PAT 1.5.10

இடைக் குலத்தரசே ஆயர் போரேறு

73 செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் * அரையில்
தங்கியபொன்வடமும் தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும் மோதிரமும்கிறியும் *
மங்கலஐம்படையும் தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும் சுட்டியும்ஒத்திலக *
எங்கள்குடிக்கரசே! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.
73 cĕṅkamalak kazhalil ciṟṟitazh pol viralil * cer tikazh āzhikal̤um kiṇkiṇiyum * araiyil
taṅkiya pŏṉvaṭamum tāl̤a naṉ mātul̤aiyiṉ * pūvŏṭu pŏṉmaṇiyum motiramum kiṟiyum **
maṅkala aimpaṭaiyum tol̤val̤aiyum kuzhaiyum * makaramum vāl̤ikal̤um cuṭṭiyum ŏttu ilaka *
ĕṅkal̤ kuṭikku arace āṭuka cĕṅkīrai * ezh ulakum uṭaiyāy āṭuka āṭukave (10)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

73. The tiny soft petal-like toes of your red lotus feet are adorned with silver rings, your anklets, with bells (kinkinis), your waist, with a golden chain that bears beautiful, golden mingled with beautiful pomegranate flowers, your arms, with rings and bracelets, your ears, with emerald ear rings and ear drops (, and your splendid chest with an auspicious pendant) aimbadaithāli. You are the king of our tribe and the lord of all the seven worlds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங்கமலக் செந்தாமரைப் பூப்போன்ற; கழலில் திருவடிகளில்; சிற்றிதழ் போல் சிறிய பூவிதழ் போன்ற; சேர் திகழ் சேர்ந்து சோபிக்கிற; ஆழிகளும் மோதிரங்களும்; கிண்கிணியும் கிண்கிணியும்; அரையில் தங்கிய இடுப்பில் தங்கிட; பொன்வடமும் அரைநாணும்; தாள தங்கக் காம்போடு கூடின; நன் மாதுளையின் பூவொடு நல்ல மாதுளைப் பூவொடு; பொன் மணியும் சேர்த்துக்கோத்த பொன்மணியும்; மோதிரமும் மோதிரமும்; கிறியும் மணிக்கட்டில் பவள வடமும்; மங்கல ஐம்படையும் மங்களகரமான பஞ்சாயுதங்களும்; தோள்வளையும் தோள்வளையும்; குழையும் காதணிகளும்; மகரமும் மகரகுண்டலங்களும்; வாளிகளும் வாளிகளும்; சுட்டியும் ஒத்திலக நெற்றிச்சுட்டியும் சேர்ந்து விளங்க; எங்கள் குடிக்கு எங்கள் வம்சத்துக்கு; அரசே! அரசானவனே!; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஏழ் உலகும் உடையாய்! ஏழ் உலகுக்கும் அதிபதியே!; ஆடுக ஆடுகவே ஆடுவாய் ஆடுவாய்
ciṟṟitaḻ pol You have small petal-like toes; kaḻalil on your divine feet; cĕṅkamalak that resembkes red lotus flowers; cer tikaḻ adorned with; āḻikal̤um rings; kiṇkiṇiyum and anklets; pŏṉvaṭamum and fine filament of gold; araiyil taṅkiya on Your waist; tāl̤a adorned with a golden stalk of; naṉ mātul̤aiyiṉ pūvŏṭu nice pomegranate flower; pŏṉ maṇiyum made with with golden gems; motiramum wore rings; kiṟiyum corals on the anklets; maṅkala aimpaṭaiyum carrying auspicious five weapons; tol̤val̤aiyum on Your shoulders; kuḻaiyum had earrings that were; makaramum Makara-shaped; vāl̤ikal̤um with jewels; cuṭṭiyum ŏttilaka together with forehead mark that shines; arace! o king; ĕṅkal̤ kuṭikku of our lineage; āṭuka cĕṅkīrai dance; eḻ ulakum uṭaiyāy! o lord of seven worlds!; āṭuka, āṭukave dance, dance