கோளரி அரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வர காள நல் மேகமவை கல்லோடு கார் பொழிய கருதி வரை குடையாக காலிகள் காப்பவனே ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே –1-5-2-
(கால் பொழிய கார் பொழிய பாட பேதம் -காற்று மேகம் பெரும் காற்றோடு கல் வர்ஷமாக வர்ஷிக்க