Chapter 5

Crawling Kannan - (உய்ய உலகு)

செங்கீரைப் பருவம்
Crawling Kannan - (உய்ய உலகு)
Kannan with bent knees balancing on both His hands on the ground, lifts His head and nods with a playful intent. Yashoda was mesmerized by this! ‘ Oh beautiful boy! You are my joyfully overflowing nectar! Let me see you nod and play for me just once”, she beseeches Him.
கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந் தாள்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு தலையை நிமிர்த்தி அசைத்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை! "அழகனே! இன்ப ஊற்றாக அமையும் அமுதே! எனக்காக ஒரே ஒரு முறை தலையசைத்து விளையாடிக் காட்டு" என்று வேண்டுகிறாள் அவள்.
Verses: 64 to 74
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Become famous in all the eight directions and be happy
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.5.1

64 உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா!
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல் *
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே!
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே! *
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக *
ஐய! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. (2)
64 ## உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா * ஊழிதோறு ஊழி பல ஆலின் இலையதன்மேல் *
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே * பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே **
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி * செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக *
ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (1)
64 ## uyya ulaku paṭaittu uṇṭa maṇivayiṟā * ūzhitoṟu ūzhi pala āliṉ ilaiyataṉmel *
paiya uyoku-tuyil kŏṇṭa paramparaṉe * paṅkaya nīl̤ nayaṉattu añcaṉa meṉiyaṉe **
cĕyyaval̤ niṉ akalam cemam ĕṉak karuti * cĕlvu pŏli makarak kātu tikazhntu ilaka *
aiya! ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (1)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

64. You, the highest one, You created the world and protected it (from deluge), swallowed into your beautiful stomach You rest gently on a floating banyan leaf on the ocean for ages limitless, whenever the world ends and begins again. You have a body dark as kohl, Your eyes are long and beautiful like lotus flowers and your ears are decorated with precious shining emeralds. O dear one, crawl gently. Do not shake Lakshmi, the goddess of wealth who stays on your chest. You should think of her safety. Shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உய்ய உலகு மக்கள் வாழ்வதற்காக உலகங்களைப்; படைத்து படைத்து; உண்ட பிரளயம் வந்தபோது; மணி வயிறா! திரு வயிற்றில் வைத்துக் காத்தவனே!; ஊழி தோறு ஊழி பல பல பல யுகங்கள்; ஆலின் இலையதன்மேல் ஆலிலையின் மேல்; பைய மெள்ள; உயோகு துயில் கொண்ட யோகநித்திரை செய்த; பரம்பரனே! பரமாத்மாவே; பங்கய நீள் தாமரை போன்றுள்ள; நயனத்து நீண்ட கண்ணழகனே!; அஞ்சன மேனியனே! மை போன்ற திருமேனியனே!; செய்யவள் தாமரை மலராள் லக்ஷ்மிக்கு இருப்பிடமானவனே!; நின் அகலம் உன்னுடைய திருமார்பானது; சேமம் எனக் கருதி சேமமான இடம் என கருதி; செல்வு பொலி செல்வப் பொலிவுடன்; மகரக் காது மகர வடிவ காதணிகள்; திகழ்ந்து இலக சிறந்து விளங்க; ஐய! எனக்கு ஒருகால் அப்பனே எனக்காக ஒரு முறை; ஆடுக செங்கீரை செங்கீரை ஆடுவாயாக; ஆயர்கள் இடையர்களின்; போரேறே! போர்க் காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
paṭaittu You created; uyya ulaku the worlds for people to live in; uṇṭa during the great deluge; maṇi vayiṟā! You kept and protected them in you divine belly; ūḻi tŏṟu ūḻi pala for countless yugas; āliṉ ilaiyataṉmel resting on top of the banyan leaf; paiya slowly; uyoku tuyil kŏṇṭa and performed yogic sleep; paramparaṉe! oh Paramatma; paṅkaya nīl̤ with lotus-like; nayaṉattu long beautiful eyes!; añcaṉa meṉiyaṉe! One with dark hued skin; niṉ akalam Your divine chest; cĕyyaval̤ is the abode of Goddess Lakshmi; cemam ĕṉak karuti and therefore is divine; tikaḻntu ilaka decorating your ears; makarak kātu with fish-shaped ear ornaments that looked; cĕlvu pŏli brilliant; aiya! ĕṉakku ŏrukāl oh Lord, I pray for a moment; āṭuka cĕṅkīrai please dance in a red silk garment for me; āyarkal̤ He is the prince of the cowherd tribe; poreṟe! oh war bull!; āṭuka, āṭukave dance, dance!

PAT 1.5.2

65 கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்! *
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர *
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
கருதிவரைக்குடையாக்காலிகள் காப்பவனே!
ஆள! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
65 கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் * குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் *
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி * மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வர **
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் * கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே *
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (2)
65 kol̤ariyiṉ uruvaṅ kŏṇṭu avuṇaṉ uṭalam * kuruti kuzhampi ĕzha kūr ukirāl kuṭaivāy *
mīl̤a avaṉmakaṉai mĕymmai kŏl̤ak karuti * melai amararpati mikku vĕkuṇṭu vara **
kāl̤a naṉ mekamavai kallŏṭu kāl pŏzhiyak * karuti varai kuṭaiyāk kālikal̤ kāppavaṉe *
āl̤a ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (2)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

65. You took the form of a man- lion (Narasimhā) to prove Hiranya's son Prahlāda's words as true and split Hiranyan's body with your sharp claws as the asura's blood oozed out and flowed everywhere. When Indra the king of gods got angry with you for eating the offerings the cowherds kept for him, he made the dark clouds pour stones as rain and the winds blow wildly, You lifted Govardhanā mountain as an umbrella and protected the cows. Shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோளரியின் வலிமைமிக்க சிங்கத்தின்; உருவங்கொண்டு உருவத்தை எடுத்துக்கொண்டு; அவுணன் உடலம் ஹிரண்யாசுரனுடைய சரீரத்தில்; குருதி குழம்பி எழ மீள ரத்தம் கிளரி எழும்படியாகவும் மறுபடியும்; அவன் அவ்வசுரன்; மகனை தன் மகனான பிரகலாதனை; மெய்ம்மை ஸத்யவாதி; கொள கருதி என நினைக்கச்செய்யக் கருதி; கூர் உகிரால் கூர்மையான நகங்களாலே; குடைவாய்! கிழித்தருளினவனே!; மேலை அமரர்பதி மேன்மைபொருந்திய தேவேந்திரன்; மிக்கு வெகுண்டு வர மிகுந்த கோபமுடன் வர; காள நன் மேகம் அவை கருத்த சிறந்த மேகமானவை; கல்லொடு கால் பொழிய கல் கட்டிமழையைப் பொழிய; கருதி வரை முன்னொருகாலத்தில் செய்ததைப் போல்; குடையாக் கோவர்த்தன கிரியைக் குடையாகக்கொண்டு; காலிகள் பசுக்களை; காப்பவனே! காத்தவனே!; ஆள! சிறந்த ஆண்பிள்ளையே!; எனக்கு ஒருகால் எனக்காக ஒரு முறை; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஆயர்கள் இடையர்களின்; போரேறே! போர்க் காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
uruvaṅkŏṇṭu You assumed the form of; kol̤ariyiṉ a mighty lion; kuruti kuḻampi ĕḻa mīl̤a and tore apart and blood spurt forth; avuṇaṉ uṭalam from Hiranyakashipu's body; mĕymmai to prove; makaṉai his son Prahlada's words; kŏl̤a karuti you killed; avaṉ that asuran; kūr ukirāl with sharp claws; kuṭaivāy! and defeated him; karuti varai like the olden times; melai amararpati when the noble Indra; mikku vĕkuṇṭu vara came with great anger; kāl̤a naṉ mekam avai and created great dark clouds; kallŏṭu kāl pŏḻiya showered rain with hails; kuṭaiyāk you lifted govardhana Hill and made it an umbrella; kāppavaṉe! and protected; kālikal̤ the cows; āl̤a! oh the great male Child; ĕṉakku ŏrukāl for my sake; āṭuka cĕṅkīrai i pray that You dance in red silk!

PAT 1.5.3

66 நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே1
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு * ஒருகால்
தம்மனையானவனே! தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும் தடவிஅதன்புறமும் *
விம்மவளர்ந்தவனே! வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே! *
அம்ம! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
66 நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே * நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும் * தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் **
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் * விரவிய வேலைதனுள் வென்று வருமவனே *
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (3)
66 nammuṭai nāyakaṉe nāṉmaṟaiyiṉ pŏrul̤e * nāviyul̤ naṟkamala nāṉmukaṉukku ŏrukāl
tammaṉai āṉavaṉe taraṇi talamuzhutum * tārakaiyiṉ ulakum taṭavi ataṉ puṟamum **
vimma val̤arntavaṉe vezhamum ezh viṭaiyum * viraviya velaitaṉul̤ vĕṉṟu varumavaṉe *
amma ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (3)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

66. You, our master, the essence of all the four Vedās, Once you retrieved the Vedās for Nānmuhan (Brahmā), seated on a beautiful lotus on your navel, with a mother's compassion. You towered high, crossing all the earth, the world of the stars and anything above them for Mahābali, conquered the elephant Kuvalayāpeedam and killed the seven bulls that came to fight with you. O dear one, shake your head and crawl for me once. You fought for the cowherds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்முடை நாயகனே! எங்கள் தலைவனே!; நான்மறையின் நான்கு வேதங்களுக்கும்; பொருளே! பொருளாயிருப்பவனே!; நாவியுள் நாபியில் நல்ல; நற்கமல கமலமலரில் பிறந்த; நான்முகனுக்கு பிரம்மாவுக்கு; ஒருகால் ஓரு சமயம் வேதம் பறிபோனபோது; தம்மனை ஆனவனே! தாய்ப்பாசத்துடன் அருளினவனே!; தரணி தலமுழுதும் பூலோகம் முழுவதும்; தாரகையின் உலகும் நக்ஷத்திரலோகம் முழுவதும்; அதன் புறமும் அதற்கு அப்பாலும்; தடவி திருவடிகளால் ஸ்பர்சித்து; விம்ம வளர்ந்தவனே! திரிவிக்கிரமனாய் வளர்ந்தவனே!; வேழமும் குவலயாபீடமென்ற யானையும்; ஏழ் விடையும் ஏழு ரிஷபங்களும்; விரவிய உன்னை தாக்க; வேலைதனுள் வந்த சமயத்திலே; வென்று வருமவனே! அவற்றை ஜெயித்து வந்தவனே!; அம்ம! எனக்கு ஒருகால் கண்ணே எனக்காக ஒரு முறை; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஆயர்கள் போரேறே! ஆயர்களின் போர்க்காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுவாய் ஆடுவாய்!
nammuṭai nāyakaṉe! o our Lord!; pŏrul̤e! You are the essence; nāṉmaṟaiyiṉ of the four Vedas!; ŏrukāl once, when the vedas were lost; tammaṉai āṉavaṉe! You restored them with motherly affection!; nāṉmukaṉukku for Brahma; naṟkamala who came the lotus born from; nāviyul̤ Your navel; vimma val̤arntavaṉe! You grew up as the divine protector (Trivikrama); taṭavi by Your sacred feet went; taraṇi talamuḻutum through the entire world; tārakaiyiṉ ulakum in every realm of stars; ataṉ puṟamum even beyond that; veḻamum when the elephant named Kuvalayapida; eḻ viṭaiyum and the seven bulls; velaitaṉul̤ came towards; viraviya to attack You; vĕṉṟu varumavaṉe! You overcame them!; amma! ĕṉakku ŏrukāl Kanna, for me once; āṭuka cĕṅkīrai dance; āyarkal̤ poreṟe! the great warrior of the cowherd tribe; āṭuka, āṭukave dance, dance!

PAT 1.5.4

67 வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே! *
கானகவல்விளவின் காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும் கருநிறஎன்கன்றே! *
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச் செல்லும் *
ஆனை! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
67 வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள * வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே *
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் * கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே **
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் * என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் *
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (4)
67 vāṉavartām makizha vaṉ cakaṭam urul̤a * vañca mulaippeyiṉ nañcam atu uṇṭavaṉe *
kāṉaka val vil̤aviṉ kāy utirak karutik * kaṉṟu atu kŏṇṭu ĕṟiyum karuniṟa ĕṉkaṉṟe **
teṉukaṉum muraṉum tiṇtiṟal vĕnnarakaṉ * ĕṉpavar tām maṭiyac cĕru atirac cĕllum *
āṉai ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (4)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

67. As the gods in the sky rejoiced, You fought with Sakatāsuran and killed him, drank the poisoned milk from wicked Putanā's breasts and killed her. My dear dark-hued calf, You hurled Vathsāsuran in the form of a calf on the wood-apple tree (Kabithāsuran) and killed them. Mighty as an elephant, you fought with the strong Asurans Thenuhan, Muran and cruel Narakāsura in a terrible battle and killed all of them. O dear one, shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் தாம் மகிழ தேவர்கள் மகிழும்படி; வன் சகடம் வலிமை மிக்க சகடாசுரன்; உருள உருளும்படியாகவும்; வஞ்சமுலை வஞ்சக எண்ணம் கொண்ட; பேயின் பூதனையின்; நஞ்சு அமுது விஷப்பாலை; உண்டவனே! அமிர்தமென பருகினவனே!; கானக வல் காட்டிலுள்ள பருத்த; விளவின் விளாமரத்தின்; காய் உதிரக் கருதி காய்களை உதிரும்படி; கன்று கன்றான அந்த வத்ஸாசுரனைக்; அது கொண்டு கையில் எடுத்து; எறியும் விளவின் மேல் எறிந்தவனாய்; கருநிற கறுத்த நிறத்தையுடைய; என் கன்றே! என் கண்மணியே!; தேனுகனும் முரனும் தேனுகாசுரனும் முராசுரனும்; திண் திறல் திண்மையான; வெந்நரகன் வலிமை மிக்க நரகாசுரன்; என்பவர் தாம் மடிய போன்ற அனைவரும் மடிய; செரு அதிரச் செல்லும் களம் அதிரச் செல்லும்; யுத்தத்திலே போரிலே; ஆனை! யானை போன்றவனே!; எனக்கு ஒருகால் எனக்காக ஒரு முறை; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஆயர்கள் போரேறே! போர்க் காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
vāṉavar tām makiḻa to delights the gods; vaṉ cakaṭam You made the mighty demon Sakatasura; urul̤a to roll over; uṇṭavaṉe! You drank like a nectar; nañcu amutu the poisonous milk of; peyiṉ putanā' who came; vañcamulai with a deceptive intent; kāṉaka val in the forest; vil̤aviṉ You shook the willow tree; kāy utirak karuti dropping the pods; atu kŏṇṭu You took Vatsasuran in the hand; kaṉṟu who came as a calf; ĕṟiyum and threw him onto the ground; ĕṉ kaṉṟe! o my beloved!; karuniṟa with the dark hue; ĕṉpavar tām maṭiya You killed; teṉukaṉum muraṉum Thennukasaura and Murasura; tiṇ tiṟal and the formidable and; vĕnnarakaṉ mighty Narakasura; āṉai! You are an elephant!; yuttattile in the combat; cĕru atirac cĕllum and make the field vibrate; ĕṉakku ŏrukāl for me, once; āṭuka cĕṅkīrai dance; āyarkal̤ poreṟe! fierce warrior of the battle!; āṭuka, āṭukave dance, dance!

PAT 1.5.5

68 மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி * ஒருங்கு
ஒத்தஇணைமருதம் உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும் உந்தியவெந்திறலோய்! *
முத்தினிளமுறுவல் முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார் மொய்குழல்களலைய *
அத்த! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
68 மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார் * வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி * ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை * ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் **
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன் * முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய *
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (5)
68 mattu al̤avun tayirum vārkuzhal naṉmaṭavār * vaittaṉa nĕy kal̤avāl vāri vizhuṅki * ŏruṅku
ŏtta iṇaimarutam uṉṉiya vantavarai * ūru karattiṉŏṭum untiya vĕntiṟaloy **
muttiṉ il̤amuṟuval muṟṟa varuvataṉmuṉ * muṉṉa mukattu aṇiār mŏykuzhalkal̤ alaiya *
atta ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (5)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

68. You stole and swallowed the curd and ghee churned by the beautiful cowherd women with long curly hair. Oh! the most powerful One! You knocked with your hands and thighs, the two Asuras who came as marudam trees. Before you smile with your small teeth as pearls, crawl and dance once with your curly locks swaying. O dear one, shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார்குழல் நீண்ட தலைமுடியை யுடைய; நன் அச்சம் நாணம் மடம் போன்ற; மடவார் நற்குணப் பெண்கள்; வைத்தன சேமித்து வைத்தவைகளான; மத்து அளவும் மத்தாலே கடையப்பட்ட; தயிரும் நெய் தயிரையும் நெய்யையும்; களவால் கள்ளத்தனமாக; வாரி விழுங்கி வயிறார உண்டு; உன்னிய உன்னைத் தாக்க வேண்டுமென்கிற; ஒருங்கு ஒத்த ஒரேமாதிரியான எண்ணம் கொண்ட; இணைமருதம் இரட்டை மருதமரமாய்; வந்தவரை வந்துநின்ற அசுரர்களை; ஊரு கரத்தினொடும் துடைகளாலும் கைகளாலும்; உந்திய விழும்படி தள்ளின; வெந்திறலோய்! அசாத்திய வலிமையுடையவனே!; முத்தின் முத்துப்பல்; இள முறுவல் தோன்ற புன்முறுவல்; முற்ற முழுமையாக; வருவதன் முன் வெளிவருவதற்கு முன்னே; முன்ன முகத்து முன் முகத்தில்; அணி ஆர் அழகான; மொய் குழல்கள் அடர்த்தியான குழல்கள்; அலைய அசையும்படி; அத்த! எனக்கு ஒருகால் அப்பனே! எனக்காக ஒரு தடவை; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை!; ஆயர்கள் போரேறே! ஆயர்களின் போர்க்காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுவாய் ஆடுவாய்
vārkuḻal the woman with long hair; maṭavār who possessed; naṉ virtues like fear, shyness, and modesty; vaittaṉa had a repository of; tayirum nĕy curd and ghee; mattu al̤avum churned with a churner; kal̤avāl You deceitfully; vāri viḻuṅki consumed them; ŏruṅku ŏtta with a single-minded intention; uṉṉiya of attacking You; vantavarai asuras who came and stood; iṇaimarutam as twin margold tree; ūru karattiṉŏṭum with Your thighs and hands; untiya You pushed them down; vĕntiṟaloy! oh invincible One !; varuvataṉ muṉ before You; muṟṟa fully; il̤a muṟuval smile; muttiṉ with Your pearl-like teeth; alaiya to move; mŏy kuḻalkal̤ the dense curly hairlocks; aṇi ār in Your beautiful; muṉṉa mukattu face; atta! ĕṉakku ŏrukāl oh Lord! for my sake,; āṭuka cĕṅkīrai dance; āyarkal̤ poreṟe! the great warrior of the cowherd tribe; āṭuka, āṭukave dance, dance!

PAT 1.5.6

69 காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா!
கானகமாமடுவில் காளியனுச்சியிலே *
தூயநடம்பயிலும் சுந்தரஎன்சிறுவா!
துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே! *
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடிய தாளிணையாய்! *
ஆய! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
69 காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா * கானக மா மடுவில் காளியன் உச்சியிலே *
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா * துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே *
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை * அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய் *
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (6)
69 kāya malarniṟavā karumukil pol uruvā * kāṉaka mā maṭuvil kāl̤iyaṉ ucciyile *
tūya naṭam payilum cuntara ĕṉciṟuvā * tuṅka matakkariyiṉ kŏmpu paṟittavaṉe *
āyam aṟintu pŏruvāṉ ĕtirvanta mallai * antaram iṉṟi azhittu āṭiya tāl̤iṇaiyāy *
āya ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (6)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

69. Oh! my little handsome child! Your complexion is that of Kayām flower and You are like a dark cloud. You danced on the snake Kālingan in a deep pool in the forest, broke the tusks of the strong rutting elephant Kuvalayāpeedam. You fought with the wrestlers (sent by Kamsan) and killed them without any danger to You and danced on your feet. O dear cowherd! Shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காய மலர் காயாம்பூப் போன்ற; நிறவா! நிறத்தையுடையவனே!; கருமுகில் போல் காளமேகம் போன்ற; உருவா! உருவத்தையுடையவனே!; கானக மா காட்டில் பெரிய; மடுவில் மடுவினுள்ளிருந்த; காளியன் காளியநாகத்தினுடைய; உச்சியிலே தலையின்மீது; தூய நடம் ரம்மியமான; பயிலும் நர்த்தனம் பண்ணின; சுந்தர! என் சிறுவா! அழகான என் கண்மணியே!; துங்க உயரமான; மத மதம் பிடித்த குவலயாபீடம்; கரியின் எனனும் யானையின்; கொம்பு பறித்தவனே! தந்தங்களை முறித்தவனே!; ஆயம் அறிந்து மற்போர் செய்யும் வகையறிந்து; பொருவான் யுத்தம் செய்வதற்காக; எதிர் வந்த மல்லை எதிர்த்துவந்த மல்லர்களை; அந்தரம் இன்றி உனக்கு ஒரு அபாயமுமில்லாதபடி; அழித்து அழித்து; ஆடிய தாளிணையாய்! அழகிய இரு பாதத்தினனாய்!; ஆய! எனக்கு ஒருகால் ஆயனே! எனக்காக ஒரு தடவை; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஆயர்கள் போரேறே! ஆயர்களின் போர்க் காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
uruvā! o One with a form of; kāya malar Kayām flower; niṟavā! the One with skin tone; karumukil pol of dark cloud; cuntara! ĕṉ ciṟuvā! my beautiful jewel!; payilum who danced; tūya naṭam gracefully; ucciyile on the head of; kāl̤iyaṉ the kainga serpent; maṭuvil who resided on the waters; kāṉaka mā in the dense forest; kŏmpu paṟittavaṉe! the One who broke the tusks of; tuṅka a tall; kariyiṉ mad elephant by name; mata Kuvalayapeetam; antaram iṉṟi making sure you faced no danger; āṭiya tāl̤iṇaiyāy! the One with beautiful feet!; aḻittu who killed; ĕtir vanta mallai the opposing wrestlers; āyam aṟintu who knows how to wrestle; pŏruvāṉ and fight; āya! ĕṉakku ŏrukāl o Hero, dance once for me; āṭuka cĕṅkīrai dance; āyarkal̤ poreṟe! battle warrior of the cowherd tribe!; āṭuka, āṭukave dance, dance!

PAT 1.5.7

70 துப்புடையார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய *
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே! *
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய * என்
அப்ப! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
70 துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால் * தூய கருங்குழல் நல் தோகைமயில் அனைய *
நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய * நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே **
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் * தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய * என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (7)
70 tuppu uṭai āyarkal̤ tam cŏl vazhuvātu ŏrukāl * tūya karuṅkuzhal nal tokaimayil aṉaiya *
nappiṉaitaṉ tiṟamā nal viṭai ezh aviya * nalla tiṟal uṭaiya nātaṉum āṉavaṉe **
tappiṉa pil̤l̤aikal̤ait taṉamiku cotipukat * taṉi ŏru ter kaṭavittāyŏṭu kūṭṭiya * ĕṉ
appa ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (7)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

70. You listened to the words of the strong cowherds, fought and controlled seven strong bulls and married the dark-haired Nappinnai, lovely as a peacock. You went on a bright shining chariot, searched for the lost children of the pious Brahmin, found them and brought them back to their mother. O dear one, shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துப்பு உடை மிடுக்கையுடையரான; ஆயர்கள் இடையர்களுடைய; தம் சொல் வார்த்தையை; வழுவாது ஒருகால் தப்பாமல் ஒரு காலத்திலே; தூய கருங்குழல் அழகிய கருநிற கூந்தல்; நற்தோகை எழில் தோகை; மயில் அனைய மயிலைப்போன்றுள்ள; நப்பினை தன் திறமா நப்பின்னைப் பிராட்டிக்காக; நல் விடை ஏழ் அவிய கொடிய ரிஷபங்களேழும் அழிய; நல்ல திறல் உடைய நல்ல திறமையுடையவனாய்; நாதனும் ஆனவனே! இடையர்களின் பெருமானே!; தப்பின பிறந்தவுடன் இறந்துபோன; பிள்ளைகளை வைதிகரின் நான்கு பிள்ளைகளையும்; தனமிகு சோதிபுக தனது பரமபதத்தில் செல்வதற்காக; தனி ஒரு தேர் கடவி தனியே ஒப்பற்ற தேரை நடத்தி; தாயொடு நான்கு பிள்ளைகளையும்; கூட்டிய உயிருடன் தாயிடம் சேர்ப்பித்த; என் அப்ப! என் அப்பனே!; எனக்கு ஒருகால் எனக்காக ஒரு முறை; ஆடுக செங்கீரை! ஆடுக செங்கீரை!; ஆயர்கள் போரேறே! ஆயர்களின் போர்க் காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே!
vaḻuvātu ŏrukāl in the past era, following; tam cŏl the words of; āyarkal̤ the residents of the cowherd tribe; tuppu uṭai who were adorned in beautiful attire; nappiṉai taṉ tiṟamā for the sake of Napinnai; mayil aṉaiya who was like a peacock; naṟtokai graceful feathers; tūya karuṅkuḻal and beautiful black hair; nalla tiṟal uṭaiya as highly skilled; nātaṉum āṉavaṉe! leader of the cowherd tribe; nal viṭai eḻ aviya You conquered the seven formidable bulls; taṉi ŏru ter kaṭavi You drove a chariot alone; taṉamiku cotipuka and searched for; pil̤l̤aikal̤ai four children of the Vaidika; tappiṉa who were born dead; tāyŏṭu brought back all four children; kūṭṭiya and united them alive with their mother; ĕṉ appa! my Lord!; ĕṉakku ŏrukāl for my sake; āṭuka cĕṅkīrai! dance!; āyarkal̤ poreṟe! battle warrior of the cowherd tribe!; āṭuka, āṭukave dance, dance!

PAT 1.5.8

71 உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள் கருத்தாயினசெய்துவரும் *
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர்தெற்றிவரப் பெற்றஎனக்குஅருளி *
மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே! *
என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. (2)
71 உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி * உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் *
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர * கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி **
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே *
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (8)
71 uṉṉaiyum ŏkkalaiyil kŏṇṭu tam il maruvi * uṉṉŏṭu taṅkal̤ karuttu āyiṉa cĕytu varum *
kaṉṉiyarum makizha kaṇṭavar kaṇkul̤ira * kaṟṟavar tĕṟṟivara pĕṟṟa ĕṉakku arul̤i **
maṉṉu kuṟuṅkuṭiyāy vĕl̤l̤aṟaiyāy matil cūzh colaimalaikku arace kaṇṇapurattu amute *
ĕṉ avalam kal̤aivāy āṭuka cĕṅkīrai * ezh ulakum uṭaiyāy āṭuka āṭukave (8)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

71. The cowherd women carry you on their waists, take you to their homes, play with you as they please and lovingly care for you. When the young girls see you, they become happy, and if learned people praise you, you give them your grace. You are the One giving me your grace and removing my sorrows. You stay in the eternal Thirukkurungudi, Thiruvellarai and Thirumālirunjolai surrounded with forts and You are the nectar that stays in Kannapuram. O dear one, shake your head and crawl. You are the lord of all the seven worlds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு பிரளயகாலத்திலும் அழியாத; குறுங்குடியாய்! திருக்குறுங்குடியிலிருப்பவனே!; வெள்ளறையாய்! திருவெள்ளறையிலிருப்பவனே!; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; சோலை மலைக்கு திருமாலிருஞ்சோலைமலைக்கு; அரசே! கண்ணபுரத்து அரசே! திருக்கண்ணபுரத்து; அமுதே! அமுதம் போன்றவனே!; என் அவலம் என் துன்பத்தை; களைவாய்! களைபவனே!; உன்னையும் உன்னை; ஒக்கலையில் இடுப்பிலே எடுத்துக்கொண்டு; தம் இல் மருவி தங்கள் வீடுகளில் கொண்டு போய்; உன்னொடு தங்கள் உன்னோடு தாங்கள்; கருத்து அறிந்தபடி உன்னுடன் களித்து; ஆயின செய்து பின் மறுடியும் கொண்டுவரும்; எங்கள் கன்னியரும் இளம்பெண்களும்; மகிழ உன்னோடு சேர்ந்து மகிழ்ந்திட; கண்டவர் கண் பார்த்தவர்களுடைய கண்கள்; குளிர குளிரும்படியாகவும்; கற்றவர் கவி சொல்லக் கற்றவர்கள்; தெற்றிவர பிள்ளைக்கவிகள் தொடுத்து வரும்படியாகவும்; பெற்ற உன்னை மகனாகப் பெற்ற; எனக்கு அருளி எனக்கு அன்பு கூர்ந்து; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
arace! kaṇṇapurattu o Lord of Thirukkannapuram; maṉṉu who is indestructible even during the great destruction; kuṟuṅkuṭiyāy! the One who resides in Thirukkurungudi!; vĕl̤l̤aṟaiyāy! the One who resides in Thiruvellarai!; colai malaikku Thirumalirunjolai; matil̤ cūḻ surrounded by great walls; amute! You are like a nectar; kal̤aivāy! who removes; ĕṉ avalam my suffering; ĕṅkal̤ kaṉṉiyarum young women; ŏkkalaiyil on the hip they carried; uṉṉaiyum You; tam il maruvi took You to their homes; karuttu played; uṉṉŏṭu taṅkal̤ with You; āyiṉa cĕytu then brought back; kaṇṭavar kaṇ may their eyes; makiḻa who delight in you; kul̤ira become cool with joy; kaṟṟavar may those who have learned to compose poems; tĕṟṟivara compose children poems; ĕṉakku arul̤i please for me; pĕṟṟa who got You as my son; āṭuka cĕṅkīrai dance; āṭuka, āṭukave dance, dance

PAT 1.5.9

72 பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர *
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக *
நீலநிறத்தழகாரைம்படையின் நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ *
ஏலுமறைப்பொருளே! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.
72 பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் * பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர *
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் * கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக **
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே * நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ *
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (9)
72 pālŏṭu nĕy tayir ŏṇ cāntŏṭu caṇpakamum * paṅkayam nalla karuppūramum nāṟi vara *
kola naṟumpaval̤ac cĕntuvar vāyiṉiṭaik * komal̤a vĕl̤l̤imul̤ai pol cila pal ilaka **
nīla niṟattu azhakār aimpaṭaiyiṉ naṭuve * niṉ kaṉivāy amutam iṟṟu muṟintu vizha *
elum maṟaippŏrul̤e āṭuka cĕṅkīrai * ezh ulakum uṭaiyāy āṭuka āṭukave (9)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

72. When you crawl, the fragrance of milk, ghee, curd, pure sandalwood, shenbagā flowers, lotuses and good camphor spreads everywhere. The tiny teeth in your lovely coral-red mouth shine like beautiful small silver stars. The nectar that is as sweet as a fruit drips slowly from your mouth and runs through the lovely aimbadaithāli on your blue chest. You are the perfect meaning of the four Vedās. Shake your head and crawl. You are the lord of all the seven worlds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாலொடு பாலோடேகூட; நெய் தயிர் நெய்யும் தயிரும் உண்பதாலும்; ஒண் சாந்தொடு அழகிய சந்தனமும்; சண்பகமும் செண்பகம் முதலிய மலர்களும்; பங்கயம் தாமரைப்பூவும் தரிப்பதாலும்; நல்ல கருப்பூரமும் உத்தமமான பச்சைக் கர்ப்பூரமும்; நாறி வர கலந்து பரிமளிக்க; கோல நறும்பவள அழகிய நற்பவளம்போல்; செந்துவர் வாயினிடை சிவந்திருக்கிற அதரத்தினுள்ளே; கோமள அழகிய இளைய; வெள்ளிமுளை போல் வெள்ளி முளை போன்ற; சில பல் இலக சில திருமுத்துக்கள் தெரிய; நீல நிறத்து அழகார் நீல நிறத்தையுடைய அழகுமிகுந்திருக்கும்; ஐம்படையின் நடுவே பஞ்சாயுதத்தின் நடுவே; நின் கனிவாய் உன்னுடைய சிவந்த அதரத்தில்; அமுதம் ஊறுகின்ற அமுதம்; இற்று முறிந்து விழ போன்ற ஜலமானது கீழே விழ; மறை ஏலும் பொருளே! வேதத்தின் உட்பொருளே!; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஏழ் உலகும் உடையாய்! ஏழ் உலகும் உடையவனே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
nāṟi vara You emanate mixed fragrance of; pālŏṭu milk; nĕy tayir ghee and curd; ŏṇ cāntŏṭu beautiful sandalwood; caṇpakamum fragrance from flowers like jasmine; paṅkayam and lotus; nalla karuppūramum and pure camphor; cĕntuvar vāyiṉiṭai between the red lips; kola naṟumpaval̤a that are like beautiful coral; cila pal ilaka showing some beautiful pearl-like teeth; komal̤a that are small and beautiful; vĕl̤l̤imul̤ai pol like silver sprouts; aimpaṭaiyiṉ naṭuve the the midst of Panchayudha; nīla niṟattu aḻakār that is beautiful with blue hue; niṉ kaṉivāy from your red lips; amutam drips nectar; iṟṟu muṟintu viḻa that falls down; maṟai elum pŏrul̤e! o essence of the Vedas!; āṭuka cĕṅkīrai dance; eḻ ulakum uṭaiyāy! the possesor of the seven worlds!; āṭuka, āṭukave dance, dance

PAT 1.5.10

73 செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் * அரையில்
தங்கியபொன்வடமும் தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும் மோதிரமும்கிறியும் *
மங்கலஐம்படையும் தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும் சுட்டியும்ஒத்திலக *
எங்கள்குடிக்கரசே! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.
73 செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் * சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் * அரையில்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் * பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் **
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் * மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக *
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (10)
73 cĕṅkamalak kazhalil ciṟṟitazh pol viralil * cer tikazh āzhikal̤um kiṇkiṇiyum * araiyil
taṅkiya pŏṉvaṭamum tāl̤a naṉ mātul̤aiyiṉ * pūvŏṭu pŏṉmaṇiyum motiramum kiṟiyum **
maṅkala aimpaṭaiyum tol̤val̤aiyum kuzhaiyum * makaramum vāl̤ikal̤um cuṭṭiyum ŏttu ilaka *
ĕṅkal̤ kuṭikku arace āṭuka cĕṅkīrai * ezh ulakum uṭaiyāy āṭuka āṭukave (10)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

73. The tiny soft petal-like toes of your red lotus feet are adorned with silver rings, your anklets, with bells (kinkinis), your waist, with a golden chain that bears beautiful, golden mingled with beautiful pomegranate flowers, your arms, with rings and bracelets, your ears, with emerald ear rings and ear drops (, and your splendid chest with an auspicious pendant) aimbadaithāli. You are the king of our tribe and the lord of all the seven worlds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங்கமலக் செந்தாமரைப் பூப்போன்ற; கழலில் திருவடிகளில்; சிற்றிதழ் போல் சிறிய பூவிதழ் போன்ற; சேர் திகழ் சேர்ந்து சோபிக்கிற; ஆழிகளும் மோதிரங்களும்; கிண்கிணியும் கிண்கிணியும்; அரையில் தங்கிய இடுப்பில் தங்கிட; பொன்வடமும் அரைநாணும்; தாள தங்கக் காம்போடு கூடின; நன் மாதுளையின் பூவொடு நல்ல மாதுளைப் பூவொடு; பொன் மணியும் சேர்த்துக்கோத்த பொன்மணியும்; மோதிரமும் மோதிரமும்; கிறியும் மணிக்கட்டில் பவள வடமும்; மங்கல ஐம்படையும் மங்களகரமான பஞ்சாயுதங்களும்; தோள்வளையும் தோள்வளையும்; குழையும் காதணிகளும்; மகரமும் மகரகுண்டலங்களும்; வாளிகளும் வாளிகளும்; சுட்டியும் ஒத்திலக நெற்றிச்சுட்டியும் சேர்ந்து விளங்க; எங்கள் குடிக்கு எங்கள் வம்சத்துக்கு; அரசே! அரசானவனே!; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஏழ் உலகும் உடையாய்! ஏழ் உலகுக்கும் அதிபதியே!; ஆடுக ஆடுகவே ஆடுவாய் ஆடுவாய்
ciṟṟitaḻ pol You have small petal-like toes; kaḻalil on your divine feet; cĕṅkamalak that resembkes red lotus flowers; cer tikaḻ adorned with; āḻikal̤um rings; kiṇkiṇiyum and anklets; pŏṉvaṭamum and fine filament of gold; araiyil taṅkiya on Your waist; tāl̤a adorned with a golden stalk of; naṉ mātul̤aiyiṉ pūvŏṭu nice pomegranate flower; pŏṉ maṇiyum made with with golden gems; motiramum wore rings; kiṟiyum corals on the anklets; maṅkala aimpaṭaiyum carrying auspicious five weapons; tol̤val̤aiyum on Your shoulders; kuḻaiyum had earrings that were; makaramum Makara-shaped; vāl̤ikal̤um with jewels; cuṭṭiyum ŏttilaka together with forehead mark that shines; arace! o king; ĕṅkal̤ kuṭikku of our lineage; āṭuka cĕṅkīrai dance; eḻ ulakum uṭaiyāy! o lord of seven worlds!; āṭuka, āṭukave dance, dance

PAT 1.5.11

74 அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே! ஆயர்கள்நாயகனே! *
என்அவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகவாடுகவென்று *
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் *
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2)
74 ## அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் * ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று **
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு * ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் *
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் * உலகில் எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே (11)
74 ## aṉṉamum mīṉ uruvum āl̤ariyum kuṟal̤um * āmaiyum āṉavaṉe āyarkal̤ nāyakaṉe
ĕṉ avalam kal̤aivāy āṭuka cĕṅkīrai * ezh ulakum uṭaiyāy āṭuka āṭuka ĕṉṟu **
aṉṉanaṭai maṭavāl̤ acotai ukanta paricu * āṉa pukazhp putuvaip paṭṭaṉ uraitta tamizh *
iṉṉicai mālaikal̤ ip pattum vallār * ulakil ĕṇticaiyum pukazh mikku iṉpam atu ĕytuvare (11)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

74. “O chief of cowherds, You took the forms of a swan, a fish, a man-lion, a dwarf and a turtle. You remove my sorrows. Shake your head and crawl. You are the lord of all the seven worlds. Crawl, crawl. ” So praises Yashodā with her gentle swan-like walk. The famous Pattan of Puduvai composed ten Tamil pāsurams that describe Yashodā's joyous words of her son crawling. Those who recite these ten Tamil pāsurams will earn fame in all the eight directions and be happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னமும் ஹம்ஸரூபமாயும்; மீன் உருவும் மீனுருவாயும்; ஆளரியும் நர சிம்மமாயும்; குறளும் வாமனனாகவும்; ஆமையும் கூர்மமாகவும்; ஆனவனே! அவதரித்தவனே!; ஆயர்கள் நாயகனே! ஆயர்கள் தலைவனே!; என் அவலம் என் துன்பத்தை; களைவாய்! நீக்கினவனே!; ஆடுக செங்கீரை செங்கீரை ஆடவேணும்; ஏழ் உலகும் ஸப்த லோகங்களுக்கும்; உடையாய்! அதிபதியே!; ஆடுக ஆடுக என்று பலகாலும் ஆடவேணும் என்று; அன்னநடை மடவாள் அன்ன நடை மடந்தை; அசோதை யசோதை; உகந்த பரிசு உகந்து சொன்ன விதத்தை; ஆனபுகழ் புகழத்தக்க; புதுவை பட்டன் பெரியாழ்வார்; உரைத்த அருளிச்செய்த; இன்னிசை இனிய இசையையுடைய; தமிழ் மாலைகள் தமிழ் பாசுரங்களான; இப்பத்தும் இப்பத்தையும்; வல்லார் ஓத வல்லவர்கள்; உலகில் இந்த லோகத்தில்; எண்திசையும் எட்டுத் திசைகளிலும்; புகழ் மிக்கு புகழையும்; இன்பம் அது இன்பமதையும்; எய்துவரே பெறுவார்கள்
āyarkal̤ nāyakaṉe! the Leader of the cowherd tribe!; āṉavaṉe! You incarnated!; aṉṉamum as a swan; mīṉ uruvum as a fish; āl̤ariyum as Narasimha; kuṟal̤um as Vamana; āmaiyum as Kurma; uṭaiyāy! o Lord; eḻ ulakum of the seven worlds; kal̤aivāy! one who alleviated!; ĕṉ avalam my suffering; āṭuka cĕṅkīrai You must dance; āṭuka, āṭuka ĕṉṟu must dance; āṉapukaḻ praiseworthy; putuvai paṭṭaṉ Periyāzhvār; uraitta blessed rendering; iṉṉicai with melodious music; ukanta paricu depicted the manner in which; acotai mother Yashoda; aṉṉanaṭai maṭavāl̤ one who walks like a swan rejoiced; vallār those who recites; ippattum these ten; tamiḻ mālaikal̤ Tamil verses; ĕytuvare will attain; pukaḻ mikku fame; iṉpam atu and joy; ulakil in this world; ĕṇticaiyum in eight directions