PAT 1.5.6

காளியனுச்சியில் நடம்பயின்றவனே ஆயர் போரேறு

69 காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா!
கானகமாமடுவில் காளியனுச்சியிலே *
தூயநடம்பயிலும் சுந்தரஎன்சிறுவா!
துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே! *
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடிய தாளிணையாய்! *
ஆய! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
69 காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா * கானக மா மடுவில் காளியன் உச்சியிலே *
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா * துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே *
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை * அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய் *
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (6)
69 kāya malarniṟavā karumukil pol uruvā * kāṉaka mā maṭuvil kāl̤iyaṉ ucciyile *
tūya naṭam payilum cuntara ĕṉciṟuvā * tuṅka matakkariyiṉ kŏmpu paṟittavaṉe *
āyam aṟintu pŏruvāṉ ĕtirvanta mallai * antaram iṉṟi azhittu āṭiya tāl̤iṇaiyāy *
āya ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (6)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

69. Oh! my little handsome child! Your complexion is that of Kayām flower and You are like a dark cloud. You danced on the snake Kālingan in a deep pool in the forest, broke the tusks of the strong rutting elephant Kuvalayāpeedam. You fought with the wrestlers (sent by Kamsan) and killed them without any danger to You and danced on your feet. O dear cowherd! Shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
காய மலர் காயாம்பூப் போன்ற; நிறவா! நிறத்தையுடையவனே!; கருமுகில் போல் காளமேகம் போன்ற; உருவா! உருவத்தையுடையவனே!; கானக மா காட்டில் பெரிய; மடுவில் மடுவினுள்ளிருந்த; காளியன் காளியநாகத்தினுடைய; உச்சியிலே தலையின்மீது; தூய நடம் ரம்மியமான; பயிலும் நர்த்தனம் பண்ணின; சுந்தர! என் சிறுவா! அழகான என் கண்மணியே!; துங்க உயரமான; மத மதம் பிடித்த குவலயாபீடம்; கரியின் எனனும் யானையின்; கொம்பு பறித்தவனே! தந்தங்களை முறித்தவனே!; ஆயம் அறிந்து மற்போர் செய்யும் வகையறிந்து; பொருவான் யுத்தம் செய்வதற்காக; எதிர் வந்த மல்லை எதிர்த்துவந்த மல்லர்களை; அந்தரம் இன்றி உனக்கு ஒரு அபாயமுமில்லாதபடி; அழித்து அழித்து; ஆடிய தாளிணையாய்! அழகிய இரு பாதத்தினனாய்!; ஆய! எனக்கு ஒருகால் ஆயனே! எனக்காக ஒரு தடவை; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஆயர்கள் போரேறே! ஆயர்களின் போர்க் காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
uruvā! o One with a form of; kāya malar Kayām flower; niṟavā! the One with skin tone; karumukil pol of dark cloud; cuntara! ĕṉ ciṟuvā! my beautiful jewel!; payilum who danced; tūya naṭam gracefully; ucciyile on the head of; kāl̤iyaṉ the kainga serpent; maṭuvil who resided on the waters; kāṉaka mā in the dense forest; kŏmpu paṟittavaṉe! the One who broke the tusks of; tuṅka a tall; kariyiṉ mad elephant by name; mata Kuvalayapeetam; antaram iṉṟi making sure you faced no danger; āṭiya tāl̤iṇaiyāy! the One with beautiful feet!; aḻittu who killed; ĕtir vanta mallai the opposing wrestlers; āyam aṟintu who knows how to wrestle; pŏruvāṉ and fight; āya! ĕṉakku ŏrukāl o Hero, dance once for me; āṭuka cĕṅkīrai dance; āyarkal̤ poreṟe! battle warrior of the cowherd tribe!; āṭuka, āṭukave dance, dance!