PAT 1.5.7

நப்பின்னை நாதனே ஆயர் போரேறு

70 துப்புடையார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய *
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே! *
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய * என்
அப்ப! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
70 tuppu uṭai āyarkal̤ tam cŏl vazhuvātu ŏrukāl * tūya karuṅkuzhal nal tokaimayil aṉaiya *
nappiṉaitaṉ tiṟamā nal viṭai ezh aviya * nalla tiṟal uṭaiya nātaṉum āṉavaṉe **
tappiṉa pil̤l̤aikal̤ait taṉamiku cotipukat * taṉi ŏru ter kaṭavittāyŏṭu kūṭṭiya * ĕṉ
appa ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (7)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

70. You listened to the words of the strong cowherds, fought and controlled seven strong bulls and married the dark-haired Nappinnai, lovely as a peacock. You went on a bright shining chariot, searched for the lost children of the pious Brahmin, found them and brought them back to their mother. O dear one, shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துப்பு உடை மிடுக்கையுடையரான; ஆயர்கள் இடையர்களுடைய; தம் சொல் வார்த்தையை; வழுவாது ஒருகால் தப்பாமல் ஒரு காலத்திலே; தூய கருங்குழல் அழகிய கருநிற கூந்தல்; நற்தோகை எழில் தோகை; மயில் அனைய மயிலைப்போன்றுள்ள; நப்பினை தன் திறமா நப்பின்னைப் பிராட்டிக்காக; நல் விடை ஏழ் அவிய கொடிய ரிஷபங்களேழும் அழிய; நல்ல திறல் உடைய நல்ல திறமையுடையவனாய்; நாதனும் ஆனவனே! இடையர்களின் பெருமானே!; தப்பின பிறந்தவுடன் இறந்துபோன; பிள்ளைகளை வைதிகரின் நான்கு பிள்ளைகளையும்; தனமிகு சோதிபுக தனது பரமபதத்தில் செல்வதற்காக; தனி ஒரு தேர் கடவி தனியே ஒப்பற்ற தேரை நடத்தி; தாயொடு நான்கு பிள்ளைகளையும்; கூட்டிய உயிருடன் தாயிடம் சேர்ப்பித்த; என் அப்ப! என் அப்பனே!; எனக்கு ஒருகால் எனக்காக ஒரு முறை; ஆடுக செங்கீரை! ஆடுக செங்கீரை!; ஆயர்கள் போரேறே! ஆயர்களின் போர்க் காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே!
vaḻuvātu ŏrukāl in the past era, following; tam cŏl the words of; āyarkal̤ the residents of the cowherd tribe; tuppu uṭai who were adorned in beautiful attire; nappiṉai taṉ tiṟamā for the sake of Napinnai; mayil aṉaiya who was like a peacock; naṟtokai graceful feathers; tūya karuṅkuḻal and beautiful black hair; nalla tiṟal uṭaiya as highly skilled; nātaṉum āṉavaṉe! leader of the cowherd tribe; nal viṭai eḻ aviya You conquered the seven formidable bulls; taṉi ŏru ter kaṭavi You drove a chariot alone; taṉamiku cotipuka and searched for; pil̤l̤aikal̤ai four children of the Vaidika; tappiṉa who were born dead; tāyŏṭu brought back all four children; kūṭṭiya and united them alive with their mother; ĕṉ appa! my Lord!; ĕṉakku ŏrukāl for my sake; āṭuka cĕṅkīrai! dance!; āyarkal̤ poreṟe! battle warrior of the cowherd tribe!; āṭuka, āṭukave dance, dance!