NAT 6.3

எனக்கு மணமாலை சூட்டக் கனாக்கண்டேன்

Verse 3
558 இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம் *
வந்திருந்தென்னை மகட்பேசிமந்திரித்து *
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை *
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
558 intiraṉ ul̤l̤iṭṭa * tevar-kuzhām ĕllām *
vantiruntu ĕṉṉai * makaṭ peci mantirittu **
mantirak koṭi uṭutti * maṇa-mālai *
antari cūṭṭak * kaṉāk kaṇṭeṉ tozhī! nāṉ (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

558. O friend, I had a dream. Indra and the other gods come together, ask me to be his bride and make all the arrangements. Durgā, my sister-in-law dresses me in the wedding saree (Koorai) and decorates me with fragrant garlands

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழீ! தோழியே!; இந்திரன் இந்திரன்; உள்ளிட்ட முதலான; தேவர் தேவர்கள்; குழாம் கூட்டமெல்லாம்; எல்லாம் எல்லாம்; வந்திருந்து இங்கே வந்திருந்து; என்னை என்னை; மகள் கல்யாணப் பெண்ணாக; பேசி பேசி முடித்து; மந்திரித்து இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்து; அந்தரி ‘துர்க்கை’ என்கிற நாத்தனார்; மந்திர வேத மந்திரத்தால்; கோடி தூய்மை செய்யப்பட்ட புடைவையை; உடுத்தி எனக்கு உடுத்தி; மணமாலை மணம் மிக்கமாலையை; சூட்ட எனக்குச் சூட்ட; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்

Detailed WBW explanation

O beloved friend! Celestial beings, including Indra and others, graced this place and deliberated on the nuptial preparations, with myself envisioned as the bride. In my dream, I beheld Dhurgā, the esteemed sister of my husband, adorning me with the auspicious wedding sārī and fragrant garlands.