Chapter 6

Kannan clapping His hands together - (மாணிக்கக் கிண்கிணி)

சப்பாணிப் பருவம்
Kannan clapping His hands together - (மாணிக்கக் கிண்கிணி)
Kannan moves His divine body a little. The ornaments with little bells (chathanGgaigaL) adorning His waist are making tingling sounds as He moves! He grins showing His pearl-like teeth. He claps both hands together; His divine hands that perform great deeds! Hearing the sound of clapping, He thinks He has done some unique act! He enjoys the sound of + Read more
கண்ணன் தன் திருமேனியைச் சிறிது அசைக்கிறான். இடுப்பில் கட்டிய சதங்கைகள் ஒலிக்கின்றன! தன் முத்துப் பற்களைக் காட்டிப் புன்முறுவல் செய்கிறான். பெருஞ் செயல்களைச் செய்த இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுகிறான்! அரிய செயலைச் செய்து விட்டதாக நினைக்கிறான்! கைதட்டுவதால் ஏற்பட்ட ஓசையைக் கேட்டு + Read more
Verses: 75 to 85
Grammar: Veṇṭaḷaiyāl Vanta Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā (85) / வெண்டளையால் வந்த கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா (85)
Recital benefits: Getting rid of all your deeds / karma
  • PAT 1.6.1
    75 ## மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப * மருங்கின் மேல் *
    ஆணிப் பொன்னால் செய்த * ஆய்பொன் உடை மணி
    பேணி ** பவளவாய் முத்துஇலங்க * பண்டு
    காணி கொண்ட கைகளால் சப்பாணி * கருங்குழல் குட்டனே சப்பாணி (1)
  • PAT 1.6.2
    76 பொன் அரைநாணொடு * மாணிக்கக் கிண்கிணி *
    தன் அரை ஆட * தனிச் சுட்டி தாழ்ந்து ஆட **
    என் அரை மேல்நின்று இழிந்து * உங்கள் ஆயர்தம் *
    மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி * மாயவனே கொட்டாய் சப்பாணி (2)
  • PAT 1.6.3
    77 பன் மணி முத்து * இன்பவளம் பதித்தன்ன *
    என் மணிவண்ணன் * இலங்கு பொன் தோட்டின் மேல் **
    நின் மணிவாய் முத்து இலங்க * நின் அம்மைதன் *
    அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி * ஆழியங் கையனே சப்பாணி (3)
  • PAT 1.6.4
    78 தூ நிலாமுற்றத்தே * போந்து விளையாட *
    வான் நிலா அம்புலீ * சந்திரா வா என்று **
    நீ நிலா நின் புகழா நின்ற * ஆயர்தம் *
    கோ நிலாவ கொட்டாய் சப்பாணி * குடந்தைக் கிடந்தானே சப்பாணி (4)
  • PAT 1.6.5
    79 புட்டியில் சேறும் * புழுதியும் கொண்டுவந்து *
    அட்டி அமுக்கி * அகம் புக்கு அறியாமே **
    சட்டித் தயிரும் * தடாவினில் வெண்ணெயும் உண் *
    பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி * பற்பநாபா கொட்டாய் சப்பாணி (5)
  • PAT 1.6.6
    80 தாரித்து நூற்றுவர் * தந்தை சொல் கொள்ளாது *
    போர் உய்த்து வந்து * புகுந்தவர் மண் ஆளப் **
    பாரித்த மன்னர் படப் * பஞ்சவர்க்கு * அன்று
    தேர் உய்த்த கைகளால் சப்பாணி * தேவகி சிங்கமே சப்பாணி (6)
  • PAT 1.6.7
    81 பரந்திட்டு நின்ற * படுகடல் தன்னை *
    இரந்திட்ட கைம்மேல் * எறிதிரை மோத **
    கரந்திட்டு நின்ற * கடலைக் கலங்க *
    சரந் தொட்ட கைகளால் சப்பாணி * சார்ங்க விற்கையனே சப்பாணி (7)
  • PAT 1.6.8
    82 குரக்கு இனத்தாலே * குரைகடல் தன்னை *
    நெருக்கி அணை கட்டி * நீள் நீர் இலங்கை **
    அரக்கர் அவிய * அடு கணையாலே *
    நெருக்கிய கைகளால் சப்பாணி * நேமியங் கையனே சப்பாணி (8)
  • PAT 1.6.9
    83 அளந்து இட்ட தூணை * அவன் தட்ட * ஆங்கே
    வளர்ந்திட்டு * வாள் உகிர்ச் சிங்க உருவாய் **
    உளன் தொட்டு இரணியன் * ஒண்மார்வு அகலம் *
    பிளந்திட்ட கைகளால் சப்பாணி * பேய் முலை உண்டானே சப்பாணி (9)
  • PAT 1.6.10
    84 அடைந்திட்டு அமரர்கள் * ஆழ்கடல் தன்னை *
    மிடைந்திட்டு மந்தரம் * மத்தாக நாட்டி **
    வடம் சுற்றி * வாசுகி வன்கயிறு ஆக *
    கடைந்திட்ட கைகளால் சப்பாணி * கார்முகில் வண்ணனே சப்பாணி (10)
  • PAT 1.6.11
    85 ## ஆட்கொள்ளத் தோன்றிய * ஆயர்தம் கோவினை *
    நாட்கமழ் பூம்பொழில் * வில்லிபுத்தூர்ப் பட்டன் **
    வேட்கையால் சொன்ன * சப்பாணி ஈரைந்தும் *
    வேட்கையினால் சொல்லுவார் * வினை போமே (11)