NAT 6.10

மணநீரால் மஞ்சனமாட்டுவதாகக் கனாக்கண்டேன்

Verse 10
565 குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து *
மங்கலவீதி வலம்செய்துமணநீர் *
அங்கவனோடும் உடன்சென்றங்கானைமேல் *
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
565 kuṅkumam appik * kul̤ir cāntam maṭṭittu *
maṅkala vīti * valañ cĕytu maṇa nīr **
aṅku avaṉoṭum * uṭaṉ cĕṉṟu aṅku āṉaimel *
mañcaṉam āṭṭak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

565. O friend, I had a dream. Adorned with kumkum and smeared with cool sandal paste, I go with him on an elephant in procession around all the auspicious streets as people sprinkle turmeric water on us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழீ! தோழியே!; குங்குமம் குங்குமத்தை; அப்பி உடம்பெல்லாம் பூசி; குளிர் குளிர்ந்த; சாந்தம் சந்தனத்தை; மட்டித்து நிறையத் தடவி; அங்கு ஆனைமேல் யானை மீது; அவனோடும் அக்கண்ணபிரானோடு; உடன்சென்று உடன்சென்று; மங்கல அலங்காரங்கள் விளங்குகின்ற; வீதி வீதிகளிலே; வலம் செய்து ஊர்வலம் வந்து; மண நீர் மணம் கமழும் நீரால்; அங்கு அங்கு; மஞ்சனம் ஆட்ட எங்களை நீராட்ட; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்

Detailed WBW explanation

Oh dear friend! I beheld in my vision that sacred vermilion was anointed upon the body; alongside, the cooling sandalwood paste was also adorned. Together, Emperumān and I traversed the town, seated atop an elephant, meandering through ornately decorated streets. I witnessed both of us being showered with water infused with fragrant essences.