Chapter 8

Thirunaraiyur 5 - (மான் கொண்ட)

திருநறையூர் 5
Thirunaraiyur 5 - (மான் கொண்ட)
The āzhvār, having attained the divine darshan of Lord Thirumal at Thirunaraiyur, sings with a heart full of joy.
திருநறையூர்த் திருமாலின் திவ்விய தரிசனம் கிடைக்கப் பெற்ற ஆழ்வார் மனமகிழ்ந்து பாடுகிறார்.
Verses: 1518 to 1527
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and become a God
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 6.8.1

1518 மான்கொண்டதோல்மார்வின் மாணியாய் * மாவலிமண்
தான்கொண்டு தாளாலளந்தபெருமானை *
தேன்கொண்டசாரல் திருவேங்கடத்தானை *
நான்சென்றுநாடி நறையூரில்கண்டேனே. (2)
1518 ## மான் கொண்ட தோல் * மார்வின் மாணி ஆய் * மாவலி மண்
தான் கொண்டு * தாளால் அளந்த பெருமானை **
தேன் கொண்ட சாரல் * திருவேங்கடத்தானை *
நான் சென்று நாடி * நறையூரில் கண்டேனே 1
1518 ## māṉ kŏṇṭa tol * mārviṉ māṇi āy * māvali maṇ
tāṉ kŏṇṭu * tāl̤āl al̤anta pĕrumāṉai **
teṉ kŏṇṭa cāral * tiruveṅkaṭattāṉai *
nāṉ cĕṉṟu nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-1

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1518. Our Thirumāl took the form of a bachelor wearing a deerskin on his chest, went to king Mahābali, asked for three feet of land and measured the world and the sky with his two feet. I searched for him in Thiruvenkatam hills where honey drips on the slopes and I saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மான் கொண்ட தோல் மான் தோலை; மார்வின் மார்பிலே; மாணி ஆய் தரித்த பிரம்மசாரியாக; மாவலி மஹாபலியிடம்; மண் தான் கொண்டு பூமியை யாசித்து; தாளால் அளந்த திருவடிகளால் அளந்த; பெருமானை பெருமானை; தேன் கொண்ட தேனடைகளையுடைய; சாரல் மலைச்சாரலில்; திருவேங்கடத்தானை இருக்கும் திருவேங்கடத்தானை; நான் சென்று நாடி நான் தேடிச் சென்று போய்; நறையூரில் கண்டேனே திருநறையூரில் கண்டேனே

PT 6.8.2

1519 முந்நீரைமுன்னாள்கடைந்தானை * மூழ்த்தநாள்
அந்நீரைமீனாய் அமைத்தபெருமானை *
தென்னாலிமேய திருமாலைஎம்மானை *
நன்னீர்வயல்சூழ் நறையூரில்கண்டேனே.
1519 முந்நீரை முன் நாள் * கடைந்தானை * மூழ்த்த நாள்
அந் நீரை மீன் ஆய் * அமைத்த பெருமானை *
தென் ஆலி மேய திருமாலை எம்மானை *
நல் நீர் சூழ் * நறையூரில் கண்டேனே 2
1519 munnīrai muṉ nāl̤ * kaṭaintāṉai * mūzhtta nāl̤
an nīrai mīṉ āy * amaitta pĕrumāṉai *
tĕṉ āli meya tirumālai ĕmmāṉai *
nal nīr cūzh * naṟaiyūril kaṇṭeṉe-2

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1519. Our father, Thirumāl, the lord of Thennāli (Thiruvāli) churned the milky ocean, and in ancient times, at the end of the eon, he took the form of a fish and swallowed the ocean. I saw him in Thirunaraiyur surrounded with fields filled with good water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் நாள் முன்பொரு சமயம்; முன் நீரை கடலை [ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர்]; கடைந்தானை கடைந்தவனும்; மூழ்த்த நாள் பிரளயகாலத்தில்; அந் நீரை அந் நீரை; மீனாய் மீனாக அவதரித்து; அமைத்த தன் வயிற்றில் அடக்கி அமைத்த; பெருமானை பெருமானை; தென் ஆலி திருவாலி நகரில்; மேய திருமாலை திருமகளுடன் கூடி இருக்கும்; எம்மானை எம்பெருமானை; நல் நீர் நல்ல நீர்பாயும்; வயல் சூழ் வயல்களால் சூழந்த; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 6.8.3

1520 தூவாயபுள்ளூர்ந்துவந்து துறைவேழம் *
மூவாமைநல்கி முதலைதுணித்தானை *
தேவாதிதேவனைச் செங்கமலக்கண்ணானை *
நாவாயுளானை நறையூரில்கண்டேனே.
1520 தூ வாய புள் ஊர்ந்து வந்து * துறை வேழம் *
மூவாமை நல்கி * முதலை துணித்தானை **
தேவாதிதேவனைச் * செங் கமலக் கண்ணானை *
நாவாய் உளானை * நறையூரில் கண்டேனே 3
1520 tū vāya pul̤ ūrntu vantu * tuṟai vezham *
mūvāmai nalki * mutalai tuṇittāṉai **
tevātitevaṉaic * cĕṅ kamalak kaṇṇāṉai *
nāvāy ul̤āṉai * naṟaiyūril kaṇṭeṉe-3

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1520. The lord came on Garudā, the faultless bird and killed the crocodile that had caught Gajendra the elephant on the bank of the pond and saved him. He is the god of gods and he has lovely lotus eyes and I saw him, the god of Thirunāvāy in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூ வாய தூய வாயையுடைய; புள் ஊர்ந்து கருடன் மேல்; துறை வந்து வேழம் வேகமாக வந்து யானையின்; மூவாமை நல்கி துயர் தீர்த்து; முதலை முதலையை; துணித்தானை துணித்தவனான; தேவாதி தேவனை தேவாதி தேவனை; செங்கமல செந்தாமரைப் பூவை ஒத்த; கண்ணானை கண்களை யுடையவனை; நாவாய் திருநாவாய் என்னும்; உளானை இடத்திலிருப்பவனை; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 6.8.4

1521 ஓடாஅரியாய் இரணியனைஊனிடந்த *
சேடார்பொழில்சூழ் திருநீர்மலையானை *
வாடாமலர்த்துழாய் மாலைமுடியானை *
நாடோறும்நாடி நறையூரில்கண்டேனே.
1521 ஓடா அரி ஆய் * இரணியனை ஊன் இடந்த *
சேடு ஆர் பொழில் சூழ் * திருநீர்மலையானை **
வாடா மலர்த் துழாய் * மாலை முடியானை *
நாள்தோறும் நாடி * நறையூரில் கண்டேனே 4
1521 oṭā ari āy * iraṇiyaṉai ūṉ iṭanta *
ceṭu ār pŏzhil cūzh * tirunīrmalaiyāṉai **
vāṭā malart tuzhāy * mālai muṭiyāṉai *
nāl̤toṟum nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-4

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1521. The god of Thiruneermalai surrounded with groves took the form of a man-lion that never retreats, went to Hiranyan and split open his chest. I searched everyday for that lord with a thulasi garland that never withers and I saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓடா புறமுதுகு காட்டி ஓடாத; அரி ஆய் நரசிம்மமாய்; இரணியனை இரணியனின்; ஊன் இடந்த உடலை கிழித்தவனும்; சேடு ஆர் இளமைமிக்க; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; திருநீர் திருநீர்; மலையானை மலையிலிருப்பவனை; வாடா வாடாத; மலர் மலர்களோடுகூடின; துழாய் திருத்துழாய்; மாலை மாலை; முடியானை அணிந்தவனை; நாள் தோறும் நாள் தோறும்; நாடி சென்று தேடி; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 6.8.5

1522 கல்லார்மதிள்சூழ் கடியிலங்கைக்காரரக்கன் *
வல்லாகங்கீள வரிவெஞ்சரம்துரந்த
வில்லானை * செல்வவிபீடணற்கு வேறாக *
நல்லானைநாடி நறையூரில்கண்டேனே.
1522 கல் ஆர் மதிள் சூழ் * கதி இலங்கைக் கார் அரக்கன் *
வல் ஆகம் கீள * வரி வெம் சரம் துரந்த
வில்லானை ** செல்வ விபீடணற்கு * வேறாக *
நல்லானை நாடி * நறையூரில் கண்டேனே 5
1522 kal ār matil̤ cūzh * kati ilaṅkaik kār arakkaṉ *
val ākam kīl̤a * vari vĕm caram turanta
villāṉai ** cĕlva vipīṭaṇaṟku * veṟāka *
nallāṉai nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-5

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1522. He shot cruel arrows with his bow and split open the chest of the terrible Rākshasa Rāvana, the king of guarded Lankā surrounded with strong stone forts. He gave his grace to good Vibhishanā even though he was the brother of his enemy Rāvana. I looked for that good lord and saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல் ஆர் கற்களால் கட்டப்பட்ட; மதில் சூழ் மதிள்கள் சூழந்த; கடி அகழிகளோடு கூடின; இலங்கை இலங்கையின்; கார் கருத்த; அரக்கன் அரக்கன் ராவணனின்; வல் ஆகம் மிடுக்குடைய சரீரம்; கீள பிளக்கும்படியாக; வரி வெம் சரம் அழகிய அக்னி அம்புகளை; துரந்த பிரயோகித்த; வில்லானை வில்லையுடையவனை; செல்வ விபீடணற்கு விபீஷணனிடத்தில்; வேறாக அன்பும் நட்பும்; நல்லானை கொண்ட பெருமானை; நாடி தேடி; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 6.8.6

1523 உம்பருலகோடு உயிரெல்லாம் * உந்தியில்
வம்புமலர்மேல் படைத்தானைமாயோனை *
அம்பன்னகண்ணாள் அசோதைதன்சிங்கத்தை *
நம்பனைநாடி நறையூரில்கண்டேனே.
1523 உம்பர் உலகோடு * உயிர் எல்லாம் உந்தியில் *
வம்பு மலர்மேல் * படைத்தானை மாயோனை **
அம்பு அன்ன கண்ணாள் * அசோதை தன் சிங்கத்தை *
நம்பனை நாடி * நறையூரில் கண்டேனே 6
1523 umpar-ulakoṭu * uyir ĕllām untiyil *
vampu malarmel * paṭaittāṉai māyoṉai **
ampu aṉṉa kaṇṇāl̤ * acotai-taṉ ciṅkattai *
nampaṉai nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-6

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1523. He created Nānmuhan on a lotus on his navel and Nānmuhan created all the worlds, the world of the gods and the creatures of the world. He is the Māyon, the lion-like son of Yashodā with eyes as sharp as arrows. I looked for our dear friend and saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உம்பர் தேவர்; உலகோடு மனிதர் மற்றுமுள்ள அனைத்து; உயிரெல்லாம் உயிரினங்கள் எல்லாம்; உந்தியில் தனது நாபியில்; வம்பு மணம்மிக்க; மலர்மேல் தாமரைப் பூவிலே; படைத்தானை ஸ்ருஷ்டித்தவனை; மாயோனை மாயனை; அம்பு அன்ன அம்பு போன்ற; கண்ணாள் கண்களையுடைய; அசோதை தன் யசோதை தன்; சிங்கத்தை சிங்கத்தை கண்ணனை; நம்பனை நம்பத்தகுந்த எம்பெருமானை; நாடி தேடிச்சென்று; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 6.8.7

1524 கட்டேறுநீள்சோலைக் காண்டவத்தைத்தீமூட்டி
விட்டானை * மெய்யம்அமர்ந்த பெருமானை *
மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானைநாடி நறையூரில்கண்டேனே.
1524 கட்டு ஏறு நீள் சோலைக் * காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை **
மட்டு ஏறு கற்பகத்தை * மாதர்க்கு ஆய் * வண் துவரை
நட்டானை நாடி * நறையூரில் கண்டேனே 7
1524 kaṭṭu eṟu nīl̤ colaik * kāṇṭavattait tī mūṭṭi
viṭṭāṉai * mĕyyam amarnta pĕrumāṉai **
maṭṭu eṟu kaṟpakattai * mātarkku āy * vaṇ tuvarai
naṭṭāṉai nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-7

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1524. He is the god of Thirumeyyam who burned the forest Kāndam filled with abundant groves, brought the Karpaga tree dripping with honey from Indra’s world for his wife Satyabama and planted it in Dwarakapuri. I searched for him and saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கட்டு ஏறு காவல் மிகுந்த; நீள் நீண்ட; சோலை சோலைகளால் சூழ்ந்த; காண்டவத்தை காண்டாவனத்தை; தீ மூட்டி தீ மூட்டி; விட்டானை விட்டவனை; மெய்யம் திருமெய்யத்தில்; அமர்ந்த அமர்ந்த; பெருமானை பெருமானை; மட்டு ஏறு தேன் மிகுந்த; கற்பகத்தை கல்பக விருக்ஷத்தை; மாதர்க்கு ஆய் ஸத்யபாமைக்காக; வண் துவரை துவாரகாபுரியில்; நட்டானை நட்டவனை; நாடி தேடிச் சென்று; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 6.8.8

1525 மண்ணின்மீபாரங்கெடுப்பான் மறமன்னர் *
பண்ணின்மேல்வந்த படையெல்லாம்பாரதத்து *
விண்ணின்மீதேற விசயன்தேரூர்ந்தானை *
நண்ணிநான்நாடி நறையூரில்கண்டேனே.
1525 மண்ணின் மீ பாரம் கெடுப்பான் * மற மன்னர் *
பண்ணின்மேல் வந்த * படை எல்லாம் பாரதத்து **
விண்ணின் மீது ஏற * விசயன் தேர் ஊர்ந்தானை *
நண்ணி நான் நாடி * நறையூரில் கண்டேனே 8
1525 maṇṇiṉ mī pāram kĕṭuppāṉ * maṟa maṉṉar *
paṇṇiṉmel vanta * paṭai ĕllām pāratattu **
viṇṇiṉ mītu eṟa * vicayaṉ ter ūrntāṉai *
naṇṇi nāṉ nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-8

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1525. He drove the chariot for Arjunā in the Bhārathā war, fought with the armies of his heroic enemies, conquered them and sent them to heaven, saving the people of the earth from their affliction. I searched for him and saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணின் பூமியின்; மீ பாரம் பூ பாரத்தை; கெடுப்பான் தொலைக்க; மற மன்னர் கோபத்துடனும்; பண்ணின் சேனைகளுடனும் எதிர்த்து வந்த; மேல் வந்த அரசர்களின்; படையெல்லாம் எல்லாச் சேனைகளும்; பாரதத்து பாரதப் போரில்; விண்ணின் மீது ஏற பரமபதம் அடைய; விசயன் அர்ஜுனனின்; தேர் ஊர்ந்தானை தேரை நடத்தினவனை; நண்ணி நான் நான் ஆசையோடு; நாடி தேடிச் சென்று; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 6.8.9

1526 பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிதன்னோடும் *
சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை *
கொங்கேறுசோலைக் குடந்தைக்கிடந்தானை *
நங்கோனைநாடி நறையூரில்கண்டேனே. (2)
1526 ## பொங்கு ஏறு நீள் சோதிப் * பொன் ஆழி தன்னோடும் *
சங்கு ஏறு கோலத் * தடக் கைப் பெருமானை **
கொங்கு ஏறு சோலைக் * குடந்தைக் கிடந்தானை *
நம் கோனை நாடி * நறையூரில் கண்டேனே 9
1526 ## pŏṅku eṟu nīl̤ cotip * pŏṉ āzhi-taṉṉoṭum *
caṅku eṟu kolat * taṭak kaip pĕrumāṉai **
kŏṅku eṟu colaik * kuṭantaik kiṭantāṉai *
nam koṉai nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-9

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1526. The lord, our king, carries a golden discus in his right hand that spreads light everywhere and in his left hand he holds a conch that brings him victory in battle. He stays in Thirukkudandai filled with groves dripping with honey. I searched for my king and saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு ஏறு பொங்கும்; நீள் சோதி ஒளி பொருந்திய; பொன் அழகிய; ஆழி சக்கரத்தை; தன்னோடும் உடையவனும்; சங்கு ஏறு கோல அழகிய சங்கையும்; தடக் கைப் கையிலுடைய; பெருமானை பெருமானை; கொங்கு ஏறு தேன் நிறைந்த; சோலை சோலைகளையுடைய; குடந்தைக் திருக்குடந்தையில்; கிடந்தானை இருப்பவனை; நம் கோனை நம்பெருமானை; நாடி தேடிச் சென்று; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே

PT 6.8.10

1527 மன்னுமதுரை வசுதேவர்வாழ்முதலை *
நன்னறையூர்நின்ற நம்பியை * வம்பவிழ்தார்க்
கன்னவிலும்தோளான் கலியனொலிவல்லார் *
பொன்னுலகில்வானவர்க்குப் புத்தேளிராகுவரே. (2)
1527 ## மன்னு மதுரை * வசுதேவர் வாழ் முதலை *
நல் நறையூர் * நின்ற நம்பியை ** வம்பு அவிழ் தார்க்
கல் நவிலும் தோளான் * கலியன் ஒலி வல்லார் *
பொன் உலகில் வானவர்க்குப் * புத்தேளிர் ஆகுவரே 10
1527 ## maṉṉu maturai * vacutevar vāzh mutalai *
nal naṟaiyūr * niṉṟa nampiyai ** vampu avizh tārk
kal navilum tol̤āṉ * kaliyaṉ ŏli vallār *
pŏṉ-ulakil vāṉavarkkup * puttel̤ir ākuvare-10

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1527. Kaliyan with arms as strong as mountains and adorned with fragrant garland dripping with honey composed ten pāsurams on the lord of beautiful Thirunaraiyur, the son of Vasudeva of everlasting northern Madhura. If devotees learn and recite these pāsurams they will become gods among the gods in the golden world of the spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு மதுரை வடமதுரையில்; வசுதேவர் வசுதேவரின்; வாழ் வாழ்க்கைக்கு; முதலை காரணமான; நல் நறையூர் நல்ல நறையூர்; நின்ற நம்பியை நின்ற நம்பியை; வம்பு மணம் மிக்க; அவிழ் தார் மாலையுடன் கூடின; கல் நவிலும் மலை போன்ற; தோளான் தோள்களையுடைய; கலியன் திருமங்கையாழ்வார்; ஒலி அருளிச்செய்த; வல்லார் பாசுரஙகளை ஓத வல்லார்; பொன் உலகில் பரமபதம் சென்று; வானவர்க்கு வானவர்க்கு; புத்தேளிர் ஆகுவரே சமமானவர்களைப்போல் ஆவர்