NAT 4.4

காளிங்க நர்த்தனம் செய்தவன் வருவானா?

537 ஆய்ச்சிமார்களும் ஆயருமஞ்சிட *
பூத்தநீள்கடம்பேறிப் புகப்பாய்ந்து *
வாய்த்தகாளியன்மேல் நடமாடிய *
கூத்தனார்வரில் கூடிடுகூடலே.
537 āyccimārkal̤um * āyarum añciṭa *
pūtta nīl̤ * kaṭampu eṟip pukap pāyntu **
vāytta kāl̤iyaṉmel * naṭam āṭiya *
kūttaṉār varil * kūṭiṭu kūṭale (4)

Ragam

Kēdāra / கேதார

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

537. He climbed and danced on the tall blooming Kadamba tree and jumped into the pond to dance on the heads of strong Kālingan. O kūdal, if you want that dancer to come to me, you should come together. Come and join the place you started. Kūdidu kūdale.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆய்ச்சிமார்களும் ஆய்ச்சிமார்களும்; ஆயரும் அஞ்சிட ஆயர்களும் அச்சமடைய; பூத்த நீள் பூத்து வளர்ந்திருந்த; கடம்பு ஏறி கடம்ப மரத்தில் ஏறி; புகப் பாய்ந்து நீருக்குள் பாய்ந்து; வாய்த்த காளியன் மேல் காளியன்மீது; நடம் ஆடிய நடனமாடிய; கூத்தனார் கூத்தனான பிரான்; வரில் வரக்கூடுமாகில்; கூடிடு அவனோடு; கூடலே சேர்ந்திருக்க செய்திடு

Detailed WBW explanation

O Circle! He leapt from the towering kadamba tree, adorned with blossoms, such that His divine feet touched the waters of Yamunā, instilling awe among the cowherd girls and boys. He, the master of dance, gracefully danced upon the head of the fortunate serpent Kāliya, blessed by the touch of Emperumān's sacred feet. Should such Kaṇṇaṉ grace my presence, may you, O Circle, complete and facilitate this divine occurrence.