PAT 1.5.9

மறை ஏலும் பொருளே ஆயர் போரேறு

72 பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர *
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக *
நீலநிறத்தழகாரைம்படையின் நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ *
ஏலுமறைப்பொருளே! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.
72 pālŏṭu nĕy tayir ŏṇ cāntŏṭu caṇpakamum * paṅkayam nalla karuppūramum nāṟi vara *
kola naṟumpaval̤ac cĕntuvar vāyiṉiṭaik * komal̤a vĕl̤l̤imul̤ai pol cila pal ilaka **
nīla niṟattu azhakār aimpaṭaiyiṉ naṭuve * niṉ kaṉivāy amutam iṟṟu muṟintu vizha *
elum maṟaippŏrul̤e āṭuka cĕṅkīrai * ezh ulakum uṭaiyāy āṭuka āṭukave (9)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

72. When you crawl, the fragrance of milk, ghee, curd, pure sandalwood, shenbagā flowers, lotuses and good camphor spreads everywhere. The tiny teeth in your lovely coral-red mouth shine like beautiful small silver stars. The nectar that is as sweet as a fruit drips slowly from your mouth and runs through the lovely aimbadaithāli on your blue chest. You are the perfect meaning of the four Vedās. Shake your head and crawl. You are the lord of all the seven worlds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாலொடு பாலோடேகூட; நெய் தயிர் நெய்யும் தயிரும் உண்பதாலும்; ஒண் சாந்தொடு அழகிய சந்தனமும்; சண்பகமும் செண்பகம் முதலிய மலர்களும்; பங்கயம் தாமரைப்பூவும் தரிப்பதாலும்; நல்ல கருப்பூரமும் உத்தமமான பச்சைக் கர்ப்பூரமும்; நாறி வர கலந்து பரிமளிக்க; கோல நறும்பவள அழகிய நற்பவளம்போல்; செந்துவர் வாயினிடை சிவந்திருக்கிற அதரத்தினுள்ளே; கோமள அழகிய இளைய; வெள்ளிமுளை போல் வெள்ளி முளை போன்ற; சில பல் இலக சில திருமுத்துக்கள் தெரிய; நீல நிறத்து அழகார் நீல நிறத்தையுடைய அழகுமிகுந்திருக்கும்; ஐம்படையின் நடுவே பஞ்சாயுதத்தின் நடுவே; நின் கனிவாய் உன்னுடைய சிவந்த அதரத்தில்; அமுதம் ஊறுகின்ற அமுதம்; இற்று முறிந்து விழ போன்ற ஜலமானது கீழே விழ; மறை ஏலும் பொருளே! வேதத்தின் உட்பொருளே!; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஏழ் உலகும் உடையாய்! ஏழ் உலகும் உடையவனே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
nāṟi vara You emanate mixed fragrance of; pālŏṭu milk; nĕy tayir ghee and curd; ŏṇ cāntŏṭu beautiful sandalwood; caṇpakamum fragrance from flowers like jasmine; paṅkayam and lotus; nalla karuppūramum and pure camphor; cĕntuvar vāyiṉiṭai between the red lips; kola naṟumpaval̤a that are like beautiful coral; cila pal ilaka showing some beautiful pearl-like teeth; komal̤a that are small and beautiful; vĕl̤l̤imul̤ai pol like silver sprouts; aimpaṭaiyiṉ naṭuve the the midst of Panchayudha; nīla niṟattu aḻakār that is beautiful with blue hue; niṉ kaṉivāy from your red lips; amutam drips nectar; iṟṟu muṟintu viḻa that falls down; maṟai elum pŏrul̤e! o essence of the Vedas!; āṭuka cĕṅkīrai dance; eḻ ulakum uṭaiyāy! the possesor of the seven worlds!; āṭuka, āṭukave dance, dance