Chapter 4

Young girls draw a circle to see whether their love will be successful - (தெள்ளியார்)

கூடல் இழைத்தல்
Young girls draw a circle to see whether their love will be successful - (தெள்ளியார்)
"It is customary for those with anxious thoughts to seek omens to know if their desires will be fulfilled. One such method involves drawing a circle and placing several spirals within it. If, upon counting, the spirals are even, the desire will be fulfilled. If they are odd, it will not. This is one form of seeking an omen. A cowherd girl did this, + Read more
மனக்கவலை கொண்டவர் தம் எண்ணம் நிறைவேறுமா என்று அறிவதற்குக் குறி பார்ப்பது வழக்கம். வட்டமாகக் கோடிட்டு அதனுள் பல சுழிகளைப் போடுவது. பிறகு அவற்றை எண்ணிப் பார்க்கும்போது இரட்டையாக இருந்தால் எண்ணம் நிறைவேறும். ஒற்றையாக இருந்தால் நிறைவேறாது. இவ்வாறு பார்ப்பதும் ஒரு குறி. ஓர் ஆயர்மகள் இவ்வாறு + Read more
Verses: 534 to 544
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 4.1

534 தெள்ளியார்பலர் கைதொழுந்தேவனார் *
வள்ளல் மாலிருஞ்சோலைமணாளனார் *
பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிட *
கொள்ளுமாகில் நீகூடிடுகூடலே (2)
534 ## தெள்ளியார் * பலர் கைதொழும் தேவனார் *
வள்ளல் * மாலிருஞ்சோலை மணாளனார் **
பள்ளி கொள்ளும் இடத்து * அடி கொட்டிட *
கொள்ளுமாகில் * நீ கூடிடு கூடலே (1)
534 ## tĕl̤l̤iyār * palar kaitŏzhum tevaṉār *
val̤l̤al * māliruñcolai maṇāl̤aṉār **
pal̤l̤i kŏl̤l̤um iṭattu * aṭi kŏṭṭiṭa *
kŏl̤l̤umākil * nī kūṭiṭu kūṭale (1)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

534. He, the highest god worshipped by all good people, is the generous Azhagiya Manālan of Thirumālirunjolai. If you want us to press his feet when he sleeps, O kūdal, you should come together. Come and join the place you started. (Kūdidu kūdale).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூடலே! கூடல் தெய்வமே!; தெள்ளியார் தெளிந்த பக்தர்கள்; பலர் பலர்; கைதொழும் கையாற வணங்கும்; தேவனார் பிரானான; வள்ளல் வள்ளல்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ் சோலையிலே; மணாளனார் உள்ள மணவாளப் பெருமானாய்; பள்ளி கொள்ளும் பள்ளி கொண்டுள்ள; இடத்து இடத்திலே; அடி அவனது திருவடிகளை; கொட்டிட நான் பிடிக்கும்படியாக; கொள்ளும் அவன் திரு உள்ளம்; ஆகில் பற்றுவானாகில்; நீ கூடிடு நீ கூட வேண்டும்

NAT 4.2

535 காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் *
வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் *
ஓட்டராவந்து என்கைப்பற்றி * தன்னொடும்
கூட்டுமாகில் நீகூடிடுகூடலே. (2 )
535 ## காட்டில் வேங்கடம் * கண்ணபுர நகர் *
வாட்டம் இன்றி * மகிழ்ந்து உறை வாமனன் **
ஓட்டரா வந்து * என் கைப் பற்றி தன்னொடும் *
கூட்டு மாகில் * நீ கூடிடு கூடலே (2)
535 ## kāṭṭil veṅkaṭam * kaṇṇapura nakar *
vāṭṭam iṉṟi * makizhntu uṟai vāmaṉaṉ **
oṭṭarā vantu * ĕṉ kaip paṟṟi taṉṉŏṭum *
kūṭṭu mākil * nī kūṭiṭu kūṭale (2)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

535. He, who took the form of Vāmanā resides happily in the forest in Thiruvenkatam and in Thiru Kannapuram. O kūdal, if He comes here, holds my hands and embraces me, you should come together. Come and join the place you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காட்டில் காட்டிலுள்ள; வேங்கடம் வேங்கடமலையிலும்; கண்ணபுர திருக்கண்ணபுர; நகர் நகரத்திலும்; வாட்டம் இன்றி மனக்குறையின்றி; மகிழ்ந்து மகிழ்ந்து; உறை வாசம் செய்யும்; வாமனன் வாமநாவதாரம் செய்தவன்; ஓட்டரா வந்து ஓடிவந்து; என் கைப்பற்றி என் கையைப் பிடித்து; தன்னோடும் தன்னோடு; கூட்டுமாகில் அணைத்துக் கொள்வானாகில்; நீ கூடிடு நீ அவனோடு; கூடலே சேர்ந்திருக்க செய்திடு

NAT 4.3

536 பூமகன்புகழ்வானவர் போற்றுதற்
காமகன் * அணிவாணுதல் தேவகி
மாமகன் * மிகுசீர் வசுதேவர்தம்
கோமகன்வரில் கூடிடுகூடலே.
536 பூ மகன் புகழ் வானவர் * போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் * தேவகி
மா மகன் ** மிகு சீர் வசுதேவர்தம் *
கோமகன் வரில் * கூடிடு கூடலே (3)
536 pū makaṉ pukazh vāṉavar * poṟṟutaṟku
āmakaṉ aṇi vāṇutal * tevaki
mā makaṉ ** miku cīr vacutevartam *
komakaṉ varil * kūṭiṭu kūṭale (3)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

536. He, the dear son of Devaki with a shining forehead and the wonderful son of famous Vasudeva is praised by Nānmuhan who stays on a lotus and by the other gods. O kūdal, if you want that king to come to see us, you should come together. Come and join the place you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூமகன் பூவிற் பிறந்த பிரமனும்; வானவர் வானவர்களும்; புகழ் புகழ்ந்து; போற்றுதற்கு போற்றுவதற்கு; ஆமகன் அணி தகுந்த பிரானாய்; வாணுதல் அழகிய நெற்றியையுடைய; தேவகி தேவகியின்; மா மகன் சீரிய புத்திரனாய்; மிகு சீர் மிகுந்த குணவானான; வசுதேவர் தம் வசுதேவரின்; கோமகன் மாட்சிமை மிக்க புத்திரன்; வரில் வருவானாகில்; கூடிடு அவனோடு சேர்ந்திருக்க; கூடலே செய்திடு

NAT 4.4

537 ஆய்ச்சிமார்களும் ஆயருமஞ்சிட *
பூத்தநீள்கடம்பேறிப் புகப்பாய்ந்து *
வாய்த்தகாளியன்மேல் நடமாடிய *
கூத்தனார்வரில் கூடிடுகூடலே.
537 ஆய்ச்சிமார்களும் * ஆயரும் அஞ்சிட *
பூத்த நீள் * கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து **
வாய்த்த காளியன்மேல் * நடம் ஆடிய *
கூத்தனார் வரில் * கூடிடு கூடலே (4)
537 āyccimārkal̤um * āyarum añciṭa *
pūtta nīl̤ * kaṭampu eṟip pukap pāyntu **
vāytta kāl̤iyaṉmel * naṭam āṭiya *
kūttaṉār varil * kūṭiṭu kūṭale (4)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

537. He climbed and danced on the tall blooming Kadamba tree and jumped into the pond to dance on the heads of strong Kālingan. O kūdal, if you want that dancer to come to me, you should come together. Come and join the place you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆய்ச்சிமார்களும் ஆய்ச்சிமார்களும்; ஆயரும் அஞ்சிட ஆயர்களும் அச்சமடைய; பூத்த நீள் பூத்து வளர்ந்திருந்த; கடம்பு ஏறி கடம்ப மரத்தில் ஏறி; புகப் பாய்ந்து நீருக்குள் பாய்ந்து; வாய்த்த காளியன் மேல் காளியன்மீது; நடம் ஆடிய நடனமாடிய; கூத்தனார் கூத்தனான பிரான்; வரில் வரக்கூடுமாகில்; கூடிடு அவனோடு; கூடலே சேர்ந்திருக்க செய்திடு

NAT 4.5

538 மாடமாளிகை சூழ்மதுரைப்பதி
நாடி * நந்தெருவின் நடுவேவந்திட்டு *
ஓடைமாமதயானை யுதைத்தவன் *
கூடுமாகில் நீ கூடிடுகூடலே.
538 மாட மாளிகை சூழ் * மதுரைப் பதி
நாடி * நம் தெருவின் நடுவே வந்திட்டு **
ஓடை மா * மத யானை உதைத்தவன் *
கூடுமாகில் * நீ கூடிடு கூடலே (5)
538 māṭa māl̤ikai cūzh * maturaip pati
nāṭi * nam tĕruviṉ naṭuve vantiṭṭu **
oṭai mā * mata yāṉai utaittavaṉ *
kūṭumākil * nī kūṭiṭu kūṭale (5)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

538. He killed the elephant Kuvalayāpeedam whose forehead was decorated with an ornament. If you want him to come to the middle of our street in Madhura surrounded by big palaces and embrace us, O kūdal, you should come together. Come and join the place you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓடை நெற்றியில் பட்டத்தையுடைத்தாய்; மா மத மதம் மிக்க; யானை குவலயாபீட யானையை; உதைத்தவன் உதைத்த பிரான்; மாட மாட; மாளிகை மாளிகைகளாலே; சூழ் சூழ்ந்த; மதுரை பதி மதுரை நகரிலே; நாடி நம்மைத் தேடிக்கொண்டு; நம் தெருவின் நம் வீதியின்; நடுவே வந்திட்டு நடுவிலே; கூடுமாகில் வருவானாகில்; நீ கூடிடு நீ அவனோடு; கூடலே சேர்ந்திருக்க செய்திடு

NAT 4.6

539 அற்றவன் மருதம்முறியநடை
கற்றவன் * கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் * திகழும் மதுரைப்பதி *
கொற்றவன்வரில் கூடிடுகூடலே.
539 அற்றவன் * மருதம் முறிய நடை
கற்றவன் * கஞ்சனை * வஞ்சனையிற்
செற்றவன் ** திகழும் மதுரைப் பதி *
கொற்றவன் வரில் * கூடிடு கூடலே (6)
539 aṟṟavaṉ * marutam muṟiya naṭai
kaṟṟavaṉ * kañcaṉai * vañcaṉaiyiṟ
cĕṟṟavaṉ ** tikazhum maturaip pati *
kŏṟṟavaṉ varil * kūṭiṭu kūṭale (6)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

539. He does not have any desires. He had just learned to walk, when he killed the Asuras who came as marudam trees, and he killed Kamsan with his ploys. He is the victorious king of shining Madhura. O kūdal, if you want him to come here to us, you should come together. Come and join the place where you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அற்றவன் என்னை அடைய அவதரித்து; மருதம் மருத மரங்கள்; முறிய முறிந்திட; நடை கற்றவன் தவழும் நடை கற்றவன்; கஞ்னை கம்சனை; வஞ்சனையில் வஞ்சனையால்; செற்றவன் அழித்தவனாய்; திகழும் விளங்குகின்ற; மதுரைப் பதி மதுரை நகருக்கு; கொற்றவன் அரசனான பிரான்; வரில் வருவானாகில்; நீ கூடிடு நீ அவனோடு சேர்ந்திருக்க; கூடலே செய்திடு

NAT 4.7

540 அன்றின்னாதனசெய் சிசுபாலனும் *
நின்றநீள்மருதும் மெருதும்புள்ளும் *
வென்றிவேல்விறல் கஞ்சனும் வீழ * முன்
கொன்றவன்வரில் கூடிடுகூடலே.
540 அன்று இன்னாதன செய் * சிசுபாலனும் *
நின்ற நீள் * மருதும் எருதும் புள்ளும் **
வென்றி வேல் * விறல் கஞ்சனும் வீழ * முன்
கொன்றவன் வரில் * கூடிடு கூடலே (7)
540 aṉṟu iṉṉātaṉa cĕy * cicupālaṉum *
niṉṟa nīl̤ * marutum ĕrutum pul̤l̤um **
vĕṉṟi vel * viṟal-kañcaṉum vīzha * muṉ
kŏṉṟavaṉ varil * kūṭiṭu kūṭale (7)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

540. The lord defeated the wicked Shishupālan, killed the Asurans when they came as tall marudu trees, the seven bulls, the bird, and the heroic Kamsan who carried a victorious spear. O kūdal, if you want that victorious hero to come to us, you should come together. Come and join the place where you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்னொரு காலத்தில்; இன்னாதன கெடுதல்களை; செய் செய்து வந்த; சிசுபாலனும் சிசுபாலனும்; நின்ற வழி நடுவே நின்ற; நீள் பெரிய; மருதும் மருதமரங்களும்; எருதும் ஏழு எருதுகளும்; புள்ளும் பகாசுரனும்; வென்றி வேல் வெற்றி வேல் தாங்கிய; விறல் கஞ்சனும் பலம் மிக்க கம்சனும்; வீழ வீழ்ந்திட; முன் கொன்றவன் மாய்த்த பிரான்; வரில் வரக்கூடுமாகில்; நீ கூடிடு நீ அவனோடு சேர்ந்திருக்க; கூடலே செய்திடு

NAT 4.8

541 ஆவலன்புடையார்தம் மனத்தன்றி
மேவலன் * விரைசூழ் துவராபதிக்
காவலன் * கன்றுமேய்த்து விளையாடும் *
கோவலன்வரில் கூடிடுகூடலே.
541 ஆவல் அன்பு உடையார் தம் * மனத்து அன்றி
மேவலன் * விரை சூழ் * துவராபதிக்
காவலன் ** கன்று மேய்த்து விளையாடும் *
கோவலன் வரில் * கூடிடு கூடலே (8)
541 āval aṉpu uṭaiyār tam * maṉattu aṉṟi
mevalaṉ * virai cūzh * tuvarāpatik
kāvalaṉ ** kaṉṟu meyttu vil̤aiyāṭum *
kovalaṉ varil * kūṭiṭu kūṭale (8)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

541. The protector of flourishing Dwaraka who grazes the cows and plays with the cowherds does not enter the minds of those who do not love Him. O kūdal, if He comes to us, you should come together. Come and join the place where you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆவல் ஆவலையும்; அன்பு அன்பையும்; உடையார் உடையவர்களுடைய; தம் மனத்து நெஞ்சு தவிர; அன்றி வேறு இடத்திலும்; மேவலன் செல்லாதவனும்; விரை சூழ் நன் மணம் சூழ்ந்த; துவராபதி துவாரகாபுரியின்; காவலன் பாதுகாவலனுமான; கன்று மேய்த்து கன்றுகளை மேய்த்து; விளையாடும் விளையாடும்; கோவலன் கோபாலன்; வரில் வரக்கூடுமாகில்; நீ கூடிடு நீ அவனோடு சேர்ந்திருக்க; கூடலே செய்திடு

NAT 4.9

542 கொண்டகோலக் குறளுருவாய்ச்சென்று *
பண்டுமாவலிதன் பெருவேள்வியில் *
அண்டமும்நிலனும்அடியொன்றினால் *
கொண்டவன்வரில் கூடிடுகூடலே.
542 கொண்ட கோலக் * குறள் உருவாய்ச் சென்று *
பண்டு மாவலிதன் * பெரு வேள்வியில் **
அண்டமும் நிலனும் * அடி ஒன்றினால் *
கொண்டவன் வரில் * கூடிடு கூடலே (9)
542 kŏṇṭa kolak * kuṟal̤ uruvāyc cĕṉṟu *
paṇṭu māvalitaṉ * pĕru vel̤viyil **
aṇṭamum nilaṉum * aṭi ŏṉṟiṉāl *
kŏṇṭavaṉ varil * kūṭiṭu kūṭale (9)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

542. In ancient times he went to the sacrifice of king Mahābali as a dwarf, wearing the sacred thread and measured the earth with one foot and the sky with the other. O kūdal, if He comes here to us, you should come together. Come and join the place where you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்டு முற்காலத்திலே; கோலம் பூணூல் பவித்திரம்; கொண்ட என கோலம் பூண்டு; குறள் உருவாய் வாமன ரூபத்துடன்; சென்று சென்று; மாவலி தன் மஹாபலியின்; பெரு பெரிய; வேள்வியில் யாகத்தில் சென்று; அண்டமும் மேல் கீழ்; நிலனும் உலகங்களை; அடி ஒன்றினால் ஒவ்வோர் அடியாலே; கொண்டவன் அளந்த பிரான்; வரில் வருவானாகில்; நீ கூடிடு நீ அவனோடு சேர்ந்திருக்க; கூடலே செய்திடு

NAT 4.10

543 பழகுநான்மறையின்பொருளாய் * மத
ஒழுகுவாரண முய்யவளித்த * எம்
அழகனார் அணியாய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் * வரில் கூடிடுகூடலே.
543 பழகு நான்மறையின் பொருளாய் * மதம்
ஒழுகு வாரணம் * உய்ய அளித்த ** எம்
அழகனார் * அணி ஆய்ச்சியர் சிந்தையுள் *
குழகனார் வரில் * கூடிடு கூடலே (10)
543 pazhaku nāṉmaṟaiyiṉ pŏrul̤āy * matam
ŏzhuku vāraṇam * uyya al̤itta ** ĕm
azhakaṉār * aṇi āycciyar cintaiyul̤ *
kuzhakaṉār varil * kūṭiṭu kūṭale (10)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

543. He is our lord of Thirumālirunjolai, the essence of the four Vedās, the handsome One whom the cowherd women loved in their hearts, the One who saved Gajendra, the elephant dripping with rut, from the mouth of the crocodile. O kūdal, if you want him to come here to us, you should come together. Come and join the place where you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பழகு அநாதியான; நான்மறையின் நான்கு வேதங்களின்; பொருளாய் உட்பொருளாயிருப்பவன்; மதம் ஒழுகு மத நீர் பெருகும்; வாரணம் யானை; உய்ய அளித்த உய்ந்திடச் செய்த; எம் அழகனார் எமது அழகுபிரான்; அணி ஆய்ச்சியர் அழகிய கோபியர்களின்; சிந்தையுள் மனதிலேயே; குழகனார் உள்ள பிரான்; வரில் வரக்கூடுமாகில்; நீ கூடிடு நீ அவனோடு சேர்ந்திருக்க; கூடலே செய்திடு

NAT 4.11

544 ஊடல்கூடல் உணர்தல்புணர்தலை *
நீடுநின்ற நிறைபுகழாய்ச்சியர் *
கூடலைக் குழற்கோதைமுன்கூறிய *
பாடல்பத்தும்வல்லார்க்கு இல்லைபாவமே.
544 ## ஊடல் கூடல் * உணர்தல் புணர்தலை *
நீடு நின்ற * நிறை புகழ் ஆய்ச்சியர் **
கூடலைக் * குழல் கோதை முன் கூறிய *
பாடல் பத்தும் வல்லார்க்கு * இல்லை பாவமே (11)
544 ## ūṭal kūṭal * uṇartal puṇartalai *
nīṭu niṉṟa * niṟai pukazh āycciyar **
kūṭalaik * kuzhal kotai muṉ kūṟiya *
pāṭal pattum vallārkku * illai pāvame (11)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

544. The poet Vishnuchithan Kodai composed ten pāsurams about how the curly-haired cowherd women praised the famous god of the world and played kūdal so that their love would be successful. They longed to love, fight with, feel and embrace Him. If devotees learn these pāsurams well they will not have the results of bad karmā in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊடல் ஊடலோடே; கூடல் கூடியிருத்தல்; உணர்தல் குறைகளை உணர்தல்; புணர்தலை முடிவில் கலத்தல்; நீடு ஆகியவற்றில் நீடித்து; நின்ற நின்ற; புகழ் மிக்க புகழையுடைய; ஆய்ச்சியர் ஆய்ச்சியர்; கூடலை கூடலைப் பற்றி; குழல் அழகிய கூந்தலையுடைய; கோதை ஆண்டாள்; முன் கூறிய முன் அருளிச்செய்த; பாடல் பத்தும் பத்துப் பாடல்களையும்; வல்லார்க்கு ஓதவல்லவர்க்கு; பாவமே பெருமானைப் பிரிந்திருக்கும் பாவம்; இல்லை இல்லை