Chapter 8

Thirunaraiyur 5 - (மான் கொண்ட)

திருநறையூர் 5
Thirunaraiyur 5 - (மான் கொண்ட)
The āzhvār, having attained the divine darshan of Lord Thirumal at Thirunaraiyur, sings with a heart full of joy.
திருநறையூர்த் திருமாலின் திவ்விய தரிசனம் கிடைக்கப் பெற்ற ஆழ்வார் மனமகிழ்ந்து பாடுகிறார்.
Verses: 1518 to 1527
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and become a God
  • PT 6.8.1
    1518 ## மான் கொண்ட தோல் * மார்வின் மாணி ஆய் * மாவலி மண்
    தான் கொண்டு * தாளால் அளந்த பெருமானை **
    தேன் கொண்ட சாரல் * திருவேங்கடத்தானை *
    நான் சென்று நாடி * நறையூரில் கண்டேனே 1
  • PT 6.8.2
    1519 முந்நீரை முன் நாள் * கடைந்தானை * மூழ்த்த நாள்
    அந் நீரை மீன் ஆய் * அமைத்த பெருமானை *
    தென் ஆலி மேய திருமாலை எம்மானை *
    நல் நீர் சூழ் * நறையூரில் கண்டேனே 2
  • PT 6.8.3
    1520 தூ வாய புள் ஊர்ந்து வந்து * துறை வேழம் *
    மூவாமை நல்கி * முதலை துணித்தானை **
    தேவாதிதேவனைச் * செங் கமலக் கண்ணானை *
    நாவாய் உளானை * நறையூரில் கண்டேனே 3
  • PT 6.8.4
    1521 ஓடா அரி ஆய் * இரணியனை ஊன் இடந்த *
    சேடு ஆர் பொழில் சூழ் * திருநீர்மலையானை **
    வாடா மலர்த் துழாய் * மாலை முடியானை *
    நாள்தோறும் நாடி * நறையூரில் கண்டேனே 4
  • PT 6.8.5
    1522 கல் ஆர் மதிள் சூழ் * கதி இலங்கைக் கார் அரக்கன் *
    வல் ஆகம் கீள * வரி வெம் சரம் துரந்த
    வில்லானை ** செல்வ விபீடணற்கு * வேறாக *
    நல்லானை நாடி * நறையூரில் கண்டேனே 5
  • PT 6.8.6
    1523 உம்பர் உலகோடு * உயிர் எல்லாம் உந்தியில் *
    வம்பு மலர்மேல் * படைத்தானை மாயோனை **
    அம்பு அன்ன கண்ணாள் * அசோதை தன் சிங்கத்தை *
    நம்பனை நாடி * நறையூரில் கண்டேனே 6
  • PT 6.8.7
    1524 கட்டு ஏறு நீள் சோலைக் * காண்டவத்தைத் தீ மூட்டி
    விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை **
    மட்டு ஏறு கற்பகத்தை * மாதர்க்கு ஆய் * வண் துவரை
    நட்டானை நாடி * நறையூரில் கண்டேனே 7
  • PT 6.8.8
    1525 மண்ணின் மீ பாரம் கெடுப்பான் * மற மன்னர் *
    பண்ணின்மேல் வந்த * படை எல்லாம் பாரதத்து **
    விண்ணின் மீது ஏற * விசயன் தேர் ஊர்ந்தானை *
    நண்ணி நான் நாடி * நறையூரில் கண்டேனே 8
  • PT 6.8.9
    1526 ## பொங்கு ஏறு நீள் சோதிப் * பொன் ஆழி தன்னோடும் *
    சங்கு ஏறு கோலத் * தடக் கைப் பெருமானை **
    கொங்கு ஏறு சோலைக் * குடந்தைக் கிடந்தானை *
    நம் கோனை நாடி * நறையூரில் கண்டேனே 9
  • PT 6.8.10
    1527 ## மன்னு மதுரை * வசுதேவர் வாழ் முதலை *
    நல் நறையூர் * நின்ற நம்பியை ** வம்பு அவிழ் தார்க்
    கல் நவிலும் தோளான் * கலியன் ஒலி வல்லார் *
    பொன் உலகில் வானவர்க்குப் * புத்தேளிர் ஆகுவரே 10