NAT 6.7

கண்ணன் என்கைபற்றித் தீவலம் செய்யக் கனாக்கண்டேன்

Verse 7
562 வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால் *
பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்து *
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றி *
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
562 vāy nallār * nalla maṟai oti mantirattāl *
pācilai nāṇal paṭuttup * pariti vaittu **
kāy ciṉa mā kal̤iṟu aṉṉāṉ * ĕṉ kaippaṟṟi *
tī valañ cĕyyak * kaṉāk kaṇṭeṉ tozhī nāṉ (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

562. Skilled Vediyars recite the Vedās, and chant mantras. They spread holy grass for rituals He who is strong as an angry elephant holds my hand and we go round the sacred fire(Agni).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழீ! தோழியே!; வாய் உச்சரிப்பில்; நல்லார் தேர்ந்த உத்தமர்கள்; நல்ல சிறந்த; மறை ஓதி வேதங்களை உச்சரிக்க; மந்திரத்தால் மந்திரங்களைக் கொண்டு; பாசிலை பசுமையான; நாணல் ஒருவித புல்லை; படுத்து அமைத்து; பரிதி வைத்து சமித்துக்களை இட்டு; காய் சின சினமுடைய; மா களிறு மத்தகஜம் போன்ற; அன்னான் கண்ணபிரான்; என் கை பற்றி என் கையைப்பற்றி; தீ வலம் செய்ய அக்னியை வலம் வர; நான் நான்; கனாக் கண்டேன் கனாக் கண்டேன்

Detailed WBW explanation

O friend! Scholars well-versed in the Vedas were reciting the sublime Vedic hymns with impeccable pronunciation. They carefully laid out the sacred kuśa grass adorned with fresh leaves and sustained Agni (the sacred fire) with dry twigs. In my vision, I beheld Kaṇṇan Emperumān, majestic as a resplendent wild elephant in its glory, grasping my hand and leading me in a circumambulation around Agni.