புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து அட்டி யமுக்கி யகம் புக்கறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பத்ம நாபா கொட்டாய் சப்பாணி -1 6-5 –
பதவுரை
புட்டியில்–திருவரையிற் படிந்த சேறும்–சேற்றையும் புழுதியும்–புழுதி மண்ணையும் கொண்டு வந்து–கொணர்ந்து வந்து அட்டி–(என் மேல்) இட்டு அமுக்கி–உறைக்கப் பூசி அகம் புக்கு–வீட்டினில் புகுந்து