PAT 1.5.11

புகழும் இன்பமும் அடைவர்

74 அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே! ஆயர்கள்நாயகனே! *
என்அவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகவாடுகவென்று *
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் *
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2)
74 ## aṉṉamum mīṉ uruvum āl̤ariyum kuṟal̤um * āmaiyum āṉavaṉe āyarkal̤ nāyakaṉe
ĕṉ avalam kal̤aivāy āṭuka cĕṅkīrai * ezh ulakum uṭaiyāy āṭuka āṭuka ĕṉṟu **
aṉṉanaṭai maṭavāl̤ acotai ukanta paricu * āṉa pukazhp putuvaip paṭṭaṉ uraitta tamizh *
iṉṉicai mālaikal̤ ip pattum vallār * ulakil ĕṇticaiyum pukazh mikku iṉpam atu ĕytuvare (11)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

74. “O chief of cowherds, You took the forms of a swan, a fish, a man-lion, a dwarf and a turtle. You remove my sorrows. Shake your head and crawl. You are the lord of all the seven worlds. Crawl, crawl. ” So praises Yashodā with her gentle swan-like walk. The famous Pattan of Puduvai composed ten Tamil pāsurams that describe Yashodā's joyous words of her son crawling. Those who recite these ten Tamil pāsurams will earn fame in all the eight directions and be happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னமும் ஹம்ஸரூபமாயும்; மீன் உருவும் மீனுருவாயும்; ஆளரியும் நர சிம்மமாயும்; குறளும் வாமனனாகவும்; ஆமையும் கூர்மமாகவும்; ஆனவனே! அவதரித்தவனே!; ஆயர்கள் நாயகனே! ஆயர்கள் தலைவனே!; என் அவலம் என் துன்பத்தை; களைவாய்! நீக்கினவனே!; ஆடுக செங்கீரை செங்கீரை ஆடவேணும்; ஏழ் உலகும் ஸப்த லோகங்களுக்கும்; உடையாய்! அதிபதியே!; ஆடுக ஆடுக என்று பலகாலும் ஆடவேணும் என்று; அன்னநடை மடவாள் அன்ன நடை மடந்தை; அசோதை யசோதை; உகந்த பரிசு உகந்து சொன்ன விதத்தை; ஆனபுகழ் புகழத்தக்க; புதுவை பட்டன் பெரியாழ்வார்; உரைத்த அருளிச்செய்த; இன்னிசை இனிய இசையையுடைய; தமிழ் மாலைகள் தமிழ் பாசுரங்களான; இப்பத்தும் இப்பத்தையும்; வல்லார் ஓத வல்லவர்கள்; உலகில் இந்த லோகத்தில்; எண்திசையும் எட்டுத் திசைகளிலும்; புகழ் மிக்கு புகழையும்; இன்பம் அது இன்பமதையும்; எய்துவரே பெறுவார்கள்
āyarkal̤ nāyakaṉe! the Leader of the cowherd tribe!; āṉavaṉe! You incarnated!; aṉṉamum as a swan; mīṉ uruvum as a fish; āl̤ariyum as Narasimha; kuṟal̤um as Vamana; āmaiyum as Kurma; uṭaiyāy! o Lord; eḻ ulakum of the seven worlds; kal̤aivāy! one who alleviated!; ĕṉ avalam my suffering; āṭuka cĕṅkīrai You must dance; āṭuka, āṭuka ĕṉṟu must dance; āṉapukaḻ praiseworthy; putuvai paṭṭaṉ Periyāzhvār; uraitta blessed rendering; iṉṉicai with melodious music; ukanta paricu depicted the manner in which; acotai mother Yashoda; aṉṉanaṭai maṭavāl̤ one who walks like a swan rejoiced; vallār those who recites; ippattum these ten; tamiḻ mālaikal̤ Tamil verses; ĕytuvare will attain; pukaḻ mikku fame; iṉpam atu and joy; ulakil in this world; ĕṇticaiyum in eight directions