PT 6.8.9

திருக்குடந்தைக் கிடந்தவனைக் கண்டேன்

1526 பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிதன்னோடும் *
சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை *
கொங்கேறுசோலைக் குடந்தைக்கிடந்தானை *
நங்கோனைநாடி நறையூரில்கண்டேனே. (2)
1526 ## pŏṅku eṟu nīl̤ cotip * pŏṉ āzhi-taṉṉoṭum *
caṅku eṟu kolat * taṭak kaip pĕrumāṉai **
kŏṅku eṟu colaik * kuṭantaik kiṭantāṉai *
nam koṉai nāṭi * naṟaiyūril kaṇṭeṉe-9

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1526. The lord, our king, carries a golden discus in his right hand that spreads light everywhere and in his left hand he holds a conch that brings him victory in battle. He stays in Thirukkudandai filled with groves dripping with honey. I searched for my king and saw him in Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு ஏறு பொங்கும்; நீள் சோதி ஒளி பொருந்திய; பொன் அழகிய; ஆழி சக்கரத்தை; தன்னோடும் உடையவனும்; சங்கு ஏறு கோல அழகிய சங்கையும்; தடக் கைப் கையிலுடைய; பெருமானை பெருமானை; கொங்கு ஏறு தேன் நிறைந்த; சோலை சோலைகளையுடைய; குடந்தைக் திருக்குடந்தையில்; கிடந்தானை இருப்பவனை; நம் கோனை நம்பெருமானை; நாடி தேடிச் சென்று; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே