Chapter 6

Āṇḍāl's dream of the wedding - (வாரணம் ஆயிரம்)

திருமணக் கனவை உரைத்தல்
Āṇḍāl's dream of the wedding - (வாரணம் ஆயிரம்)
Andal dreamt of marrying Krishna; she shares her dream with her friend. "Friend! The city is adorned with festoons; pots filled with sacred water are placed everywhere. A wedding pavilion is set up with strings of pearls hanging. It is the auspicious time. I am sitting with Krishna. He is performing the marriage rites with me. Holding my hand, he takes + Read more
கண்ணனை மணம் செய்து கொள்வதுபோல் ஆண்டாள் கணவு கண்டாள்; தோழி! நகரத்தில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன; பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணப்பந்தலிட்டு முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. முகூர்த்த வேளை. கண்ணனோடு அமர்ந்திருக்கிறேன். கண்ணன் என்னைப் பாணிக்கிரகணம் செய்துகொள்கிறான். கையைப் + Read more
Verses: 556 to 566
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will get good children and live happily
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 6.1

556 வாரணமாயிரம் சூழவலம்செய்து *
நாரணநம்பி நடக்கின்றானென்றெதிர் *
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும் *
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (2)
556 ## வாரணம் ஆயிரம் * சூழ வலஞ்செய்து *
நாரணன் நம்பி * நடக்கின்றான் என்று எதிர் **
பூரண பொற்குடம் * வைத்துப் புறம் எங்கும் *
தோரணம் நாட்டக் * கனாக் கண்டேன் தோழீ ! நான் (1)
556 ## vāraṇam āyiram * cūzha valañcĕytu *
nāraṇaṉ nampi * naṭakkiṉṟāṉ ĕṉṟu ĕtir **
pūraṇa pŏṟkuṭam * vaittup puṟam ĕṅkum *
toraṇam nāṭṭak * kaṉāk kaṇṭeṉ tozhī ! nāṉ (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

556. O friend! I had a dream. I see people decorating every place with festoons Nāranan Nambi comes in procession surrounded by a thousand elephants. People are ready with golden pots (Poorna Kumbam) in front, to welcome Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! என் தோழியே!; நம்பி நாரணன் நாராயணன் எனும் நம்பி; ஆயிரம் ஆயிரம்; வாரணம் சூழ யானைகள் சூழ; வலம் செய்து வலம்; நடக்கின்றான் வருகின்றான்; என்று என்று நிச்சயித்து; எதிர் அவன் எதிரே; பொற்குடம் பொன்னாலான; பூரண பூர்ண கும்பங்களை; வைத்து வைத்து; புறம் எங்கும் ஊர் முழுதும்; தோரணம் தோரணம்; நாட்ட நாட்டி உள்ளதாக; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! my dear friend; nampi nāraṇaṉ the nambi named Narayana; kaṉāk kaṇṭeṉ i saw a dream; āyiram with thousand; vāraṇam cūḻa elephants surrounding Him; naṭakkiṉṟāṉ is coming in; valam cĕytu procession; ĕṉṟu being certain of it; nāṉ I have; vaittu placed; pūraṇa the ceremonial pots; pŏṟkuṭam made of gold; ĕtir in front of Him; nāṭṭa and hung; toraṇam the festive garlands; puṟam ĕṅkum all across the town

NAT 6.2

557 நாளைவதுவை மணமென்றுநாளிட்டு *
பாளைகமுகு பரிசுடைப்பந்தற்கீழ் *
கோளரிமாதவன் கோவிந்தனென்பான் ஓர் *
காளைபுகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
557 நாளை வதுவை * மணம் என்று நாள் இட்டு *
பாளைக் கமுகு * பரிசு உடைப் பந்தல் கீழ் **
கோளரி மாதவன் * கோவிந்தன் என்பான் ஓர் *
காளை புகுதக் * கனாக் கண்டேன் தோழீ ! நான் (2)
557 nāl̤ai vatuvai- * maṇam ĕṉṟu nāl̤ iṭṭu *
pāl̤aik kamuku * paricu uṭaip pantal kīzh **
kol̤ari mātavaṉ * kovintaṉ ĕṉpāṉ or *
kāl̤ai pukutak * kaṉāk kaṇṭeṉ tozhī ! nāṉ (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

557. O friend, I had a dream. My relatives decide the day for my wedding. They decorate a beautiful pandal with kamugu trees. Mādhavan Govindan who once took a form of a lion, strong as a bull, enters into the pandal— I saw Him in my dream.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; நாளை நாளைக்கு; வதுவை மணம் என்று திருமணம் என்று; நாள் இட்டு நாள் பார்த்து; பாளை பாளைகள் உள்ள; கமுகு பாக்கு மரங்களால் ஆன; பரிசுடை அலங்கார; பந்தல் கீழ் பந்தலின் கீழே; கோளரி நரசிம்மனென்றும்; மாதவன் மாதவனென்றும்; கோவிந்தன் கோவிந்தனென்றும்; என்பான் ஓர் நாமமுடைய ஒரு; காளை புகுத காளைப் புகுவதை; நான் நான்; கனாக் கண்டேன் கனவில் கண்டேன்
toḻī! oh friend!; nāl̤ai tin that tomorrow; nāl̤ iṭṭu an auspocious day was chosen; vatuvai maṇam ĕṉṟu for the wedding; pantal kīḻ under the ceremonial canopy (pandal); paricuṭai that was decorative; kamuku made of betel trees; pāl̤ai and banana leaves; nāṉ I; kaṉāk kaṇṭeṉ saw in the dream; ĕṉpāṉ or that my Lord; kāl̤ai pukuta who is like a strong Bull enters; kol̤ari who is called Narasimhan; mātavaṉ Madhavan; kovintaṉ and Govindhan

NAT 6.3

558 இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம் *
வந்திருந்தென்னை மகட்பேசிமந்திரித்து *
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை *
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
558 இந்திரன் உள்ளிட்ட * தேவர் குழாம் எல்லாம் *
வந்திருந்து என்னை * மகட் பேசி மந்திரித்து **
மந்திரக் கோடி உடுத்தி * மண மாலை *
அந்தரி சூட்டக் * கனாக் கண்டேன் தோழீ! நான் (3)
558 intiraṉ ul̤l̤iṭṭa * tevar-kuzhām ĕllām *
vantiruntu ĕṉṉai * makaṭ peci mantirittu **
mantirak koṭi uṭutti * maṇa-mālai *
antari cūṭṭak * kaṉāk kaṇṭeṉ tozhī! nāṉ (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

558. O friend, I had a dream. Indra and the other gods come together, ask me to be his bride and make all the arrangements. Durgā, my sister-in-law dresses me in the wedding saree (Koorai) and decorates me with fragrant garlands

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; இந்திரன் இந்திரன்; உள்ளிட்ட முதலான; தேவர் தேவர்கள்; குழாம் கூட்டமெல்லாம்; எல்லாம் எல்லாம்; வந்திருந்து இங்கே வந்திருந்து; என்னை என்னை; மகள் கல்யாணப் பெண்ணாக; பேசி பேசி முடித்து; மந்திரித்து இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்து; அந்தரி ‘துர்க்கை’ என்கிற நாத்தனார்; மந்திர வேத மந்திரத்தால்; கோடி தூய்மை செய்யப்பட்ட புடைவையை; உடுத்தி எனக்கு உடுத்தி; மணமாலை மணம் மிக்கமாலையை; சூட்ட எனக்குச் சூட்ட; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! oh friend!; intiraṉ Indra; ul̤l̤iṭṭa and other leading; tevar Gods; kuḻām as assembly; ĕllām they all; vantiruntu came here; peci and declared; ĕṉṉai me; makal̤ as the bride; mantirittu both families gathered and discussed; antari my sister-in-law, Durga; uṭutti made me adorn; koṭi a saree; mantira purified by vedas; cūṭṭa and placed on me; maṇamālai a fragrant garland; nāṉ I; kaṉāk kaṇṭeṉ saw this in my dream

NAT 6.4

559 நால்திசைத்தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி *
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி *
பூப்புனைகண்ணிப் புனிதனோடென்றன்னை *
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
559 நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து * நனி நல்கி *
பார்ப்பனச் சிட்டர்கள் * பல்லார் எடுத்து ஏத்தி **
பூப் புனை கண்ணிப் * புனிதனோடு என்தன்னை *
காப்பு நாண் கட்டக் * கனாக் கண்டேன் தோழீ நான் (4)
559 nāl-ticait tīrttam kŏṇarntu * naṉi nalki *
pārppaṉac ciṭṭarkal̤ * pallār ĕṭuttu etti **
pūp puṉai kaṇṇip * puṉitaṉoṭu ĕṉtaṉṉai *
kāppu-nāṇ kaṭṭak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

559. O friend, I had a dream. The Brahmins bring divine water from the four directions and sprinkle it all over. They sing songs of purification. I see Kannan beautifully garlanded and the priests tie the sacred thread(Kankanam) on my hand along with the divine groom.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; பார்ப்பனச் வைதிக முறைகளில்; சிட்டர்கள் வல்லவர்கள்; பல்லார் பலர்; நால் திசை நான்கு திசைகளிலிருந்து; தீர்த்தம் தீர்த்தங்களை; கொணர்ந்து கொண்டு வந்து; நனி நல்கி நன்றாகத் தெளிந்து; எடுத்து உரத்த குரலில்; ஏத்தி மங்களா சாஸனம் பண்ணி; பூப் புனை புஷ்ப மாலை; கண்ணி அணிந்த; புனிதனோடு பிரானோடு; என் தன்னை என்னை சேர்த்து; காப்பு நாண் கட்ட கங்கணங்கட்ட; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! oh friend!; pallār many; ciṭṭarkal̤ well-versed in; pārppaṉac vedic rituals; kŏṇarntu brought; tīrttam sacred waters; nāl ticai from all four directions; naṉi nalki and sprinkled them thoroughly; etti chanted blessings; ĕṭuttu in a loud voice; nāṉ I; kaṉāk kaṇṭeṉ dreamt; ĕṉ taṉṉai that they unite me; kāppu nāṇ kaṭṭa in marriage; puṉitaṉoṭu with the Lord; kaṇṇi adorned with; pūp puṉai garland of flowers

NAT 6.5

560 கதிரொளிதீபம் கலசமுடனேந்தி *
சதிரிளமங்கையர்தாம் வந்தெதிர்கொள்ள *
மதுரையார்மன்ன னடிநிலைதொட்டு * எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
560 கதிர் ஒளி தீபம் * கலசம் உடன் ஏந்தி *
சதிர் இள மங்கையர் * தாம் வந்து எதிர்கொள்ள **
மதுரையார் மன்னன் * அடிநிலை தொட்டு எங்கும் *
அதிரப் புகுதக் * கனாக் கண்டேன் தோழீ நான் (5)
560 katir-ŏl̤i tīpam * kalacam uṭaṉ enti *
catir il̤a maṅkaiyar * tām vantu ĕtirkŏl̤l̤a **
maturaiyār maṉṉaṉ * aṭinilai tŏṭṭu ĕṅkum *
atirap pukutak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

560. O friend, I had a dream. Dancing women carry shining lights and kalasams and go in front of Him and welcome Him. The king of Madhura walks touching the earth as the earth shakes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; சதிர் இள அழகிய; மங்கையர் தாம் இளம் பெண்கள்; கதிர்ஒளி சூரிய ஒளி போன்ற; தீபம் தீபத்தையும்; கலசம் கலசத்தையும்; உடன் ஏந்தி ஏந்திக் கொண்டு; வந்து எதிர் எதிர் வந்து; கொள்ள அழைக்க; மதுரையார் மன்னன் மதுரை பிரான்; அடி நிலை பாதுகைகளை; தொட்டு சாத்திக்கொண்டு; எங்கும் பூமியெங்கும்; அதிரப் புகுத அதிர நடந்து வர; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! oh frriend!; catir il̤a beautiful; maṅkaiyar tām young women; uṭaṉ enti carry; tīpam lamps; katirŏl̤i that shine like sunlight; kalacam and sacred pots; vantu ĕtir come towards; kŏl̤l̤a to invite; maturaiyār maṉṉaṉ the Lord of Madhura; tŏṭṭu wore the; aṭi nilai footwear; ĕṅkum and the earth; atirap pukuta trembles, as He walks; nāṉ I; kaṉāk kaṇṭeṉ saw this in the dream

NAT 6.6

561 மத்தளங்கொட்ட வரிசங்கம்நின்றூத *
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து * என்னைக்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
561 மத்தளம் கொட்ட * வரி சங்கம் நின்று ஊத *
முத்து உடைத் தாமம் * நிரை தாழ்ந்த பந்தற் கீழ் **
மைத்துனன் நம்பி * மதுசூதன் வந்து என்னைக் *
கைத்தலம் பற்றக் * கனாக் கண்டேன் தோழீ நான் (6)
561 mattal̤am kŏṭṭa * vari-caṅkam niṉṟu ūta *
muttu uṭait tāmam * nirai tāzhnta pantaṟ kīzh **
maittuṉaṉ nampi * matucūtaṉ vantu ĕṉṉaik *
kaittalam paṟṟak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

561. O friend, I had a dream. The drums are beaten, the lined conches are blown and my bridegroom, Nambi Madhusūdanan, comes and holds my hand under the pandal that is decorated with hanging strings of pearls.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; மத்தளம் மத்தளங்களை; கொட்ட கொட்ட; வரி ரேகைகளை உடைய; சங்கம் சங்குகளை; நின்று ஊத ஊதவும்; மைத்துனன் மைத்துனன்; நம்பி முறையுள்ளவனான; மதுசூதனன் மதுவைக் கொன்ற கண்ணபிரான்; முத்து உடைத் முத்துக்கள் உடைய; தாமம் மாலைத் திரள்; நிரை தாழ்ந்த தொங்கவிடப்பட்ட; பந்தல் கீழ் பந்தலின் கீழே; வந்து வந்து; என்னைக் என்னை; கைத்தலம் திருமணம்; பற்ற செய்துகொள்ள; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! oh friend!; mattal̤am while the drums; kŏṭṭa were being beaten; vari and while the lined; caṅkam conches; niṉṟu ūta were being blown; maittuṉaṉ my Beloved; nampi the One with right conduct; matucūtaṉaṉ Kannan who killed the demon Madhu; vantu comes; paṟṟa and takes; ĕṉṉaik me; kaittalam in marriage; pantal kīḻ below that wedding canopy; tāmam with garlands; muttu uṭait adorned with pearls; nirai tāḻnta were hung down; nāṉ I; kaṉāk kaṇṭeṉ saw this in the dream

NAT 6.7

562 வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால் *
பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்து *
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றி *
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
562 வாய் நல்லார் * நல்ல மறை ஓதி மந்திரத்தால் *
பாசிலை நாணல் படுத்துப் * பரிதி வைத்து **
காய் சின மா களிறு அன்னான் * என் கைப்பற்றி *
தீ வலஞ் செய்யக் * கனாக் கண்டேன் தோழீ நான் (7)
562 vāy nallār * nalla maṟai oti mantirattāl *
pācilai nāṇal paṭuttup * pariti vaittu **
kāy ciṉa mā kal̤iṟu aṉṉāṉ * ĕṉ kaippaṟṟi *
tī valañ cĕyyak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

562. Skilled Vediyars recite the Vedās, and chant mantras. They spread holy grass for rituals He who is strong as an angry elephant holds my hand and we go round the sacred fire(Agni).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; வாய் உச்சரிப்பில்; நல்லார் தேர்ந்த உத்தமர்கள்; நல்ல சிறந்த; மறை ஓதி வேதங்களை உச்சரிக்க; மந்திரத்தால் மந்திரங்களைக் கொண்டு; பாசிலை பசுமையான; நாணல் ஒருவித புல்லை; படுத்து அமைத்து; பரிதி வைத்து சமித்துக்களை இட்டு; காய் சின சினமுடைய; மா களிறு மத்தகஜம் போன்ற; அன்னான் கண்ணபிரான்; என் கை பற்றி என் கையைப்பற்றி; தீ வலம் செய்ய அக்னியை வலம் வர; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! oh, friend!; nallār the priests well versed in; vāy vedic recitation; maṟai oti chant the vedas; nalla that are sacred; mantirattāl using holy mantras; pācilai fresh; nāṇal sacred grass; paṭuttu were arranged; pariti vaittu and placed the sacrifical twigs; kāy ciṉa the fierce-looking; aṉṉāṉ Kannan; mā kal̤iṟu like a mighty elephant; ĕṉ kai paṟṟi holds my hand; tī valam cĕyya and circle the sacred fire; nāṉ I; kaṉāk kaṇṭeṉ saw this in the dream

NAT 6.8

563 இம்மைக்குமேழேழ்பிறவிக்கும் பற்றாவான் *
நம்மையுடையவன் நாராயணன்நம்பி *
செம்மையுடையதிருக்கையால் தாள்பற்றி *
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
563 இம்மைக்கும் * ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் *
நம்மை உடையவன் * நாராயணன் நம்பி **
செம்மை உடைய * திருக்கையால் தாள் பற்றி *
அம்மி மிதிக்கக் * கனாக் கண்டேன் தோழீ நான் (8)
563 immaikkum * ezh ezh piṟavikkum paṟṟu āvāṉ *
nammai uṭaiyavaṉ * nārāyaṇaṉ nampi **
cĕmmai uṭaiya * tirukkaiyāl tāl̤ paṟṟi *
ammi mitikkak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

563. O friend, I had a dream. He is the refuge for this birth and the fourteen future births. He, our king Nārāyanān Nambi holds my feet with his divine, perfect fingers and places them on the grinding stone(Ammi ).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; இம்மைக்கும் இப்பிறவிக்கும்; ஏழ் ஏழ் மற்ற; பிறவிக்கும் பிறவிகளுக்கும்; பற்று அடைக்கலமாய்; ஆவான் இருப்பவனான; நம்மை உடையவன் நம் தலைவனான; நாராயணன் நாராயணனான; நம்பி கண்ணபிரான்; செம்மை உடைய சிவந்த; திருக் கையால் தன் திருக்கையினால்; தாள் பற்றி என் காலைப் பிடித்து; அம்மி அம்மியின் மேல்; மிதிக்க எடுத்து வைக்க; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! oh my friend!; immaikkum for this birth; eḻ eḻ and other; piṟavikkum births; nampi Kannan; nammai uṭaiyavaṉ our Lord who; āvāṉ stands as our; paṟṟu refuge; nārāyaṇaṉ who is that Narayanan; tāl̤ paṟṟi He held my foot; cĕmmai uṭaiya with His red; tiruk kaiyāl hand; mitikka and placed it on; ammi the grinding stone (a wedding ritual); nāṉ I; kaṉāk kaṇṭeṉ saw this in the dream

NAT 6.9

564 வரிசிலைவாள்முகத்து என்னைமார்தாம்வந்திட்டு *
எரிமுகம்பாரித்து என்னைமுன்னேநிறுத்தி *
அரிமுகனச்சுதன் கைம்மேலென்கைவைத்து *
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
564 வரிசிலை வாள் முகத்து * என்னைமார் தாம் வந்திட்டு *
எரிமுகம் பாரித்து * என்னை முன்னே நிறுத்தி **
அரிமுகன் அச்சுதன் * கைம்மேல் என் கை வைத்து *
பொரிமுகந்து அட்டக் * கனாக் கண்டேன் தோழீ நான் (9)
564 varicilai vāl̤ mukattu * ĕṉṉaimār tām vantiṭṭu *
ĕrimukam pārittu * ĕṉṉai muṉṉe niṟutti **
arimukaṉ accutaṉ * kaimmel ĕṉ kai vaittu *
pŏrimukantu aṭṭak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

564. O friend, I had a dream. My brothers with shining faces and bows come and, standing before us, they kindle the sacred fire and make it bright. They join my hand with the hand of Achuthan who once took the form of a lion, and they fill it with Pori ( puffed rice, an offering to Agni)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; வரிசிலை அழகிய; வாள் வாள் போன்றபுருவமுள்ள; முகத்து முகத்தையுடைய; என் எனது; ஐமார் தாம் தமையன்மார்கள்; வந்திட்டு வந்து; எரிமுகம் அக்னியை நன்றாக; பாரித்த ஜொலிக்கச்செய்து; என்னை முன்னே அதன் முன்னே; நிறுத்தி என்னை நிறுத்தி; அரிமுகன் சிங்கமுக; அச்சுதன் பிரானின்; கைம்மேல் கையின்மேல்; என் கை என்னுடைய கையை; வைத்து வைத்து; பொரி முகந்து பொரியை அள்ளி; அட்ட பரிமாற; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! oh, my friend!; ĕṉ my; aimār tām younger brothers; mukattu who have a face; vāl̤ with eyebrows like sharp swords that are; varicilai beautiful; vantiṭṭu came; ĕrimukam and made the fire; pāritta burn brightly; niṟutti and made me stand; ĕṉṉai muṉṉe in front of it; vaittu then placed; ĕṉ kai my hand on; kaimmel the hand of; arimukaṉ the lion-faced; accutaṉ Lord; aṭṭa later filled with; pŏri mukantu the puffed rice; nāṉ I; kaṉāk kaṇṭeṉ saw this in the dream

NAT 6.10

565 குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து *
மங்கலவீதி வலம்செய்துமணநீர் *
அங்கவனோடும் உடன்சென்றங்கானைமேல் *
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
565 குங்குமம் அப்பிக் * குளிர் சாந்தம் மட்டித்து *
மங்கல வீதி * வலஞ் செய்து மண நீர் **
அங்கு அவனோடும் * உடன் சென்று அங்கு ஆனைமேல் *
மஞ்சனம் ஆட்டக் * கனாக் கண்டேன் தோழீ நான் (10)
565 kuṅkumam appik * kul̤ir cāntam maṭṭittu *
maṅkala vīti * valañ cĕytu maṇa nīr **
aṅku avaṉoṭum * uṭaṉ cĕṉṟu aṅku āṉaimel *
mañcaṉam āṭṭak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

565. O friend, I had a dream. Adorned with kumkum and smeared with cool sandal paste, I go with him on an elephant in procession around all the auspicious streets as people sprinkle turmeric water on us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தோழீ! தோழியே!; குங்குமம் குங்குமத்தை; அப்பி உடம்பெல்லாம் பூசி; குளிர் குளிர்ந்த; சாந்தம் சந்தனத்தை; மட்டித்து நிறையத் தடவி; அங்கு ஆனைமேல் யானை மீது; அவனோடும் அக்கண்ணபிரானோடு; உடன்சென்று உடன்சென்று; மங்கல அலங்காரங்கள் விளங்குகின்ற; வீதி வீதிகளிலே; வலம் செய்து ஊர்வலம் வந்து; மண நீர் மணம் கமழும் நீரால்; அங்கு அங்கு; மஞ்சனம் ஆட்ட எங்களை நீராட்ட; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்
toḻī! oh my friend!; kuṅkumam with kumkum; appi smeared all over the body; kul̤ir and cool; cāntam sandal paste; maṭṭittu applied generously; uṭaṉcĕṉṟu I went along with; avaṉoṭum Kannan; aṅku āṉaimel on an elephant; valam cĕytu as a grand procession; maṅkala in the beautifully decorated; vīti streets; mañcaṉam āṭṭa and were bathed; aṅku there using; maṇa nīr fragrant perfume water; nāṉ I; kaṉāk kaṇṭeṉ saw this in the dream

NAT 6.11

566 ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை *
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன்கோதைசொல் *
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர் *
வாயுநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2)
566 ## ஆயனுக்காகத் * தான் கண்ட கனாவினை *
வேயர் புகழ் * வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் **
தூய தமிழ்மாலை * ஈரைந்தும் வல்லவர் *
வாயும் நன் மக்களைப் பெற்று * மகிழ்வரே (11)
566 ## āyaṉukkākat * tāṉ kaṇṭa kaṉāviṉai *
veyar pukazh * villiputtūrkkoṉ kotai cŏl **
tūya tamizhmālai * īraintum vallavar *
vāyum naṉ makkal̤aip pĕṟṟu * makizhvare (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

566. Kodai, the daughter of the chief of Villiputhur, praised by the family of Vediyars, composed a garland of ten Tamil pāsurams that describe the dream of her marriage with, Lord Kannan, the cowherd. Those who learn and recite these ten pāsurams written in chaste Tamil will be blessed with good children and find happiness.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வேயர் புகழ் வேயர் குலத்தவர் புகழும்; வில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர்; கோன் பெரியோனின் மகள்; கோதை கோதை; தான் தான்; ஆயனுக்காக கண்ணனுக்கானவள் என்று; கண்ட கனாவினை கனவு கண்டதை; சொல் அருளிச்செய்த; தூய தமிழ் தூய தமிழ்; மாலை பாசுரங்களான; ஈரைந்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லவர் ஓதவல்லவர்கள்; வாயும் நன் நற்குணகங்களமைந்த; மக்களை மக்களை; பெற்று மகிழ்வரே பெற்று மகிழ்வர்
kotai Kodai (Andal); koṉ the daughter of Periazhwar of; villiputtūr Sri Villiputhur that is; veyar pukaḻ prasied by Veic scholars; cŏl composed; mālai these hymns; tūya tamiḻ in pure tamil; kaṇṭa kaṉāviṉai about her dream of; tāṉ her; āyaṉukkāka marrying Kannan; vallavar those who recite; īraintum thse ten pasurams; pĕṟṟu makiḻvare will be blessed with; vāyum naṉ good hearted; makkal̤ai children