PAT 1.5.4

நரகனை அழித்தவனே ஆயர் போரேறு

67 வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே! *
கானகவல்விளவின் காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும் கருநிறஎன்கன்றே! *
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச் செல்லும் *
ஆனை! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
67 வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள * வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே *
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் * கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே **
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் * என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் *
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை * ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (4)
67 vāṉavartām makizha vaṉ cakaṭam urul̤a * vañca mulaippeyiṉ nañcam atu uṇṭavaṉe *
kāṉaka val vil̤aviṉ kāy utirak karutik * kaṉṟu atu kŏṇṭu ĕṟiyum karuniṟa ĕṉkaṉṟe **
teṉukaṉum muraṉum tiṇtiṟal vĕnnarakaṉ * ĕṉpavar tām maṭiyac cĕru atirac cĕllum *
āṉai ĕṉakku ŏrukāl āṭuka cĕṅkīrai * āyarkal̤ poreṟe āṭuka āṭukave (4)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

67. As the gods in the sky rejoiced, You fought with Sakatāsuran and killed him, drank the poisoned milk from wicked Putanā's breasts and killed her. My dear dark-hued calf, You hurled Vathsāsuran in the form of a calf on the wood-apple tree (Kabithāsuran) and killed them. Mighty as an elephant, you fought with the strong Asurans Thenuhan, Muran and cruel Narakāsura in a terrible battle and killed all of them. O dear one, shake your head and crawl for me once. You are a bull and you fight for the cowherds. Crawl, crawl

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வானவர் தாம் மகிழ தேவர்கள் மகிழும்படி; வன் சகடம் வலிமை மிக்க சகடாசுரன்; உருள உருளும்படியாகவும்; வஞ்சமுலை வஞ்சக எண்ணம் கொண்ட; பேயின் பூதனையின்; நஞ்சு அமுது விஷப்பாலை; உண்டவனே! அமிர்தமென பருகினவனே!; கானக வல் காட்டிலுள்ள பருத்த; விளவின் விளாமரத்தின்; காய் உதிரக் கருதி காய்களை உதிரும்படி; கன்று கன்றான அந்த வத்ஸாசுரனைக்; அது கொண்டு கையில் எடுத்து; எறியும் விளவின் மேல் எறிந்தவனாய்; கருநிற கறுத்த நிறத்தையுடைய; என் கன்றே! என் கண்மணியே!; தேனுகனும் முரனும் தேனுகாசுரனும் முராசுரனும்; திண் திறல் திண்மையான; வெந்நரகன் வலிமை மிக்க நரகாசுரன்; என்பவர் தாம் மடிய போன்ற அனைவரும் மடிய; செரு அதிரச் செல்லும் களம் அதிரச் செல்லும்; யுத்தத்திலே போரிலே; ஆனை! யானை போன்றவனே!; எனக்கு ஒருகால் எனக்காக ஒரு முறை; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஆயர்கள் போரேறே! போர்க் காளையே!; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே
vāṉavar tām makiḻa to delights the gods; vaṉ cakaṭam You made the mighty demon Sakatasura; urul̤a to roll over; uṇṭavaṉe! You drank like a nectar; nañcu amutu the poisonous milk of; peyiṉ putanā' who came; vañcamulai with a deceptive intent; kāṉaka val in the forest; vil̤aviṉ You shook the willow tree; kāy utirak karuti dropping the pods; atu kŏṇṭu You took Vatsasuran in the hand; kaṉṟu who came as a calf; ĕṟiyum and threw him onto the ground; ĕṉ kaṉṟe! o my beloved!; karuniṟa with the dark hue; ĕṉpavar tām maṭiya You killed; teṉukaṉum muraṉum Thennukasaura and Murasura; tiṇ tiṟal and the formidable and; vĕnnarakaṉ mighty Narakasura; āṉai! You are an elephant!; yuttattile in the combat; cĕru atirac cĕllum and make the field vibrate; ĕṉakku ŏrukāl for me, once; āṭuka cĕṅkīrai dance; āyarkal̤ poreṟe! fierce warrior of the battle!; āṭuka, āṭukave dance, dance!