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன் * முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய *
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (5) - PAT 1.5.6
69 காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா * கானக மா மடுவில் காளியன் உச்சியிலே *
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா * துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே *
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை * அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய் *
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (6) - PAT 1.5.7
70 துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால் * தூய கருங்குழல் நல் தோகைமயில் அனைய *
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழ் அவிய * நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே **
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் * தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய * என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (7) - PAT 1.5.8
71 உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி * உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் *
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர * கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி **
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் * மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே *
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (8) - PAT 1.5.9
72 பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் * பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர *
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் * கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக **
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே * நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ *
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (9) - PAT 1.5.10
73 செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் * சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் * அரையில்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் * பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் **
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் * மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக *
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (10) - PAT 1.5.11
74 ## அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் * ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே *
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று **
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு * ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் *
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் * உலகில் எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே (11)